Header Ads



அளுத்கமயில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறை நடந்து 1000 நாட்கள் - இன்னும் நீதி இல்லை

அளுத்கமயில் முஸ்லிம்களுக்கு எதிராக மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் ஆசிர்வாதத்துடன் பொதுபல சேனா வன்முறையை நடாத்தி இன்று 11 ஆம் திகதி சனிக்கிழமையுடன் 1000 நாட்கள் கடந்துவிட்ட போதிலும் இதுவரை நீதி கிடைக்கவில்லை என மூத்த முஸ்லிம் சட்டத்தரணியும், சமூக ஆர்வலருமான சிராஸ் நூர்தீன் ஜப்னா முஸ்லிம் இணையத்திடம் தனது கவலையை வெளிப்படுத்தினார்.

அவர் மேலும் தெரிவிகையில்,

ஒரு சமூகம் நீதியை எதிர்பார்த்து காத்திருக்கிறது. அந்த சமூகம்தான் முஸ்லிம் சமூகம். பொலிஸாரின் திட்டமிட்டு இழுத்தடிப்புக்கு மத்தியில் முஸ்லிம்களுக்கு எதிராக அரங்கேறும் வன்முறைகள் கவனத்தில் எடுக்கப்படாத அபாயம் இலங்கையில் நீடிக்கிறது. இது முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையாளர்களுக்கு தவறான வழிகாட்டுதலக்ளை வழங்கலாம் என்ற எச்சரிக்கையை நாம் உரிய தரப்புகளுக்கு கூற விரும்புகிறோம்.

அளுத்கமயில் 3 முஸ்லிம் இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள் அந்த துயரச்சம்பவம் நடந்து இன்று 11 ஆம் திகதி சனிக்கிழமையுடன் 1000 நாட்கள் கடந்துவிட்டன. அந்த குடும்பத்தவர்களைப் பற்றி நாம் மறந்துவிட்டோம். நமது சமூகம் மறந்துவிட்டது. அவர்களுக்கு இதுவரை நீதி கிடைக்கவில்லை. இது மிகத் துயரமானது.


அளுத்கமயில் மட்டுமல்ல முஸ்லிம்களுக்கு எதிராக எத்தனையோ வன்முறைகள் நடந்துள்ளன. பள்ளிவாசல்களுக்கு எதிரான வன்முறைகள் உள்ளன. இந்தப்பட்டியல் நீளமானது. ஆனால் நீதி கிடைக்கவில்லை. நாங்கள் நீதிமன்றத்திற்கு செல்கிறோம். ஆனாலஸ் பொலிஸார் வருகிறார்கள் இல்லை. சந்தேக நபர்களை ஆஜர்படுத்துகிறார்கள் இல்லை. முஸ்லிம்களுக:கு எதிரான வன்முறைகளை நிறுத:தவோம் எனக்கூறி பதவிக்கு வந்த இந்த அரசாங்கம் முஸ்லிம்களுக்கு நீதி மறுக்கப்படுகிறது என்ற அடிப்படை தர்மத்தை புரிந்துகொள்ளவில்லை எனவும் சிராஸ் நூர்தீன் மேலும் கூறினார்.


7 comments:

  1. Brother Shiraz, if we unable to find justice in this country then can't we relay the matter to international jurists panel with all constructive evidences ??

    ReplyDelete
  2. Brother Shiraz, if we unable to find justice in this country then can't we relay the matter to international jurists panel with all constructive evidences ??

    ReplyDelete
  3. Yahoidi Siya already dominate Our Country

    ReplyDelete
  4. We are fool if you expect justice from Sinhala Govt. whether it is MR or My3 or Ranil.

    ReplyDelete
  5. சிங்கள அரசிடம் நியாயம் கிடைக்காதென்றால் எதற்காக மகிநதவை வீட்டிற்கு அனுப்பினோம். 90% முஸ்லிம்கள் இந்த நல்லாட்சிக்கு ஏன் வாக்களித்தோம்?

    ReplyDelete
  6. Never say NO keep trying until the last breath we will win our rights but make it a point that we all live and die as Muslims. It is only then the opponent will get Hidayath and the people who are engaged with community service will be able to assist and support us to over all hurdles and obstacles.

    ReplyDelete
  7. First of all let us be true to Allah. Are we living as Muslims?
    How can we expect Allah's help?
    Allah will help Muslims.

    ReplyDelete

Powered by Blogger.