Header Ads



காத்தான்குடியில் மேற்கொள்ளப்பட்டுள்ள 2 முக்கிய தீர்மானங்கள்

அமை­திக்கும் சமா­தா­னத்­திற்கும் குந்­தகம் ஏற்­ப­டுத்தும் வகையில் காத்­தான்­குடி பிர­தே­சத்தில் பொது இடங்­களில் மற்றும் வீதி­யோ­ரங்­களில் மார்க்­கப்­ பி­ர­சாரக் கூட்­டங்­களை நடத்­து­வ­தற்கு தடை விதிப்­ப­தென தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.

காத்­தான்­கு­டியில் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரண்டு குழுக்­க­ளுக்­கி­டையில் நடை­பெற்ற மோதல் சம்­ப­வத்­தை­ய­டுத்து அது தொடர்­பாக ஆராயும் விஷேட மாநாடு ஒன்று நேற்று புதன்­கி­ழமை  காத்­தான்­குடி பிர­தேச செய­லக மண்­ட­பத்தில் நடை­பெற்­றது.

 காத்­தான்­குடி பிர­தேச செய­லாளர் எஸ்.எச்.முஸம்­மிலின் தலை­மையில் நடை­பெற்ற இந்த மாநாட்டில் காத்­தான்­குடி பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி ஏ.பி.வெத­கெ­தர மற்றும் காத்­தான்­குடி நகர சபை செய­லாளர் எஸ்.எம்.ஸபி மற்றும் உதவி பிர­தேச செய­லாளர் ஏ.சி.அகமட் அப்கர் மற்றும் காத்­தான்­குடி ஜம்இய்­யத்துல் உலமா சபை பிர­தி­நி­திகள், காத்­தான்­குடி பள்­ளி­வாசல்­களின் முஸ்லிம் நிறு­வ­னங்­களின் சம்­மே­ளன பிரதிநிதிகள், காத்­தான்­குடி வர்த்­தக சங்க பிரதிநிதிகள், கிராம உத்­தி­யோ­கத்­தர்கள் கலந்து கொண்­டனர்.

 இதன் போது காத்­தான்­கு­டியில் கடந்த (10) வெள்­ளிக்­கி­ழ­மை­யன்று இரண்டு குழுக்­க­ளுக்­கி­டையில் நடை­பெற்ற மோதல் சம்­பவம் தொடர்­பாக ஆரா­யப்­பட்­டன.

 இந்த மாநாட்டின் இறு­தியில் இரண்டு தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டன.

அதில் காத்­தான்­கு­டியில் அமை­திக்கும் சம­ாதா­னத்­திற்கும் குந்­தகம் ஏற்­ப­டுத்தும் வகையில் காத்­தான்­குடி பிர­தே­ச­ததில் பொது இடங்­களில் மற்றும் வீதி­யோ­ரங்­களில் மார்க்­கப்­பி­ர­சாரக் கூட்­டங்­களை நடாத்­து­வ­தற்கு தடை விதிப்­ப­தெ­னவும் மற்றும் அதான் சொல்­லுதல், பொது அறி­வித்­தல்கள் வாசித்தல், இரு பெரு­நாட்கள் ஆகியவைகள் தவிர்ந்த ஏனைய அனைத்து விட­யங்கள் மற்றும் வைபவங்­களின் போதும் வெளி ஒலிபெருக்கி பாவிப்­பதை முற்­றாக தடை செய்தல் என இதன் போது ஏகமன­தாக தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்­டது.

கடந்த (10)  வெள்­ளிக்­கி­ழமை காத்­தான்­கு­டியில் இடம்பெற்ற இந்த சம்­ப­வத்தில் காத்­தான்­கு­டி­யி­லுள்ள இரண்டு சிறிய குழுக்­களே சம்­பந்­தப்­பட்­டுள்­ளன.

இந்த இரண்டு சிறிய குழுக்­களின் மோதல் சம்­ப­வத்­தினால் காத்­தான்­கு­டியை வெளி­ப்பி­ர­தேசங்­க­ளிலும் மற்றும் சர்­வ­தேச ரீதி­யா­கவும் கேவ­லப்­ப­டுத்­து­வ­தற்கு சிலர் முற்சி செய்­கின்­றனர்.

இந்த சம்­ப­வங்­க­ளுக்கும் காத்­தான்­குடி மக்களுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது எனவும் இதில் காத்தான்குடியையும் காத்தான்குடியிலுள்ள பெரும்பான்மையான மக்களையும் கேவலப்படுத்தி காட்ட வேண்டாமெனவும் இதில் கலந்து கொண்ட பிரமுகர்களினால் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

3 comments:

  1. இது எல்லாம் இஸ்ரேலின் திருவிளையாடல் என்பதை முஸ்லிம் சமூகம் புரிந்து கொள்ளவில்லை.

    ReplyDelete
  2. But it happened in Kaattankudy.....??? Then what..?

    ReplyDelete
  3. Who are those two very Islamic groups? Why are these idiots fighting in the name of religion or movements? What Islam do they try to portray to the world?

    ReplyDelete

Powered by Blogger.