Header Ads



இராணுவத்தின் மீது 5 போர்க்குற்றங்களும், புலிகள் மீது 6 போர்க்குற்றங்களும் உள்ளன - சுமந்திரன்

47 நாடுகள் அங்கம் வகிக்கிற ஒரு சபை மாத்திரமே ஐக்கிய நாடுகள் சபை. ஐக்கிய நாடுகள் சபையில் நடைப்பெற்றது வழக்கல்ல, அது ஒரு நீதிமன்றமும் அல்ல.

அது ஒரு சபை மாத்திரமே. அந்த சபையால் தீர்வு மாத்திரமே தர முடியும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

இலங்கை தமிழரசுக்கட்சி கல்குடா தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பொ.மாணிக்கவாசகம் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட சபை முன்னாள் தலைவர் எஸ்.சம்பந்தமூர்த்தி ஆகியோரின் நினைவு தின நிகழ்வு இன்று இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கூறுகையில்,

நாற்பது வருடங்களாக நாம் இக்கட்டான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இன்று தமிழ் ஊடகங்களில் விசேடமாக பத்திரிகைகளில் ஜெனீவா தொடர்பான விடயங்களே காணப்படுகின்றன.

ஆனால் 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி போர் நிறைவுற்ற போது பாரிய மனித உரிமை மீறல்கள் மற்றும் பாரிய சர்வதேச குற்றங்களும் இந்த நாட்டில் நடைப்பெற்றிருந்ததாக பல முறைபாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு சென்றிருந்தது.

இந்த முறைப்பாடுகளை தொடர்பாக ஆராய்ந்த இதன் உறுப்பு நாடுகள் விசேடமாக இது ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பாக உறுப்பு நாடுகள் கூட்டத்தொடர் ஒன்றினை நடத்துவதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.

இந்த கூட்டத்தொடர் 2006 மே மாதமே நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது. இதன்போது ஜனாதிபதியால் கண்டியில் வைத்து கொடுக்கப்பட்ட முக்கிய மூன்று வாக்குறுதிகளின் காரணமாக உறுப்பு நாடுகள் இலங்கையின் பக்கம் சார்ந்தன.

இலங்கையை கண்டிக்க கூட்டப்பட்ட கூட்டத்தொடரில் இலங்கை பாராட்டு பெற்றது. இந்த பாராட்டுக்கு ஜனாதிபதியால் கொடுக்கப்பட்ட மூன்று வாக்குறுதிகளுமே காரணமாக அமைந்தது

ஆனால் சர்வதேச சமூகத்திற்கு வழங்குகின்ற வாக்குறுதிகள் கட்டாயமாக நிறைவேற்றப்பட வேண்டிவை. அவை நாட்டு மக்களுக்கு வழங்கும் வாக்குறுதிகளைப் போன்றவை அல்ல.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கையில் யுத்தக்குற்றச்சாட்டுகள் நடைபெற்றதற்கான சான்றுகள் உள்ளன. அரச படைகளினால் மனிதாபிமான சட்டத்திற்கு எதிராக ஐந்து குற்றங்கள் நிரல்படுத்தப்பட்டுள்ளன.
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக ஆறு குற்றங்கள் நிரல்படுத்தப்பட்டிருந்தன. அதற்கு போதிய சான்றுகள் இருக்கின்றது. இது தொடர்பில் சர்வதேச விசாரணை செய்யப்படவேண்டும் என பரிந்துரைக்கப்பட்டது.

1 comment:

  1. அழிவை நாட்டுக்கு பரிசளித்த புலிகள் இப்போது இல்லை. அவர்கள் 6 செய்தால் என்ன 60 செய்தால் என்ன? உங்கள் குறி இராணுவம் அல்லவா. அவர்கள் இந்த நாட்டுக்கு சமாதானத்தை கொண்டு வந்தது போதாதா? உங்கள் இழிவு எண்ணம் வெட்கப்படத்தக்கது.

    ReplyDelete

Powered by Blogger.