Header Ads



துருக்கி ராணுவ பெண்கள், தலையை மறைக்கும் துணியை அணிய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

துருக்கி ராணுவத்தில் பணிபுரியும் பெண் அதிகாரிகள் தலையை மறைக்கும் துணி அணிவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவை அந்நாட்டு அரசாங்கம் விலக்கியுள்ளது.

இதன் மூலம், நீண்டகாலமாக துருக்கியின் மதச்சார்பற்ற அரசியலமைப்பின் பாதுகாவலராக பார்க்கப்படும் துருக்கி ராணுவம் இந்தத் தடையை விலக்கும் கடைசி அரச நிறுவனமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நவீன துருக்கியின் தந்தையாக போற்றப்படும் கெமால் அடாடர்க் இயற்றித் தந்த அரசியல் சட்டத்தின்படி அரசு நிறுவனங்களில் தலையை மறைக்கும் அங்கிகளை அணிவது தடை செய்யப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த பத்தாண்டுகளில், துருக்கியின் பழமைவாத அதிபரான ரெஜீப் தாயிப் எர்துவன், பள்ளிகள், பல்கலைக்கழகங்கள், சிவில் சேவை மற்றும் காவல்துறை ஆகியவற்றில் இதற்கு விதிக்கப்பட்டிருந்த தடைகளை நீக்கியுள்ளார்.

1 comment:

  1. Alhamdulillah , Turkish people are changing! Even we can notice they have started to wear headscarves and send their kids Islamic studies etc..

    ReplyDelete

Powered by Blogger.