Header Ads



மலேசியாவில் தமிழர்களான 2 சகோதரர்கள் தூக்கிலிடப்பட்டனர்

கொலை குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த மலேசியாவின் பத்துமலை பிரதேசத்தை சேர்ந்த தமிழர்களான இரண்டு சகோதரர்கள் நேற்று தூக்கிலிடப்பட்டதாக சர்வதேச மன்னிப்புச் சபையின் மலேசிய கிளை தெரிவித்துள்ளது.

45 வயதான ரமேஷ் மற்றும் 40 வயதான சுதர் ஆகியோர இவ்வாறு கஜாங் சிறையில் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

இவர்கள் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனை தளர்த்த கோரி கருணை மனு தாக்கல் செய்து காத்திருந்த நிலையில், அவர்கள் தூக்கிலிடப்பட்டதை மன்னிப்புச் சபை கடுமையாக சாடியுள்ளது.

கைதிகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதாவது நாளைய தினம் தூக்கிலிடப்பட உள்ளதாக அவர்களின் குடும்பத்தினருக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

எனினும் அந்த தகவல் தவறானது எனவும் நேற்று அதிகாலை அவர்கள் தூக்கிலிடப்பட்டுள்ளதாகவும் சர்வதேச மன்னிப்புச் சபையின் மலேசிய கிளையின் அதிகாரி ஷாமினி தர்ஷினி கூறியுள்ளார்.

மலேசியாவில் முதல்முறையாக அறிவிக்கப்பட்ட தினத்திற்கு முன்பாக இந்த தூக்கிலிட்ட சம்பவம் நடந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2006ம் ஆண்டு பெப்வரி 4ம் திகதி கிருஷ்ணன் இராமன் என்பவரை கொலை செய்த குற்றத்திற்காக மலேசிய நீதிமன்றம் 2010ம் ஆண்டு ஏப்ரல் மாதம் இந்த சகோதரர்களுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தது.

எனினும் தாம் நிரபராதிகள் என சகோதரர்கள் கூறி வந்தனர்.இவர்கள் தமது சட்டத்தரணி மூலம் மன்னிப்புச் சபைக்கு கருணை மனுவை தாக்கல் செய்திருந்தனர்.

அதில் கொல்லப்பட்ட கிருஷ்ணன் இராமனின் மனைவி, குற்றவாளிகளின் மரண தண்டனை ஆயுள் தண்டனை குறைக்குமாறு வழங்கிய பரிந்துரை கடிதமும் இணைக்கப்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.