Header Ads



றிசாத்தினால் தகர்ந்துபோன, அவரது மகளது கனவு

-றிஸ்கான் முகம்மட்-

A.C.M.C. கட்சியினதும் அதன் தலைமையினதும் அபார முயற்சியாக  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான டட்லி சிறிசேனவிடம் பேசி 60 மில்லியன் ரூபாவை எனது மகன் பெற்றுக்கொண்டுவந்த பின்னரே முதலாவது தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தை நடத்தினோம். நாங்கள் ஆட்சியைக் கைப்பற்றுவோம். அப்போது பணம் கிடைக்கும். அவற்றைக்கொண்டு உங்களது கணக்குகளைத் தீர்ப்போம் என்று பொய்யைக் கூறியே வர்த்தகர்களிடம் உதவிகோரினோம். கடந்த ஐந்தாண்டு காலமாக எமது வறிய மாணவர்களின் வைத்திய துறையை மேன்படுத்தும் நோக்குடன் பாக்கிஸ்தான் அரசினால் புலமை பரிசில் வழங்கபட்டு வருகின்றது.
இந்தவகையில் இம்முறையும் 27 (22 முழுமையான புலமைப் பரிசில் 05 அரைவாசி புலமை பரிசில்)  மாணவர்களுக்கு இது வழங்கப்பட்டது.
அமைச்சர் தனது மகளின் பட்டபடிப்பிற்காக பல பல்கலைக்கழகங்களை தந்தையாக பல நாடுகளிலும் தேடுகின்றார் தனது மகளுக்கு ஏற்றதைப் போலவும் தரமான கல்வியை பெறும் விதத்திலும் பல பல்கலைக்கழகங்கள் அமையவில்லை .இருப்பினும் பாகிஸ்தானிய பல்கலைக்கழகம் ஓர்அளவு சாத்தியமாக அமைகின்றது.வறிய அத்தனை மாணவர்களையும் தெரிவுசெய்து இறுதியாக 22 வது ஆலாக தனது மகளின் பெயரையும் இணைக்கின்றார்.
அதிலும் இவர் அமைச்சரின் மகள் எனவும் அடையாளப்படுத்துகின்றார். (புலமை பரிசிலை வழங்கும் நிருவாகம் விரும்பினால் வழங்கட்டும் இல்லையாயின் நிராகரிக்கட்டும் எனும் நோக்கில்)
அதே தருனம் இன்னும் ஒரு பல்கலைக்கழகம் 5 மாணவர்களுக்கு அரைவாசி புலமை பரிசிலை வழங்க முன்வருகின்றது.அதற்கும் 5 மாணவர்கள் தெரிவு செய்யபடுகின்றனர்.
நாட்கள் சில நகர்கின்றது மாணவர்களும் பட்டபடிப்பை தொடர பாகிஸ்தான் செல்ல தயாராகின்றார்.
அமைச்சரின் மகளும் தனது குடும்பங்களுக்கு பயணம் சொல்லி துவாப்பிராத்தனையும் செய்ய கூறி விடை பெற தயாராகின்றார்.
தனது சக வகுப்பு நண்பர்களையும் உறவுகளையும் அழைத்து உணவு விருந்தும் பரிமாரப்படுகின்றது.
இந்த வேளையில் தான் அமைச்சர் மன்னாரில் மக்களின் பணிகளை நிறைவு செய்து தனது மகளின் பட்ட படிப்பு விருந்துபசாரந்தில் பங்கு கொள்ள விறைந்து கொழும்பை நோக்கி வந்து கொண்டிருக்கின்றார்.
சிறிது கண் அசந்தவராக புத்தளம் முந்தல் பகுதியை தாண்டும் போது திடீர் என தொலைபேசி அழைப்பு யார் என பார்க்கும் போது அது M.M.AMEEN (நவமணி ஆசிரியர்) அவர்கள்.
Sir என விழித்து தனது விடயத்தை அமைச்சருக்கு எடுத்துரைகின்றார்.
பாகிஸ்தானில் வைத்திய பட்டபடிப்பிற்காக அரைவாசி புலமை பரிசிலுக்கு தெரிவு செய்யபட்ட மாணவி அதை கூட கட்டிப் படிக்க முடியாத நிலையில் உள்ளார். இவருக்கு ஏதாவது தனவந்தர்களின் உதவி பெற்று கொடுங்கள் என்கின்றார். M.M. அமீன் அவர்களின் அத்தனை விடயங்களையும் நிதானமாக கேட்டவராக இன்ஷா அல்லாஹ் நல்ல முடிவு வரும் துவா செய்யுங்கள் என்றவாறு அழைப்பு துண்டிக்கபடுகின்றது.
மனவேதனையுடன் சிந்தித்தவராக தனது வீட்டை அடைகிறார். வீடு சந்தோஷ விழாக்கோலம் பூண்டு இனிமையாக காட்சி அளிக்கின்றது. தனது கவலையை தனக்குள் புதைத்துக் கொண்டு அனைவருக்கும் புன்முறுவலுடன் சுகம் விசாரித்தவராக தனது அறைக்குள் சென்று தனது  மகளை அழைக்கின்றார்
தந்தையின் அழைப்பை ஆவலுடன் காதில் வாங்கியவராக தனது தந்தையின் வாழ்த்தை எதிர்பார்த்து ஓடி வருகின்றார்.
அன்பு மகளை இறுக அனைத்து முத்தமிட்டவராக நான் ஒன்று உங்களிடம் கேட்பேன் நீங்கள் அதை செய்வீர்களா? என வினவுகின்றார்.
]
“நான் உங்களின் மகள்” எனக்கும் எமது சமூகத்திற்கும் எத்தனையோ செய்யும் உங்களுக்கு நான் நீங்கள் கேட்கும் ஒன்றை செய்யாமல் விடுவேனா?  என்று ஆவலுடன் விடயத்தை வினவ தந்தை பக்குவமாக எடுதுரைக்கின்றார்.
உங்களின் புலமை பரிசிலை வறிய ஒரு சகோதரிக்கு விட்டு கொடுங்கள் இறைவன் இன்ஷா அல்லாஹ் உங்களுக்கு இன்னும் உதவி செய்வான். என்க
மகள் சற்றும் இதை எதிர் பாராதவராக தனது கண்கள் கலங்க அப்படியே உங்களின் விருப்பம் நிறைவேறட்டும். என அனுமதி வழங்குகின்றார் மகள்.
தானும் தனது மகளும் எடுத்த முடிவையும் நடந்த சம்பவத்தையும் பண்பாக தனது மனைவிக்கு அமைச்சர் எடுத்துரைக்க
 “மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்”
என்பதை போல் அவரின் பரிபூரண ஒப்புதலுடன் தனது மகளின் இடம் அந்த மாணவிக்கு வழங்கபட தீர்மானிக்க படுகின்றது.
மறுநாள் விடயம் உரியவர்களுக்கு அறிவிக்க பட்டு அதற்கான அத்தனை விடயங்களும் முன்னெடுக்கபட்டது.
சில நாட்களின் பின் பட்டபடிப்பை தொடர அத்தனை மாணவர்களையும் தனது குடும்பத்துடன் சென்று விமான நிலையத்தில் வழிஅனுப்பி வீடு திரும்புகின்றார் அமைச்சர்.
பாகிஸ்தானில் பட்டப் படிப்பை தொடரவேண்டிய தனது மகள் இப்போது வீட்டிலே உள்ளார்.”
 “இதுவே உண்மை “
அரசியலுக்கு அப்பால் சமூகத்திற்காக மனித நேயத்துடன் செய்த இந்த பணியை அரசியல் மயப்படுத்தவும் இல்லை ஊடகங்களில் வெளி இடவும் இல்லை அமைச்சர்.
எம்மை போன்ற ஒரு தந்தையால் இவ்வாரான தியாகத்தை செய்ய முடியுமா?
சில அநாகரீக அரசியல் தலைமைகளும் அவர்களின் ஆதரவு எழுத்தாளர்களும் உண்மையை மறைத்து உயர்வான விடயம் ஒன்றை மளுங்கடிக்க செய்து அமைச்சருக்கு சேறு பூச எத்தனித்தமை வேதனையான விடயமாகும். நாளை நீங்கள் அனைவரும் இறைவனின் சன்னிதானத்தில் நிறுத்த படுவீர்கள் என்பதை மறக்க வேண்டாம்.

10 comments:

  1. Great sacrifice .May Allah swa grant his daughter higher status in a different avenue

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ்,
    கௌரவ அமைச்சர் Mr. ரிஷாத் பதுர்தீன் அவர்ஹலே இது ஒரு மிக பெரிய தியாகம். இன்றய நிலையில் ஒவ்வொரு அரசியல்வாதிகளும், தனவந்தார்ஹளும் தன்னையும் தண்ட குடும்பத்தினர்,உறவினரிகளையும் தவிர வெறுயாரையும் எட்டிப்பார்க்காத நிலையில்தான் இருக்கிறாரகள். நிச்சயமாக இந்த உதவிக்கு இன்மையிலும் மறுமையிலும் உங்களுக்கான கூலி உண்டு.

    ReplyDelete
  3. Puraanangal eppothu mudiumo....???
    www.Jaffnamuslim.com is also a media...the writter may forget it..?
    Also, there are lots of good universities in the world and arabic countries better than those pakistani universities...?
    What more you/ they need...?

    ReplyDelete
  4. மாஷா அல்லாஹ்:இன்ஷா அல்லாஹ் இதை விட பெரியதோர் அந்தஸ்த்தை அந்த அருமை மகளுக்கு அல்லாஹ் வழங்குவான்.

    ReplyDelete
  5. நானும் ஒருமுறை எனது உயர் கல்வி தொடர்பாக அமைச்சர் ரிஷாதை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது பொறுப்புடனும் அக்கறையுடனும் என்னோடு கதைத்து வழிகாட்டியமை உண்மையில் என்னைக்கவர்ந்தது.அது அவரது சமூக ஈடுபாட்டை காட்டுவதாகவே அமைந்தது.

    ReplyDelete
  6. masah allah.unkal mahalin thiyahattai allah ettuk kolvanaha aameen.

    ReplyDelete
  7. "ஏமாறுபவன் இருக்கும் வரை, ஏமாற்றுபவன் திருந்த மாட்டான்."

    இச்சம்பவம் உண்மையானால்; தனது மகளின் இடத்தை வேறொருவருக்கு விட்டுக்கொடுத்த கணப்பொழுதை, அந்த மனோ பக்குவத்தை நிட்சயம் பாராட்ட வேண்டும். ஆனால் இப்படி ஒரு சூழலை உருவாக்கியவரும் அமைச்சர் தானே. இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான தகைமை உள்ள ஏழை மானவர்கள் உள்ளார்கள் என்பது அமைச்சர் அவர்களுக்கு புறியாமலா இருக்கும். எது எப்படியோ, இறுதி முடிவை நாம் மிகவும் பாராட்டுகிறோம். எல்லாவற்றுக்கும் எல்லாம் வல்ல இறைவன் போதுமானவன்.

    ReplyDelete
  8. He is known to be different than others, who hosted lavish weddings of their daughter in 5 star hotels, while Muslims were in fear of BBS goons going rampage.

    Anyway this story raises several other questions,

    1. Is it appropriate even to apply for such scholarship for a person like Rishard - Isn't it conflict of interest?.

    2. Are these scholarships awarded through proper selection criterion, or given to political well wishes, if for it will be the abuse of power.

    3. Stating the fact that the applicant is so and so of the minister, can it be considered as stated in the article or it is excreting undue pressure to award the scholarship to his daughter.

    While I admire the good deeds Min.Rishard has done and his determination, I can't resist raising these questions, even if this detailed act is done is good faith, why publicize in this manner, no one but an insider can know how the application was filled stating that the application is infact of Minister's daughters.

    ReplyDelete
  9. Nichchayamaha Allah amaichcharukkum avar kudumbaththukkum jennathul firdous annum suvarkaththai kodukka vendum- thoppur jaroos-qs

    ReplyDelete

Powered by Blogger.