Header Ads



முஸ்லிம் சமூ­கத்தின் கட­மை­ - பேரா­சி­ரியர் எம்.ஏ. நுஹ்மான்

-விடிவெள்ளி-

பேரா­தனை பல்­க­லைக்­க­ழக மெய்­யி­யல்­துறை முன்னாள் தலை­வரும் முஸ்லிம் கல்வி மாநாட்டின் தலை­வ­ரு­மான  கலா­நிதி எம்.எஸ்.எம். அனஸ் எழு­திய ' முஸ்லிம் அர­சியல் முன்­னோடி- அறிஞர் சித்­தி­லெப்பை' நூல் வெளி­யீட்டு விழா மற்றும் அவர் பற்­றிய ஆவ­ணப்­படம் இறு­வட்டு வெளி­யீடு என்­பன கெட்­டம்பே ஓக்ரே ரீஜன்சி மண்­ட­பத்தில் நடை­பெற்­றது. 

இதில் கலந்து கொண்ட பேரா­தனை பல்­க­லைக்­க­ழக பேரா­சி­ரியர் எம்.ஏ. நுஹ்மான் உரை­யாற்­று­கையில்,  

இலங்கை முஸ்­லிம்­களின் தற்­கால கல்வி மற்றும் அர­சியல் துறை­களின் முன்­னேற்­றத்­திற்கு அடித்­த­ள­மிட்ட முன்­னோடி  அறிஞர் சித்­தி­லெப்பை ஆவார். உல­கக்­கல்வி மார்க்கக் கல்வி என்ற வித்­தி­யா­ச­மின்றி இஸ்­லா­மிய அடிப்­ப­டையில் முஸ்லிம் சமூ­கத்தில் சக­ல­ருக்கும் கல்வி வாய்ப்பை ஏற்­ப­டுத்திக் கொடுப்­பது முஸ்லிம் சமூகம் அறிஞர் எம்.சி. சித்­தி­லெப்­பைக்கு செய்யும் நன்­றிக்­க­ட­னாகும். 

உலகில் முஸ்லிம் சனத்­தொ­கையில் அறு­பது சத­வீ­தத்­தினர் எழுத்­த­றி­வற்­ற­வர்­க­ளாவர். கல்வி தொடர்­பான தெளி­வான நிலைப்­பாடு அறிஞர் எம்.சி. சித்­தி­லெப்­பை­யிடம் காணப்­பட்­டது.

அவர் கல்­வியை உல­கக்­கல்வி மார்க்கக் கல்வி என்று வேறு­ப­டுத்தி நோக்­க­வில்லை. இஸ்­லா­மிய அடிப்­ப­டையில் முஸ்லிம் சமூ­கத்தில் சக­லரும் கல்வி வாய்ப்பை பெற்றுக் கொள்­வதை உறு­திப்­ப­டுத்த அவர் பாடு­பட்டார்.

இப்­பணி அவர் விட்டுச் சென்ற பணி­யாகும். இதனைப் பற்றி சிந்­திப்­பது முஸ்லிம் சமூ­கத்தின் கட­மை­யாகும்.  உல­கக்­கல்வி மற்றும் மார்க்­கக்­கல்வி என்­ப­வற்றை ஒன்­றி­ணைத்து செல்­வது அறிஞர் எம்.சி. சித்­தி­லெப்­பையின் பணியைத் தொடர்­வ­தாக அமையும்.   

முஸ்லிம் சமூகம் அறிஞர் எம்.சி. சித்­தி­லெப்­பையின் சேவைகள்  பற்றி போதியளவில் அறியாத நிலை தொடர்கின்றது. எனவே அன்னாரின் பணிகள் எடுத்துக் கூறப்பட வேண்டும்.

 இன்று முஸ்லிம் சமூகம் ஒரளவுக்காவது கல்வி மற்றும் அரசியல் ஆகிய துறைகளில் முன்னேற்றம் அடைந்திருப்பதற்குக் காரணம் அன்று அறிஞர் எம்.சி. சித்திலெப்பை செய்த பணியாகும். அறிஞர் எம்.சி. சித்திலெப்பை வாழ்ந்த காலம் ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலமாகும். அன்று முஸ்லிம் சமூகத்தில் சுமார் ஐந்து சதவீத்தினர் மட்டும் கல்வித்துறையில் முன்னேறியவர்களாக இருந்தனர். இவர்கள் ஆங்கிலத்தையும் கற்று தமது நிலையை மேம்படுத்திக் கொண்டனர்.

ஆனால் சமூகத்தில் எண்பது சதவீதத்தினர் பொருளாதாரம் மற்றும் கல்வியில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தனர். அறிஞர் எம்.சி.  சித்திலெப்பை இந்த என்பது சதவீதத்தினரின் நிலைமையை மாற்றியமைப்பதற்கு தன்னை அர்ப்பணித்தார் என்றார்.
      
இந்­நி­கழ்வில் கௌர அதி­தி­யாகக் கொண்ட தொழி­ல­திபர் எம். எம். எம். வதூத் நூலின் முதல் பிர­தியைப் பெற்றுக் கொண்டார். 

சித்­தி­லெப்பை மன்­றத்தின் உப தலை­வரும் ஒராபி பாஷா நிலை­யத்தின் பணிப்­பா­ள­ரு­மான ஹபீல் சலீம்தீன்,  சித்­தி­லெப்பை மன்­றத்தின் தலை­வரும் அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டுத் தலைவர் பேரா­சி­ரியர் எம். எஸ். எம். அனஸ்,  ஏ. ஜே. எம். முபாரக் ஆகி­யோ­ருடன் பேரா­தனை பல்­க­லைக்­க­ழகப் பேரா­சி­ரியர் பீ. எம். ஜமாஹீர், பேரா­சி­ரியர் ஹஸ்­புல்லாஹ், கலா­நிதி நபீல், அர­சியல் பிர­மு­கர்­க­ளான மத்­திய மாகாண சபை உறுப்­பி­னா­க­ளான எம். டி. எம் முத்­தலிப், செய்­னு­லாப்தீன் லாபீர், பா­கிஸ்தான் தூது­வ­ரா­யத்தின் கவுன்­ஸிலர் ஹப்சல் மரைக்கார், கவிஞர் ஜின்னா ஷரீப்தீன் , அல் அஸூமத்  உட்பட பலர் கலந்து கொண்டனர்.

1 comment:

  1. It is good to appreciate the works and contribution of Sithy Lebbe...but no point in mskiing mereally appreciate of his contribution we should have a clear plan and strategic plan what to do next ...I feel sorry we are on the bottom of all three Sri Lankan Muslim communities in education. Less 4 % of Muslim students enter univeristy in SL?. Yes Sithy Lebe was a motivator and architect of Muslim education and yet think what we have done.
    We have people to appreciate his work and yet no people like him among us .

    ReplyDelete

Powered by Blogger.