Header Ads



முஸ்லிம் பகுதியில் 4 பில்லியன் ரூபாவில், பாரிய மதுபானத் தொழிற்சாலை - 19 ஏக்கர் ஒதுக்கீடு

சர்ச்சைக்குரிய முறிகள் கொடுக்கல் வாங்கல் விவகாரத்துடன் தொடர்புடைய பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவன உரிமையாளர் அர்ஜூன் அலோசியசுக்கு சொந்தமான டபிள்யூ.எம்.மென்டிஸ் மதுபான உற்பத்தி நிறுவனம், மட்டக்களப்பு – கல்குடாவில் மதுபான நிலையம் ஒன்றை நிர்மாணித்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மதுபான உற்பத்தி நிறுவனத்திற்கு 2017 வரவு செலவுத்திட்டத்திற்கு புறம்பாக பெருமளவு வரி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக இன்றைய சண்டேடைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

அர்ஜூன் அலோசியசுக்கு சொந்தமான டபிள்யூ.எம்.மென்டிஸ் மதுபான உற்பத்தி நிறுவனத்திற்கு இந்த வரவு செலவுத்திட்டத்தில் 100 வீத மூலதன கொடுப்பனவு உரித்தாகலாம் என சண்டேடைம்ஸ் முதல்பக்கத்தில் வெளியான செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கல்குடாவில் நிர்மாணிக்கப்பட்டுவரும் புதிய மதுபான உற்பத்தி சாலை நான்கு பில்லியன் ரூபா பெறுமதி வாய்ந்தது என்றும் அதற்கான முதலீட்டிற்காக இந்த நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்ட பத்திரிகை செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டபிள்யூ.எம்.மென்டிஸ் மதுபான உற்பத்தி நிறுவனம், ஈ.என்.ஏ வை மதுபான உற்பத்திக்காக 2017 வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னர் அனுமதி பெற்றிருந்ததாகவும் சண்டே டைம்ஸ் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலின் போது இலங்கையில் மதுபானம் மற்றும் புகைத்தலை நீக்குவதாக வாக்குறுதியளித்து 18 வாரங்களுக்கு கல்குடாவில் மதுபான உற்பத்தி தொழிற்சாலை நிர்மாணிப்பதற்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாகவும் சண்டே டைம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.

ஈ.என்.ஏ வை மதுபான தொழிற்சாலைக்கான உத்தேச திட்டமாக இதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், அதற்கு இரண்டு நாட்களின் பின்னர் மதுவரி திணைக்கள அனுமதி கிடைத்துள்ளதாகவும், 2015 மே 13 ஆம் திகதி அரச நிதிக்கொள்கை திணைக்களத்தினால் மதுவரி திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக சண்டே டைம்ஸ் கூறியுள்ளது.

இந்த அனுமதியை வழங்கியுள்ள இரண்டு திணைக்களங்களும் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் கீழ் இயங்கும் நிறுவனங்கள் என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

19 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த மதுபான தொழிற்சாலை நிர்மாணிக்கப்படுவதுடன், கல்குடா கோறளைப்பற்று பிரதேச சபையின் பணிப்புரைக்கமைய அதன் நிர்மாணப்பணிகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் சண்டே டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக நியூஸ் லைன் விசேட தொகுப்பில் கலந்து கொண்டு மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க கருத்துக்களை கூறியிருந்தார்.

 கல்குடாவில் அதிகளவு முஸ்லிம்கள் வாழ்ந்து வருவதும், அங்கு முஸ்லிம் பாராளுமன்ற பிரதிநித்துவம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

3 comments:

  1. Where is minister Ameer Ali??

    ReplyDelete
    Replies
    1. ஏனைய முஸ்லிம் அரசியல்வாதிகளின் குறைகளை தேடி சென்று இருப்பார். முஸ்லிம் அரசியல்வாதிகள் காலம் பதவியை தேடி செல்வதிலும் அடுத்த முஸ்லிம் அரசியல்வாதிகளின் குறைகளை தேடி செல்வதிலுமே கழிகிறது.

      Delete
  2. he is take money form Ravi and ARJUN

    ReplyDelete

Powered by Blogger.