Header Ads



பித்அத்தைச் செய்கின்ற, இமாமுக்குப் பின்னால் நின்று தொழுவது கூடாது - முபாறக் மதனி

அல்குர்ஆனுக்கு ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் ஒருபோதும் முரண்படுவதில்லை. அவ்வாறு முரண்படுவது போன்று தென்படும் பட்சத்தில் அவற்றுக்கிடையில் இணக்கம்காண வேண்டுமே தவிர அவற்றில் எதனையும் நிராகரிக்கக் கூடாது. அகீதா சார்ந்த அம்சங்கள் அனைத்தையும் அல்குர்ஆன், அஸ்ஸுன்னா ஆதாரங்களைக் கொண்டு மாத்திரமே நிறுவ வேண்டும். இஸ்லாமிய அகீதாவின் மூலாதாரங்கள் அல்குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் ஆதாரபூர்வமான சுன்னாவுமாகும். என கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.முபாறக் மதனி; தெரிவித்தார்.

கொழும்பு ஜம்மிய்யதுஸ் ஷபாப் அனுசரணையில் மருதமுனை இஸ்;லாமிய பிரச்சார மையம் ஏற்பாடு செய்த மருதமுனையைச் சேர்ந்த மௌலவியாக்களுக்கான இஸ்லாமிய வழிகாட்டல் கருத்தரங்கு ஞாயிற்றுக்கிழமை (19-02-2017)மருதமுனை பிரச்சார மையத்தின் மண்டபத்தில் நடைபெற்றது இதில் வளவாளராகக் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.  

150பதுக்கும் மேற்பட்ட மௌலவியாக்கள் கலந்து கொண்ட இந்த இஸ்லாமிய வழிகாட்டல் கருத்தரங்கில் அஷ்செய்க் எம்.ஐ.எம்.ஜிபான் மதனி.அஷ்செய்க் எஸ்.எச்.முஜீப் சலபி ஆகியோரும் வளவாளர்களாகக் கலந்து கொண்டனர்.

இங்கு கலாநிதி அஷ்செய்க் எம்.எல்.முபாறக் மதனி; மேலும் தெரிவிக்கையில்:-ஈமான் என்பது உள்ளத்தால் ஏற்று, நாவால் மொழிந்து, உடல் உறுப்புக்களால் செயற்படுத்துவதைக் குறிக்கும். மேலும் நல்லமல்கள் புரிவதன் மூலம் ஈமான் அதிகரிக்கும், பாவங்கள் புரிவதன் மூலம் ஈமான் குறைவடைந்து செல்லும் அல்குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான ஹதீஸ்கள் சீரிய சிந்தனையுடன்  முரண்படமாட்டாது. சுயசிந்தனைக்கும் சுயபுத்திக்கும் முரண்படுவதாகக்கூறி அவற்றை நிராகரிப்பது மிகத் தெளிவான வழிகேடாகும். அல்குர்ஆன், அஸ்ஸுன்னாவைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கான வழிமுறை, குறித்த அல்குர்ஆன் வசனத்தை அல்லது சுன்னாவை விளக்குகின்ற ஏனைய வசனங்களும், ஆதாரபூர்வமான ஹதீஸ்களும் மற்றும் ஸலபுஸ்ஸாலி ஹீன்களான முன்னோர்களின் புரிதல்களுமாகும். 

இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றக்கூடிய பித்அத்தைச் செய்கின்ற இமாமுக்குப் பின்னால் நின்று தொழுவது கூடாது. ஏனைய பித்அத்தைச் செய்கின்ற இமாம்களுக்குப் பின்னால் நின்று தொழுவது அனுமதிக்கப்பட்டதாகும். எனினும் சுன்னாவைப் பேணக்கூடிய இமாமுக்குப் பின்னால் நின்று தொழுவதே சிறந்ததாகும் என் அவர் மேலும் தெரிவித்தார்.

8 comments:

  1. What about rulers who are stealing billions of public money and clerics who support them ?

    ReplyDelete
  2. பித்அத் அனைத்தும் வழிகேடு என்றுதான் ஹதீஸ் உள்ளது அதென்ன இஸ்லாத்தை விட்டு வெளியேற்றும் பித்அத் வெளியேற்றாத பித்அத் விளக்கம் வேண்டும் ஹஸ்ரத்?

    ReplyDelete
  3. அல்லாஹ் அவனது வஹியைப் கியாம நாள்வரைப் பாதுகாப்பான!
    அல்குர்ஆனுக்கு ஆமாரபூர்வமான ஹதீஸ்கள் ஒருபோதும் மோதாது ,அவ்வாறு மோதுபவை ஹதீதுகளே இல்லை! அவை புறந்தள்ளப்படவேண்டிவையே! ஏனெனில் ஹதீதுகளும் வஹியே! இவைவன் முறண்பட பேசமாட்டான்!
    தவிர
    இன்று தவ்ஹீத் என்ற வார்த்தை அரபிப்பணத்தைப்பங்குபோட்டுக்கொள்ளப்பயன்படுகிறதே தவிர ஹக்கை ஏவி பாதிலைத் தடுப்பதிலிருந்தும் வழுகிவிட்டிருப்பதை இலங்கை மண்ணில் பார்க்கிறோம் !
    இஸ்லாமிய மூலாதாரங்களில் குர்ஆனையும் சுன்னாவையும் மட்டுமே எடுத்துக்கொள்ளவேண்டும், சலபுஸ்ஸாலிகீன்களின் கூற்றுக்களை எப்படி எடுக்க முடியும்?
    முபாறக் மதனி அவர்கள் உண்மையானவராய் இருந்தால் , அவர்கற்ற குர்ஆனையும் ஹதீதையும் ஷாஹிதாக்கிச்சொல்லட்டும் அரபுப்பணத்தை வாங்காது இலங்கையில் தாஃ்வா செய்ய தயாரா?

    ReplyDelete
    Replies
    1. ஹதீஸ்களை நிராகரிக்கும் போக்கில் முஃதசிலாக்களின் வழியில் பயணிக்கும் மவ்லவி பீ ஜே அவர்களை விட அஹ்லுஸ் ஸூன்னாவின் கொள்கையில் பயணுத்த சலஃபுஸ்ஸாலிஹீன்களை பின்பற்றுவது எந்த வகையில் தவறாகும் சகோதரா?

      Delete
    2. ஹதீஸ்களை நிராகரிக்கும் போக்கில் முஃதசிலாக்களின் வழியில் பயணிக்கும் மவ்லவி பீ ஜே அவர்களை விட அஹ்லுஸ் ஸூன்னாவின் கொள்கையில் பயணுத்த சலஃபுஸ்ஸாலிஹீன்களை பின்பற்றுவது எந்த வகையில் தவறாகும் சகோதரா?

      Delete
  4. Praying behind an Imaam who does BIDA.. is well explained by the Brother Mubarak (mawlavi).. BUT the way Title has been given is misleading the message.. as it NOT ALLOWED to pray behind such imaam completely. So be careful in giving headings.

    ReplyDelete
  5. பித் அத் களை பொறுத்தவரை செயற்பாடு சார்ந்தது வார்த்தை சார்ந்தது இதில் வார்த்தைஃ/உள்ளத்தினல் எற்படும் பித் அத் மஹ்மூம்களை பாதிப்பதில்லை செயல் சார்ந்ததெனில் பின்பற்றுவது கூடாது

    ReplyDelete
  6. https://islamqa.info/en/20885

    Praying behind followers of bid’ah, whether that bid’ah amounts to kufr or not
    The Scholars of the Standing Committee said:

    With regard to praying behind an innovator, if his bid’ah amounts to shirk, such as calling upon someone other than Allaah, making vows to someone other than Allaah, or believing that their shaykhs possess attributes that belong to Allaah alone – such as perfect knowledge, knowledge of the unseen or the power to influence events – then prayers offered behind them are not valid. If their bid’ah does not amount to shirk, such as reciting dhikrs that were narrated from the Prophet (peace and blessings of Allaah be upon him), but doing that in unison and swaying from side to side, then prayers offered behind them are valid, but the Muslim should look for an imam to pray behind who is not a follower of innovation, because that will increase his reward and is farther removed from evil.

    And Allaah is the Source of strength. May Allaah send blessings and peace upon our Prophet Muhammad and his family and companions.

    Fataawa al-Lajnah al-Daa’imah, 7/353

    ReplyDelete

Powered by Blogger.