March 11, 2017

காத்தான்குடியில் 2 குழுக்களிடையே மோதல் - விஷேட அதிரடிப்படை பாதுகாப்பு

(பழுலுல்லாஹ் பர்ஹான்)

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி-06ம் குறிச்சி கர்பலா வீதி, அலியார் சந்தி முன்பாக   10-03-2017 நேற்று வெள்ளிக்கிழமை மாலை தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் நாம் அத்வைதிகளை 'மதம் மாறியவர்கள் என்று சொல்வதேன்? எனும் தலைப்பில் ஓரிறைக் கொள்கை விளக்க மாநாடு நடைபெற இருந்த நிலையில் அப்பகுதியில் இரண்டு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் வாள்வெட்டு மற்றும் கல்வீச்சு சம்பவங்களின் போது படுகாயமடைந்த இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர தெரிவித்தார்.

இச் சம்பவம் தொடர்பில் அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ஸஹ்றான் மௌலவி தரப்பிலான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் தரப்புக்கும்;,அப்துர் ரஊப் மௌலவி தரப்பிலான ஸூபிஸ ஸூன்னத் வல் ஜமாஅத் தரப்புக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் அப்துர் ரஊப் மௌலவி தரப்பைச் சேர்ந்தவர்களில் வாள்வெட்டுக்கு இலக்கான அபூ பக்கர் முஹம்மட் முஸப்பிர் வயது 25 என்பவர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 09ம் இலக்க விடுதியில் சிகிச்சை பெற்று வருவதாகவும், கல்வீச்சுக்கு இல்கான அபூ ஸாலிஹ் பஹ்மி வயது 36 என்பவர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், இம் மோதல் தொடர்பாக தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டு விசாரணை இடம்பெற்று வருவதாகவும் மிக விரைவில் இம் மோதலில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இரு குழுக்களிடையே மோதல் இடம்பெற்றதால் தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தின் ஏற்பாட்டில் நாம் அத்வைதிகளை 'மதம் மாறியவர்கள் என்று சொல்வதேன்? எனும் தலைப்பில் ஓரிறைக் கொள்கை விளக்க மாநாட்டை நிறுத்துமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டதற்கிணங்க மாநாடு இடை நிறுத்தப்பட்டதுடன் ,அப்பகுதிக்கு உடனடியாக விஜயம் செய்த காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர ,மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட பொலிஸ் உயரதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டனர்.

அத்தோடு மோதல் சம்பவத்தின் போது காயமடைந்த தேசிய தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஒருவர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றிருந்த நிலையில் வீடு திரும்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் இடம்பெற்ற பகுதியில் நேற்று 10 வெள்ளிக்கிழமை இரவு அதிகளவான பொலிசாரும்,பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

இந் நிலையில் மோதல் சம்பவம் தொடர்பாக தேசிய தவ்ஹீத் ஜமாஅத் தரப்பில் அதன் செயலாளரும், ஸூபிஸ ஸூன்னத் வல் ஜமாஅத்; -அப்துர் ரஊப் மௌலவி தரப்பில் டீன் வீதி,முக்கியஸ்தர்களும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மோதல் இடம்பெற்ற பகுதிக்கும்,இரு வைத்தியசாலைக்கும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறூக் விஜயம் செய்து மோதலில் பாதிக்கப்பட்டவர்களை பார்வையிட்டிருந்தார்.

மோதலில் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்ற இருவரிடமும் வாக்குமூலம் பொலிஸாரினால் பெறப்பட்டு வருவதுடன் மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஆரியபந்து வெதகெதர தலைமையிலான குழுவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


13 கருத்துரைகள்:

As ven.nanasara mentioned v have to ban this groups from Sri Lanka...!!! this jamat idiots not preaching d sunnah only they doing is dividing d Muslims...

காத்தான்குடியில் நேற்று ரவூப் மெளலவியின் குழுவிற்கும் தேசிய தெளஹீத் ஜமாத்தினருக்குமிடையில் இடம்பெற்ற வாள்வெட்டில் காயமடைந்தவரின் படமே இது!

எந்தவித பாவமுமறியாத, ஒருவரை ஒருவர் நேசிப்பதை மாத்திரம் கொள்கையாய் கொண்ட அப்பாவி முஸ்லிம்களை பிரித்து பிரச்சினை ஏற்படுத்தி இஸ்லாத்தை அழிக்க முயலும் அமெரிக்காவும் யூதர்களும் மேற்குலகமும் இலுமினாட்டிகளும்தான் இந்த பிரச்சினைக்குக் காரணம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே!

உலகில் முஸ்லிம்களிற்கு எங்கு பிரச்சினை ஏற்பட்டாலும் அதன் பின்னணியில் அமெரிக்காவும் யூதர்களும் இருக்கின்றார்கள் என்பதையும், உலகில் நடக்கும் அனைத்து விடயங்களையும் தீர்மானிப்பது இலுமினாட்டிகள்தான் என்னும் பயங்கரமான உண்மையையும் நமது முஸ்லிம் அறிஞர்கள் மிகவும் சிரமப்பட்டு ஆய்வு செய்து கண்டுபிடித்து உலகிற்கு வழங்கியிருக்கின்றனர்!

எனவே அன்புள்ள சகோதர சகோதரிகளே இந்த கேடுகெட்ட காபிர்கள் இல்லையென்றால் நாம், முஸ்லிம்கள் ஒருவருடன் ஒருவர் அன்பு சொரிந்து, பாசமழை பொழிந்து, கூடிக்குழாவி, ஒற்றமையை வழர்ப்போம் அல்லவா?? அதற்கு இந்த காத்தான்குடிச் சம்பவம் சான்றல்லவா??

Kattankudy pirachinaiku America wo,yoothano illa kaaranam...engada modenuwal...salli ku maar adikkum kootam

It is shame that terrorist organization is creating a problem in the name of original Islam.This is their "INIYA ISLAM".this noisy trouble making SLTJ must be banned in Srilanka.It is creating problem with majority community and now within Muslims.SLTJ,isis,Bokoharam,Al-shabab are creating problem and getting Saudi Money.Because of this groups world Muslims are under attack.

Muslims killing fellow Muslims is not new. It is happening all over the world and Sri Lanka is not spared. Ashif Haneefa is right. It's a well known fact that Americans and Israelis are behind all the the internal clashes between Muslims, but we cannot just point finger at Americans and Israelis and get away from our responsibilities. Muslims will have to blame themselves for falling into their traps. If Muslims are smart, no foreign force could divide their unity. Just imagine a united Islamic nations, it will be a very strong super power. As long as we refuse to settle our differences through dialogues and believe in killing our fellow Muslims, Americans and Israelis will always laugh at us through their backs.

Natinal thawheeth jamath
They are making problem .we know about thawheeth jamath .they are going on wrong way fro islamic cultural.and aqeeda.

Muslimkalukku prachchinai vanthaa matta mathaththavanukala pila solrathu valakkamapeithu

ஏன் படித்தவர்கள் தானே இவர்களுக்கு அறிவு இல்லையா?

i think ACJU sleepy, why withdrew Mr Rauf Murtad ??

It would be interesting to see what brothers Muhammed Rasheed and Mustafa Jawfer to say on this incident.

Jong Ayya

All major religions have a history of quarrels and bitter
internal disputes and disagreements but all three
Abrahamic religions are , from the inception , endlessly
carrying it on to date overtly and covertly . It is a
kind of cowardly war of all parties directly or
indirectly . If we are to neutrally look at the
situation , where was America when Aisha (RA) and Ali
(RA) faced each other in Bagdad at war of camels ?
Why did prophet Muhammad migrate to Medina and how
did he return to Macca ? All tense situations that we
call war . We should carefully study these situations
before we jump to blame outsiders for everything .
Of course outsiders are taking advantage of the
situation ! BUT REMEMBER , MOST POWERFUL WHO ARE ALSO
MORE KNOWLEDGEABLE AMONG US ABOUT REAL ISLAM ARE ALSO
WITH THE OUTSIDERS AND IN FULL AGREEMENT WITH THEM .
THEY ARE DEFINITELY LAUGHING AT US .NORMALLY ALL
PEOPLE LAUGH AT FOOLS BECAUSE FOOLS ENTERTAIN THE
AUDIAECE .

Post a Comment