Header Ads



ஓரு எழுத்தை மாற்­ற 10.000 ரூபா, இலஞ்சம் பெற்ற அதிகாரி சிக்கினார்

(எம்.செல்­வ­ராஜா)

காணி உரிமைப் பத்­திரம் ஒன்றில் காணி உரி­மை­யா­ளரின் பெயரின் ஓர் எழுத்தை மாற்­று­வ­தற்கு பத்­தா­யிரம் ரூபாவை அரச அதி­காரி ஒருவர் இலஞ்­ச­மாகப் பெற்­றுள்­ளமை தெரிய வந்­துள்­ள­தாக மொன­ரா­கலை மாவட்ட அரச அதிபர் பத்மா சக­ல­சூ­ரிய தெரி­வித்­துள்ளார். 

மொன­ரா­கலை மாவட்­டத்தைச் சேர்ந்த கதிர்­காமம் பகு­தி­யி­லேயே  இந்தச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ள­தாக அவர் தெரி­வித்தார். 

கதிர்­கா­மப்­ப­கு­தியின் தயா­க­மகே கேட்போர்  கூடத்தில்   நடைபெற்­ற­ காணி உரிமைப் பத்­தி­ரங்கள் வழங்கும் நிகழ்வு  அமைச்சர் ரஞ்ஜித் மத்­தும பண்­டார தலை­மையில் நடை­பெற்ற போது மொன­ரா­கலை மாவட்ட அரச அதிபர் பத்­மா­ச­கல சூரிய மேற்­கண்ட தக­வலை வெளி­யிட்டார். 

அத்­துடன், மாவட்ட காணி அலு­வ­ல­கத்தில்  காணி உரிமைப் பத்­தி­ரங்கள் வழங்கும் விட­யங்­களில் இலஞ் சஊ­ழல்கள்  அதிகம் காணப்­ப­டு­கின்­றன. இதனை பொறுப்­பு­ட­னேயே இங்கு தெரி­வித்துக் கொள்­கிறேன்.   குற்­ற­மிழைத்­த­வர்கள் தண்­டனை அனு­ப­விக்­கவே வேண்டும் என்றார். 

இதற்கு பதி­ல­ளித்த அமைச்சர் ரஞ்ஜித் மத்­தும பண்­டார, மாவட்ட அரச அதிபர் இங்கு முன்­வைத்த இலஞ்ச ஊழல் தொடர்­பான விட­யங்கள் குறித்து கூடி­ய­க­வனம் எடுக்­கப்­படும். தவ­றி­ழைத்­த­வர்கள் தண்­டிக்­கப்­பட வேண்­டி­ய­வர்­க­ளாவர். 

அரச ஊழி­யர்கள் மக்கள் தேவைகள் அறிந்து, அவர்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­களை நிவர்த்தி செய்ய வேண்டும். அதற்­கென மக்­களின் வரிப்­பணம் மூலம் அரச ஊழி­யர்­க­ளுக்கு போதிய சம்­பளம் வழங்­கப்­ப­டு­கின்­றது.  

இந்­நி­லையில் மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் போது அவர்களிடம் இலஞ்சம் பெறுவது குற்றமாகும். இலஞ்சம் பெற்றமை குறித்து உடன் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.

No comments

Powered by Blogger.