Header Ads



ஆகக்கூடிய தனிநபர் வருமான மாவட்டம் கொழும்பு, 12 மாவட்டங்கள் வறுமைக்கோட்டுக்குள் கீழ்


வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மாவட்டங்களில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஆகியனவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக சனத்தொகை மற்றும் புள்ளிவிபரங்கள் திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.

வறுமைக்கோட்டு எல்லையைத் தீர்மானிக்கும், தனிநபர் ஒருவருக்கான மாத வருமான எல்லை, 2017 ஜனவரி மாதம், 4,207 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இது பெப்ரவரி மாதம், 4,229 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 4,229 ரூபாவுக்கு கீழ் தனி நபர் ஒருவரின் மாத வருமானங்கள் உள்ள மாவட்டங்கள், வறுமைக்கோட்டுக்குட்பட்டவையாக பட்டியலிடப்பட்டுள்ளன.

கொழும்பு மாவட்டம் ஆகக் கூடிய தனிநபர் வருமானம் உள்ள மாவட்டமாக கண்டறியப்பட்டுள்ளது. அங்கு தனிநபர் ஒருவரின் மாத வருமானம்,  4,396 ரூபாவாகும்.

அதையடுத்து, கம்பகா (ரூ. 4,391), களுத்துறை(ரூ 4,281),  மாத்தளை (ரூ 4,248), நுவரெலிய (ரூ. 4,266), மன்னார் (ரூ. 4,368),, வவுனியா (ரூ. 4,322), கிளிநொச்சி (ரூ. 4,288), மட்டக்களப்பு (ரூ. 4,281), திருகோணமலை (ரூ. 4,230), கேகாலை (ரூ. 4,270),  ஆகிய மாவட்டங்கள், வறுமைக்கோட்டுக்கு மேலுள்ள மாவட்டங்களாக இனங்காணப்பட்டுள்ளன.

அதேவேளை, கண்டி (ரூ. 4,222), காலி (ரூ. 4,089), மாத்தறை (ரூ. 4,063), அம்பாந்தோட்டை (ரூ. 3,895), யாழ்ப்பாணம் (ரூ. 4,169), முல்லைத்தீவு (ரூ. 4,183), அம்பாறை (ரூ. 4,197), குருணாகல (ரூ. 4,086), புத்தளம் (ரூ. 4,225), அனுராதபுர (ரூ. 4,001), பொலன்னறுவ (ரூ. 4,171), பதுளை (ரூ. 4,054), மொனராகல (ரூ. 3,843), இரத்தினபுரி (ரூ. 4,110). ஆகிய  மாவட்டங்கள் வறுமைக்கோட்டுக்குள் உள்ளவையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.

4 comments:

  1. What a joke.
    I do not see any different between Colombo and Ratnapura. The difference between Rs 4396 and Rs 4110 is Rs 286 nearly $2 or 3 meal packet. I would say all are under the poverty line.

    ReplyDelete
  2. This explanation is a political trick. Can anyone live by, 4,207 /- for an entire month..? Yes, as the previous comment.., the entire nation is under the poverty line. ( Except the blood sucking politicians )

    ReplyDelete
  3. யாழ்ப்பானம் வறுமைக்கோட்டிலா?
    கொழும்பா பர்ஸ்ட்?
    இலட்சக்கணக்கான குடும்பங்கள் ஆட்டோவில் துயிலும்!
    இந்த வருடத்தின் சிறந்த ஜோக்?

    ReplyDelete
  4. these guys don't know about the statistics so giving foolish comments

    ReplyDelete

Powered by Blogger.