Header Ads



டெங்குவுக்கு கிண்ணியாவில் 10 பேர் வபாத், அவசரநிலையை பிரகடனப்படுத்த முஸ்லிம் கவுன்சில் கோரிக்கை

திருகோணைமலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் செறிந்துவாழும் பகுதிகளில் ஒன்றான கிண்ணியாவில் டெங்குவுக்கு 10 பேர் மௌத்தாகியுள்ள நிலையில், அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தும்படி முஸ்லிம் கவுன்சில் கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த நிலைமை அபாயகரமானது என வர்ணித்த முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் இந்த அபாயத்தை தடுத்துநிறுத்த அனைத்து சக்திகளும் களத்தில் குதுpக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

சுகாதார பிரதியமைச்சராகவும், மாகாண சுகாதார அமைச்சராகவும் முஸ்லிம்கள் இருக்கையில் இவ்விடயத்தில் அசமந்தம் காண்பிக்கப்படுவது கவலைக்குரியது எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியதுடன், பிரதேச முஸ்லிம்கள் இவ்விகாரத்தில் தௌவும், விழிப்புணர்வும் பெற வேண்டுமெனவும் வற்புறுத்தினார்.

No comments

Powered by Blogger.