Header Ads



வெள்ளை மாளிகையிலிருந்து, வெளியேறும் முஸ்லிம் சகோதரி..!

(மீள்பார்வை)

நான் கடந்த காலத்தில் வெள்ளை மாளிகையின் பாதுகாப்புப் பிரிவில் ஒரு பர்தா அணிந்த ஒரு யுவதியாய் பெரும் கௌரவத்துடன் நியமிக்கப்பட்டேன். வெள்ளை மாளிகையில் உள்ள அனைவரும் என்னைக் கண்ணியப்படுத்தினார்கள். பெரும் மதிப்பும் மரியாதையும் கிடைத்தது. ஒபாமா சலாம் சொல்வார். இன்று அனைத்தும் தலை கீழாய் மாறிவிட்டது.

கடந்த காலங்களில் ட்ரம்ப் வெளியிட்டுவந்த நச்சுக் கருத்துக்கள் தொடர்பிலும் நான் அவதானமாய் இருந்தேன். எனினும், ட்ரம்ப் பதவியேற்ற பின் எட்டு நாட்கள் நான் வெள்ளை மாளிகையில் தாக்குப்பிடித்தேன்.

என்னால் முடியுமான தேசிய நலனுக்கான நற்சேவையை தொடர வேண்டும் என்றே இருந்தேன். எனினும் அதிபர் ட்ரம்பின் “முஸ்லிம் தடை” தொடர்பான அறிவிப்பு என்னை பெரிதும் பாதித்தது.

ருமானா அஹ்மத் மேலும் தெரிவிக்கையில்,

12 வயதில் நான் பர்தா அணிய ஆரம்பித்தேன். சிறு வயதிலிருந்தே பெரும் சவால்களுக்கு முகம்கொடுத்தே வந்துள்ளேன். 9/11 தாக்குதலுக்குப் பின்னர் பொது இடங்களில், பாடசாலையில் “தீவிரவாதி” என்று கூறப்பட்டேன், “நீ உனது நாட்டுக்குப் போ” என்றும் கூறினார்கள்.

Related imageஉன்னை ஒருவன் தாக்கி வீழ்த்தினால், எழுந்து அவருக்கு கை கொடுத்து “எனது சகோதரரே” என்று கூறு என எனது தந்தை கூறியிருக்கின்றார். நல் விழுமியங்களுடனேயே வளர்ந்தேன். அதுவே இன்று என்னை உயர்த்தி இருக்கின்றது.

தந்தை அமெரிக்க வங்கியில் பணிபுரிந்தவர். சிறந்த சமூக சேவகர்.

நான் அரச சேவையை ஊழல்மிக்கது, தூய்மை அற்றது என வெறுத்தேன். ஆனால், ஒபாமா நிர்வாகத்தில் வேலை செய்த நாட்கள் எனது நிலைப்பாட்டையே மாற்றி இருக்கின்றது.

எனது பல்கலைக்கழக வாழ்க்கை முடிந்ததுமே வெள்ளை மாளிகையில் வேலை கிடைத்ததும் இதுவரை நான் சந்தித்த அவமானங்களை எண்ணி வேடிக்கையாக இருந்தது. 22 வயதில் இங்கு பணியாற்ற ஆரம்பித்தேன்.

ஆனால், அதிபர் ட்ரம்பினால் எனது சமுதாயத்துக்கு எதிராக நேரடியாக இழைக்கப்படும் சர்வாதிகார கட்டளைகளை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. நான் வெளியேறும் அந்த மாலை நேர பிரியாவிடை நிகழ்வின்போது எனது மேலதிகாரி என்னைப் பார்த்து “நீ முழுமையாக சேவையிலிருந்து விலகுகின்றாயா?” என்று கேட்டார். காரணங்களை அவரிடம் கூற தேவையேற்படவில்லை என்றாலும் நான் அவரிடம் அதை விளக்கினேன்.

எனவே நான் எனது மதம் எனது கலாச்சாரம் பாரம்பரியம் அகதிகளாய் வந்து வெளியேற்றப்பட்ட அப்பாவி மக்களின் கண்ணீரில் இந்த வெள்ளை மாளிகைக்கு வந்து போக தயாரில்லை.

“இந்த தொழிலே இனி வேண்டாம்” என்கின்றார்.




3 comments:

Powered by Blogger.