Header Ads



நான் ஒரு முஸ்லிம், சாவை கண்டு அஞ்சுபவன் அல்ல - அசத்துத்தின் உவைஸி

 நான் சாவை கண்டு அஞ்சுபவன் அல்ல என்று மஜ்லீஸ் கட்சி தலைவர் அசத்துத்தின் உவைஸி பேசியுள்ளார். இதுதொடர்பாக மும்பை புனேவில் நடந்த கூட்டத்தில் அவர் பேசியதாவது...

நான் மும்பை வந்து இறங்கியவுடன் என்னுடைய உயிருக்கு ஆபத்து உள்ளது என்று நோட்டீஸ் வழங்கப்பட்டது.

இதை கண்டு நான் அஞ்சவில்லை, மாறாக கவலைப்படுகிறேன். நம்முடைய முன்னோர்கள் இதற்காகவா இரத்தம் சிந்தி உயிரைக்கொடுத்து இந்நாட்டை விடுதலை பெற்றார்கள் ?

இந்திய அரசியல் சாசன சட்டப்படி ஒருவன் தன்னுடைய கருத்தை சொல்வதற்கு முழு உரிமையும் உள்ளது.

அப்படியிருக்கையில் இதுபோன்ற மிரட்டல்கலால் இந்நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது என்ற கவலை என்னுள் மேலோங்கியுள்ளது.

இவர்கள் சொல்கிறார்கள் என்னுடைய உரையாடலால் இந்து முஸ்லிம்களுக்குள் கலவரம் எற்படுமாம், எனக்கும் இந்துவுக்கும் என்ன பிரச்சினையுள்ளது ? எந்த மதத்தையும் கொச்சைப்படுத்தும் நோக்கம் எனக்கு அல்ல...

நான் ஒரு முஸ்லிம் என்னுடைய சமூகத்திற்காக அவர்களின் வாழ் உரிமையை நான் பெற்றுதர போராடுவேன் !

அப்படி என்ன நான் பேசிவிட்டேன் ? கடந்த மூன்று வருடங்கலாக நான் மும்பை மாநகரத்துக்கு வந்து பிரச்சாரம் மேற்கொள்கிறேன் எங்கு கலவரம் வந்தது ?

அப்படி நான் தவறாக பேசியிருந்தால் ஏன் என் மீது வழக்கு பாயவில்லை ? ஏன் கைது செய்யவில்லை ?

உங்களின் மிரட்டலுக்கு அஞ்சும் நபர் நான் இல்லை, என்னுடைய பெயரும் அதுவல்ல...

என்னுடைய கருத்தினை நான் மக்கள் மத்தியில் உரைத்தே தீர்வேன். யார் என்னை தடுக்கிறார்கள், யார் என் மீது குண்டு போடுகிறார்கள் என்பதை நான் பார்க்கிறேன். நான் சாவை கண்டு அஞ்சுபவன் அல்ல...

மேற்கண்டவாறு அசத்துத்தின் உவைஸி பேசினார்.

2 comments:

  1. Hello Mr.Hakeem & Rishad you must listen this voice! He is the example fora leader!! you are all political looser !

    ReplyDelete

Powered by Blogger.