Header Ads



இலங்கை முஸ்லிம்களின் சார்பில், றீட்டாவிடம் 2 முக்கிய ஆவணங்கள்

இலங்கை முஸ்லிம்களின் சார்பில் 2 முக்கிய ஆவணங்கள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிறுபான்மை விவகாரங்களுக்கான பிரதிநிதி, றீட்டா ஐசக்கிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

ஜெனீவாவில் 14 ஆம் திகதி, செவ்வாய்கிழமை மனித உரிமைகள் அலுவலகத்தில் வைத்தே இந்த ஆவணங்கள் கையளிக்கப்பட்டன.

மூத்த சட்டவாளர் சிராஸ் நூர்தீன் தலைமையிலான RTT எனப்படும் முஸ்லிம் சட்டத்தரணிகள் குழு தயாரித்திருந்த 24 பக்கங்கள் அடங்கிய ஆவணத்தில், இலங்கை முஸ்லிம்களுக்கு மறுக்கப்படும் நீதி என்ற அடிப்படையில் ஒரு ஆவணம் றீட்டாவிடம் கைளிக்கப்பட்டது.

அதில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில்  பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்தும், நீதிமன்றில் வழக்குத் தொடர்ந்தும் அவை தொடர்பில் மறுக்கப்பட்ட அநீதி தொடர்பில் பட்டியலிடப்பட்டுள்ளதுடன், இதில் ஞானசாரருக்கு எதிராக பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் பட்டியலிடப்பட்டுள்ளது.

மேலும் சிறிலங்கா முஸ்லிம் கவுன்சில்  இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக பேசப்படும் வெறுப்பூட்டும் பேச்சுக்கள் தொடர்பிலும் அவற்றை நிறுத்த உடனடி நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியும்  ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் சயீட் ஹுசைனிடம் சமர்ப்பிப்பதற்காக ஒரு ஆவணத்தை தயாரித்திருந்தது. அந்த ஆவணமும் றீட்டாவிடம் கையளிக்கப்பட்டது. அதனை ஆணையாளராகிய ஹுசைனிடம் கையளிப்பதாக றீட்டா உறுதியளித்தார்.

இதனை ஊடகவியலாளர் அன்ஸிர் முஸ்லிம் கவுன்சில் மற்றும் RTT சார்பில் றீட்டா ஐசக்கிடம் கையளித்தார்.

இந்த ஆவணங்கள் தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும், ஆணையாளர் இலங்கை பற்றி வெளியிடவுள்ள அறிக்கையில் இவை உள்ளீர்க்கப்பட வேண்டுமெனவும் ஐ.நா. சிறுபான்மை விவகாரங்களுக்கான பிரதிநிதியிடம் ஊடகவியலாளர் அன்ஸிரினால் வலியுறுத்தப்பட்டது.

1 comment:

Powered by Blogger.