Header Ads



முஸ்லிம்கள் இன்று, நட்டாற்றில் தவிக்க விடப்பட்டுள்ளனர் - இம்ரான் Mp

முஸ்லிம் உரிமைகளை வென்றெடுக்கவெனப் புறப்பட்ட முஸ்லிம் கட்சிகள் இன்று தடம்மாறிப் பயணிக்கின்றன கடந்த பல வருடங்களாக அம்பாறை முஸ்லிம்களை தேசிய கட்சிகளும் கைவிட்டமையால் முஸ்லிம்கள் இன்று நட்டாற்றில் தவிக்க விடப்பட்டுள்ளனர் என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார்

ஐக்கிய தேசிய கட்சியின் கிழக்கு மாகாண தமிழ் முஸ்லிம் பிரதேச அமைப்பாளராக நியமிக்கபட்டத்தை அடுத்து சம்மாந்துறைப் பிரதேச ஆதரவாளர்களை சந்தித்து உரையாற்றுகையிலேயே இம்ரான் MP மேற்கண்டவாறு தெரிவித்தார்.  சம்மாந்துறை தொகுதி ஐக்கிய தேசிய கட்சி அமைப்பாளர் ஹசன் அலி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வின் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஐக்கியதேசிய கட்சி ஆதரவாளர்கள் மீண்டும் ஒன்றிணைந்தால் எதிர்வரும் காலங்களில் அம்பாறையில் நாம் இழந்த மூன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை மீண்டும் பெறமுடியும்.

நான் இன்று காலை முதல் அம்பாறையின் பல பகுதிகளிலுக்கும் சென்று இங்குள்ள ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்களை சந்தித்து அவர்களின் கருத்துகளை கேட்டறிந்தேன் இங்குள்ள ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் அனைவரும் குறுப்பிட ஒரு கருத்து எங்கள் கட்சி ஆளும் கட்சியாக இருந்தாலும் அம்பாறையில் நாங்கள் இன்னமும் எதிர் கட்சியாகவே உள்ளோம் . ஐக்கிய தேசிய கட்சிக்கு வாக்களித்து வருவதால் காலம் காலமாக அரசியல் பழிவாங்கலுக்கு உட்பட்டு வந்த எமது அவலங்கள் எமது அரசு ஆட்சி அமைத்தும் தொடர்கிறது ஆகவே எமக்கும் இங்கு ஒரு அரசியல் அங்கீகாரத்தை பெற்று தாருங்கள் என என்னிடம் கோரிக்கை முன்வைத்தார்கள்

உண்மையில் கிழக்கு மாகாணம் என்பது ஐக்கிய தேசிய கட்சியின் கோட்டையாக காணப்பட்ட ஒரு பகுதி 1989 வரை அம்பாறை முஸ்லிம் பகுதிகளை ஐக்கிய தேசிய கட்சியே ஆட்சி செய்தது எமது அன்றைய ஜனாதிபதி முஸ்லிம் கட்சி ஒன்றுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் காரணமாக இன்று எமது கட்சிக்கு இந்த நிலமை ஏற்பட்டுள்ளது அதுவும் முன்னாள் ஜனாதிபது பிரேமதாச இறந்த பின் தொடர்ச்சியாக எதிர்கட்சியில் இருந்ததால் எமது கட்சியினால் இங்கு எமது இருப்பை உறுதி செய்து கொள்ள முடியாமல் போனது ஒருவேளை தொடர்ந்து ஆட்சி செய்திருந்தால் எமது இருப்பை பாதுகாத்திருக்க முடியும் 

இந்நிலைமைகளை போக்கி மீண்டும் கிழக்கும் மாகணத்தில் ஐக்கிய தேசிய கட்சியை கட்டியெழுப்ப எமது கட்சி தீர்மானித்துள்ளது இதற்கான பாரிய பொறுப்பு கட்சி தலைமையால் என்னிடம் வழங்கப்பட்டுள்ளது பிதமர் மற்றும் கட்சியின் செயலாளரின் வழிகாட்டலில் கட்சியை மீள கட்டி எழுப்புவதற்கான செயற்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் நாட்களில் ஒவ்வொரு பிரதேசங்களுக்கும் அமைப்பாளர்களை நியமித்து அவர்களின் கீழ் அப்பிரதேச செயற்குழுக்கள் அமைக்கப்படும். இச் செயற்குழுக்கள் மூலமாக எமது கட்சியை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் நாம் அனைவரும் ஒன்றிணைந்தால் எதிர்வரும் தேர்தல்களின் ஒன்றல்ல இரண்டள்ள மூன்று முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை பெற முடியும்

இன்று இங்கு காணப்படும் முஸ்லிம் கட்சிகளின் பிரச்சினை என்ன என்றுபார்த்தல் எந்த ஊருக்கு தேசிய பட்டியல் வழங்குவது யாருக்கு அமைச்சின் இணைப்பாளர் பதவி வழங்குவது யாருக்கு ஒப்பானத வேலைகளை வழங்குவது என்பனவே இதுவா முஸ்லிம்களின் பிரச்சினை இதுவா எமது சமூகத்தின் பிரச்சினை..?

ஆகவே எமது சமூகத்தின் பிரட்சினைகளை பேசுவதற்கு இனிமேலும் இனங்களை பிரதிநித்துவ படுத்தும் கட்சிகளால் முடியாது என்பதை மக்கள் உணர்ந்துவிட்டனர் எமது சமூகத்தின் பிரட்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை பெற்றுகொடுக்க இன மத பேதமற்ற எமது கட்சியினால் மட்டுமே முடியும்

இன்று நல்லாட்சியில் பல கட்சிகள் அங்கம் வகிக்கின்றன தபால் வாக்களிப்பின் பின் ஜனாதிபதிக்கு ஆதரவளித்தவர்களும் இன்று அமைச்சர்களாக உள்ளனர் ஏன் பாராளுமன்ற தேர்தலில் மகிந்தவுக்கு ஆதரவளித்தவர்களும் இன்று அமைச்சர்களாக உள்ளனர் அண்மையில் மகிந்த ராஜபக்சவால் அரசுக்கெதிராக ஏற்பாடு செய்யபட்டிருந்த கூட்டத்துக்கு வாகனகளை அனுப்பிய அமைச்சர்களும் உள்ளனர் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய நாம் இன்னும் அதை அனுபவிக்கவில்லை இதை நிவர்த்தி செய்வதற்காக எமது தலைவர் கௌரவ ரணில் விக்ரமசிங்க சில முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளார் இப்பிரதேசத்தில் உள்ள இவ்வாறான சவால்களை எதிர்கொள்ள எமது தலைவரின் வழிகாட்டலில் சில திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன இன்ஷா அல்லாஹ் இனிவரும் காலங்களில் நீங்கள் அதன் மூலம் ஆட்சி மாற்றத்தின் பயனை அடைவீர்கள் 1989 இல்எமது கட்சி காணப்பட்டதை விட பலமிக்கதாக மீள் எழுச்சி பெறும் என்றார்

3 comments:

  1. உங்கள் அரசியலுக்காக முஸ்லிம்களை உரமாக்காமல் செய்படுங்கள், முஸ்லிம்களுக்காக என்று உருவாக்கப்பட்ட கட்சிகளில் வேற்பாளர்களாக குடிகார்ர்கள், பொம்பிளப் பொருக்கிகள் எல்லோரும் இருக்குறார்கள், வாக்குப்பெற்றோர்கள் சபையில் வாயைத்திற்க்கிறார்களில்லை,
    உங்கள் ஐ தே க ஆட்சிதான் இது!
    இதில்தான் சில நாட்களுக்கு முன் தம்புள்ளயில் பள்ளியை அகற்ற ஆர்ப்பாட்டங்கள் நடந்தன, வியாபார ஸ்தலங்கள் பலாத்காரமாக 3 நாட்கள் மூடப்பட்டன?

    ReplyDelete
  2. முஸ்லிம்கள் குரலாக பலமாக அமைச்சர் அஸ்ரப் அவர்களால் உருவாக்கப்பட்ட இந்த முஸ்லிம் காங்கிரஸ் கட்சியை சின்னபின்னமாக்க நீங்களும் ரிசாதும் அம்பாரை மாவட்டத்தில் பெரும் போட்டியில் இருக்கின்றீர்கள் என்று சொல்லும்! சரி இதை நீங்கள் செய்து முடித்தால் இதற்கு திட்டம் வகுத்த சில பெரும்பான்மை கயவர்கள் உங்களுக்கு என்ன தருவார்கள்?

    ReplyDelete
  3. இஸ்லாத்தின் பெயரால் இயங்கும் கட்சியை விமர்சிக்கின்றீர்கள், ஆனால் முஸ்லிம்களுக்கு எத்தனையோ அநியாயங்களைச் செய்ததுதான் நீங்கள் சார்ந்திருக்கும் கட்சியாகும். அம்பாரை மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான பல்லாயிரக்கணக்கான விவசாயக்காணிகளை சட்டவிரோதமான முறையில் கைப்பற்றி, பெரும்பான்மையினரைக் குடியேற்றி அவர்களுக்கு பகிர்ந்தளித்ததுதான் உங்களின் கட்சியாகும். அம்பாரை மாவட்டத்தில் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தொடங்கப்பட்ட இந்த திட்டமிடப்பட்ட சதியானது இன்றுவரை தெடர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த சதியை நிறுத்துவதற்காகவும், இழந்த காணிகளை மீட்பதற்காகவும், தொடாங்கப்பட்ட கட்சிதான் நீங்கள் குறிப்பிடும் முஸ்லிம் கட்சியாகும். ஆனால் இன்று இந்த கட்சியானது, சுயநலமெனும் பீடையால் பாதிக்கப்பட்டுள்ளதோடு, அரசியல் வியாபாரத்தை கற்று புதிய கம்பெனிகளை தொடங்கவிருப்பவர்களுக்கு பயிற்சியளிக்கும் சிறந்த தாய்க் களமாகவும் மாற்றமடைந்துள்ளது.
    முஸ்லிம் கட்சியை விமர்சிப்பதற்கு உங்களுக்கு எந்த அருகதையுமில்லை. நீங்களும் அரசியல் வியாபாரத்தில் உள்ளீர்கள், “முஸ்லிம்” என்ற வார்த்தையை தங்களின் கட்சிப்பெயருடன் கொண்டிருப்பவர்களும், அரசியல் வியாபாரக் களத்தில் உள்ளனர்.
    உங்களுக்கும், அவர்களுக்கும் விதை நிலமும், அறுவடையும் ஒன்றுதான். விதை நிலம் ‘முஸ்லிம் சமூகம்’. அறுவடை ‘வாக்குகள்’. விதை நிலங்களுக்கு கிடைத்தது வைக்கோலும், குப்பை கூழங்களும்தான். ஆனால் உங்களுக்கோ கிடைத்தது, ஆறு வருட சுகபோக வாழ்க்கையும், இலவசங்களும். உங்களின் கைக்கூலிகளுக்கும் ஏதோ சில சில்லறைகள் கிடைத்தன. சிறந்த விதை நிலங்களாக காணப்படும், கிழக்கிலங்கை முஸ்லிம் சமூகமோ, தன்னுடைய பலமறியாத, மடத்தனமான முறையில் தங்களுக்கிடையில் விவாதித்துக்கொண்டும், சில சுயநலங்களுக்காக முறன்பட்டுக் கொண்டிருக்கும் மடத்தனமான சமூகமாக காணப்படுகின்றது.
    முஸ்லிம் உரிமைகளை வென்றெடுக்கவெனப் புறப்பட்ட முஸ்லிம் கட்சிகள் இன்று தடம்மாறிப் பயணிக்கின்றன என நீங்கள் தெரிவித்துள்ளீர்கள். பாரளுமன்ற உறுப்பினர் அவர்களே, முஸ்லிம் சமூகத்திற்காக என்ன உரிமையை நீங்கள் பெற்றுக் கொடுத்துள்ளீர்கள், இந்த நாட்டின் இறைமைக்காகவும், இந்த நாட்டிற்காகவும் எத்தனை முறை பாராளுமன்றத்தில் விவாதித்துள்ளீர்கள் அல்லது போராட்டம் நடாத்தியுள்ளீர்கள்?. குறைந்த பட்சம் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்கள் இழந்த காணிகளையாவது பெற்றுக்கொடுக்க முடிந்ததா ?.
    அம்பாரை மாவட்ட முஸ்லிம்களை பல வருடங்களாக தேசியக் கட்சிகள் கைவிட்டிருந்தது என நீங்கள் கூறியிருப்பது மிகவும் சந்தோஷமான விடயமாகும். உங்களின் கட்சி கிழக்கில் முஸ்லிம்களுக்கு செய்ய அநீதியை நீங்களே ஒப்புக் கொண்டுள்ளீர்கள்.
    நீங்கள் கூறியிருப்பது போன்று, ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் ஒன்றினைந்தால், அம்பாரையில் நாம் இழந்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களைப் பெற முடியும். ஆனால், அம்பாரையில் முஸ்லிம்கள் இழந்த பல்லாயிரக்கணக்காக ஏக்கர் காணிகளையும், உரிமைகளும் இவை பெற்றுக்கொடுக்க உதவுமா ?. வாய்பேசாத முஸ்லிம் பிரதிநிதிகளால் பாராளுமன்றத்தை நிறப்புவதால் இந்த நாட்டிற்கோ அல்லது எமது சமூகத்திற்கோ எந்த பயனும் இல்லை. முஸ்லிம் சமூகத்திற்காக குரல் கொடுக்கக்கூடிய உருப்படியான ஒரு பிரதிநிதி எங்களுக்கு மிகவும் போதுமானதாகும்.
    இவ்வாறான வாய்பேசாத, சுயநலப்போக்குடைய முஸ்லிம் பிரதிநிதிகளைவிட அந்நிய சமூகத்தை சார்ந்தவர்கள் பாராளுமன்றத்தில் அங்கத்துவம் வகிப்பது மிகவும் சிறந்ததாகும். முஸ்லிம் கட்சிகளின் தொடக்கத்திற்கு முன்பு தேசியக் கட்சியில் அங்கம் வகித்த முஸ்லிம் பிரதிநிதிகளும், அந்நிய சமூகத்தைச் சார்ந்த பிரதிநிதிகளாலும் எமது சமூகத்திற்கு எத்தனை நன்மைகள் கிடைத்தது என்பதை அறிய சரித்திரத்தை புரட்டிப்பாருங்கள். இனவாதம் என்றால் என்னவென்று அறியாததொரு காலமது. இலங்கை முஸ்லிம் சமூகத்தை இனவாதமெனும் படுகுளிக்குள் தள்ளிவிட்டவர்கள், எமது சமூகத்தைச் சேர்ந்த தற்காலத்து அரசியல்வாதிகள்.
    அம்பாரை மாவட்டத்தில் உங்கள் கட்சியினருக்கு ஏற்பட்ட பழிவாங்கல் பற்றி, கட்சி ஆதரவாளர்களின் கருத்தை குறிப்பிட்டுள்ளீர்கள். பழிவாங்கல்களின் ஆரம்பகற்த்தாவே தேசிய கட்சிகள்தானே. கடந்த ஜூலை 1977ல் உங்களின் கட்சியினர் செய்ய பழிவாங்கலை விடவா, இப்போது பளிவாங்கல் நடந்துவிட்டது. நீங்கள் குறிப்பிட்டது போன்று மீன்டும் கட்சியை கிழக்கில் பலப்படுத்தி கட்டியெழுப்புவதால், பெரிதாக முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு நன்மையும் கிடைக்கப்போவதில்லை. இதற்காக ஒதுக்கப்படும் பணத்தில் சில குடும்பங்கள் வாழும். எந்த பல்லவி கிழக்கில் தொடர்ந்து கொண்டிருக்கின்றதோ அதே பல்லவிதான் தொடரப்போகின்றது. கிழக்கில் முஸ்லிம்கள் இழந்ததை பெற்றுக்கொடுத்துவிட்டு, ஒங்களின் கட்சிக்கான சேவைகளை செய்யுங்கள் அது மிகவும் சிறந்ததாக இருக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.