Header Ads



பஷீர் சேகு தாவூத்திடமிருந்து..!

இன்று -12- ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்தல் செயலகத்தில் பதிவு செய்யப்பட்டு 30 ஆவது வருடம் தொடங்கும் நாள். 11.02.1987 இல் கட்சி பதிவு செய்யப்பட்டது. இந்த முப்பதாவது வருடத்தில் மூத்த போராளிகளுக்கெல்லாம் முந்திய போராளி சகோதரர் ஹஸன் அலி இல்லாமல் பேராளர் மாநாடு நடைபெறுகிறது. 

ஏற்கனவே ஏமாற்றங்கள் கனத்தும், வஞ்சனைத் தீ கனன்றும், இதயம் களன்றும் கிடந்த நமது கட்சி முப்பதாவது வருடத்தில் முகத்தையும் தொலைத்து நிற்கிறது.முப்பது வருடத்தைத் தொட்ட நேற்றைய தினம் இடம் பெற்ற கட்டாய உச்சபீடக் கூட்டத்தின் மானங்கெட்ட தீர்மானப்படி, 2015 ஆம் ஆண்டு சட்டபூர்வமற்ற வகையில் திருத்தப்பட்ட யாப்பில் உள்ள அதிகாரத்துக்கு மேலதிகமாக, மேலும் பல சர்வாதிகார சரத்துகள் தலைவருக்கு வசதியாக உள்ளே புகுத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் தலைவர் எனும் தனி நபர் மட்டும் கட்சியாக ஆக்கப்பட்டுள்ளார்.

இலங்கையின் அண்மைய வரலாற்றில், அதிகாரத்தைத் தன்னகத்தே மட்டும் தக்கவைத்து அதன்மூலம் கோலோச்ச முயன்ற சிங்கள, தமிழ் தலைவர்கள் இருவரைக் கண்டோம். இவர்கள் தமது தனிப்பட்ட தீர்மானங்களினால் எப்படி அழிந்தனர் என்பதையும் தெளிவாக நாமறிந்தோம். அழிந்த சிங்களவர் மஹிந்த ராஜபக்ச என்பதும், தமிழர் பிரபாகரன் என்பதும் இரகசியமல்ல.

இது போல தனது சர்வாதிகார அவாவினாலும், தனிப்பட்ட தீர்மானங்களாலும் ஒரு முஸ்லிம் தலைவர் அழிவை நோக்கி நகர்கிறார். அவர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஜனாப்: “ஹுக்கூம்” ஹக்கீம் ஆகும்.

சிலரின் தலைவிதி எழுதப்பட்டுவிட்டது. இன்னும் சிலரின் தலை விதி எழுதப்பட்டுக் கொண்டிருக்கிறது.

கிழக்கு வெழுக்கும்! 
சூரியன், விளக்குகளுக்கெல்லாம் பெருவிளக்காய் நின்று பாபாமரர்க்கும் விளக்கும்!

கண் மூடிகளுக்குள்ளும் சுடர் சுரந்து ஊடுருவும்! இன்ஷா அல்லாஹ்.

பஷீர் சேகு தாவூத் 

14 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
  2. we need change in leadership ASAP, we don't need this gambling Hakeem anymore as our leader.

    ReplyDelete
  3. jaffnamuslim முஸ்லிம் இவ்வாறானதொரு புகைப்படத்தை இட்டிருப்பது வாரவேட்கத்தக்கதல்ல.சம்மந்தப்பட்டவர் அனுப்பி வைத்தாலும் பத்திரிக்கை தர்மம் என்று ஒன்றை பின்பற்றி அதற்க்கு கருப்பு கலர் அடித்து இருக்க வேண்டும்.

    ReplyDelete
  4. MUSLIMS IN SRI LANKA, ESPECIALLY IN THE NORTH EAST TOO NEED A "NEW POLITICAL FORCE", A POLITICAL FORCE THAT WILL FIGHT AGAINST THE AMALGAMATION OF THE NORTH AND EAST AS MANUPILATED BY THE TNA, WIGNESWARAN AND NOW BY KARUNA AMMAN WITH HIS NEW POLITICAL TAMIL PARTY, “THE TAMIL UNITY FREEDOM PARTY” ANNOUNCED IN BATTICALOA YESTERDAY, INSHA ALLAH.
    WILL THAT MEAN THE MUSLIMS IN SRI LANKA WILL ALSO NEED A "NEW POLITICAL PARTY" INSHA ALLAH. HASSANALI, BAZEER SEGU DAWOOD, NAJEEB MAJEED, HISBULLAH, CADER MASTHAN, ATTAULLAH. Y.L.S.HAMEED AND ALL MUSLIM POLITICIANS AT GRASS-ROOT LEVEL SUPPORTING “KILAKKIN ELUCHI MOVEMENT” SHOULD GATHER TO FORM THIS “NEW MUSLIM POLITICAL FORCE”. TIME IN THE NEAR FUTURE WILL GIVE AN ANSWER TO THIS, INSHA ALLAH
    Noor Nizam, Convener - "The Muslim Voice".

    ReplyDelete
  5. * எரியும் கொள்ளிகளில் எந்தக் கொள்ளி நல்ல கொள்ளி?
    * அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும்.
    அடாது செய்தவன் படாது படுவான்.
    (முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்)

    ReplyDelete
  6. Being a Respectful Muslim Media.. We do not expect such nude pictures and drawings posted on Jaffnamuslim site... even you may bring any justification...

    Please remove it.

    ReplyDelete
  7. எதுவாக இருந்தாலும், அநாகரிகமான படங்களை இவ்வாறான தளங்களில் பிரசுக்காமல் இருப்பது நல்லது. இப்போதே அதனை எடுத்துவிடுங்கள்.

    அரசியல்தான் மானமிழந்து ரோஷம் அற்று இருக்கிறது என்றால் இத்தளமும் அப்படியா? வெட்கம்.....

    ReplyDelete
  8. பதவிவிட்டு விலகி புதியவர்கலூக்கு கொடுக்கும் எண்ணம் பசிருகோ ஹசன்லிகோ இருபதாக தெரியவில்லை சிறிய க்ட்சியில் அதிக ம்க்களுக்கு வாய்பு கொடுவெண்டிவரும் சதாகாலமும் தான்கலெ என்ர் எண்ணம்

    ReplyDelete
  9. Baaheer!!! Chumma poonge thamby, jock adikkaame

    ReplyDelete
  10. jaffnamuslim.com, இப்படத்தை பிரசுரித்திருப்பது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். ஒரு அரசியல்வாதி அனுப்பி வைத்திருக்கின்றார் என்பதற்காக நீங்கள் இதை பிரசுரித்துள்ளீர்கள். இதே படத்தை ஒரு வாசகர் அனுப்பிவைத்திருந்தால் நீங்கள் பிரசுரித்திருப்பீர்களா? முகப்புத்தகத்தில் பிடிக்காத வாசகர்களின் கருத்துக்களையே jaffnamuslim.com நீக்கி விடுவது மிக சாதாரன விடயமாகும்.
    இப்படத்தில் இருப்பது எமது தந்தை ஹஸ்ரத் ஆதம் (அலை) அவர்களும், எமது தாயார் ஹவ்வா (அலை) அவர்களுமாகும். கூடவே இருக்கும் பாம்பு சைத்தானாகும். இப்படம் அந்நிய மதத்தினரால் பைபிளின் பழைய ஏற்பாட்டில் இருக்கக்கூடிய, ஆதாம், ஏவாளின் கதையை சிறுவர்களுக்கு விளக்குவதற்காக வரையப்பட்ட கற்பனைப் படமாகும். இதை ஒரு முஸ்லிம் பிரசுரித்திருப்பது மிகவும் வருந்தத்தக்கதாகும். அல்லாஹுவுக்காக இதை நீக்கி விடுங்கள்.
    இந்தக் கட்டுரையோடு தொடர்பில்லாத சில விடயங்களையும் இங்கு பதிய விரும்புகிறேன். இலங்கை முஸ்லிம் சமூகம், ஒரு பாவப்பட்ட சமூகமாகும். படைத்த இறைவன் கொடுத்த மார்க்கத்தை எங்கோ வைத்துவிட்டு, உரிமைகளைப் பெறுவதற்காகவும், சில பிச்சைக்கார அபிவிருத்திகளுக்காகவும், அரசியல்வாதிகளின் பின்னால், அகதியாய் அலைகின்றது. இன்று கிடைக்கப்பெற்றவைகளை விடவும், இழந்தவைகள்தான் அதிகம். எமது சமூகத்தின் இன்றைய நிலைமையை எடுத்துக்காட்டுவதற்கு ஒரு சிறந்த உதாரணம், யாழ்ப்பாண முஸ்லிம் அகதிகளாகும். 26 வருடங்களாகியும் இதுவரையும் முற்றாக அவர்களை குடியேற்ற முடியாத நிலையிலேயே நாம் உள்ளோம்.
    இந்த அரசியல்வாதிகளின் மூலம் முஸ்லிம் சமூகம் எந்த உரிமையை பெற்றிருக்கின்றது எனக் கூற முடியுமா? அல்லது இந்த நாட்டிற்கு உருப்படியாக எதை இவர்கள் செய்துள்ளார்கள் எனக்கூற முடியுமா?. இனவாதத்தை வளர்த்த்துதான் இவர்கள் செய்த மிகப்பெரிய சாதனையாகும்.
    தீகவாபியில் முஸ்லிம்களின் ஆயிரக்கணக்கான காணிகளை அரசாங்கம் அபகரித்துவிட்டது, அவற்றை மீட்க வேண்டும் என்ற தொணியோடு ஆரம்பிக்கப்பட்ட முஸ்லிம் கட்சி, கடந்த வாரத்திலும் இதே கதைதான் பேசிக்கொண்டிருக்கின்றது. எத்தனை ஏக்கர் காணிகளை இதுவரை தீகவாபியில் மீட்டுள்ளார்கள்?.
    தயவு செய்து யாரும் அரசியல்வாதிகளை குறை சொல்லவோ, குற்றம்காணவோ வேண்டாம். அரசியல்வாதிகள் தங்களின் சுய இலாபத்திற்காக அரசியலில் உள்ளார்கள் என்பது பொது மக்களாகிய உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், அது அரசியல்வாதிகளின் பிரச்சினை இல்லை. அது புரிந்து கொள்ளாதவர்களின் பிரச்சினையாகும்.

    ReplyDelete
  11. That picture is a picture illustrating homosexuals, I guess its a honest mistake someone let know BSD !

    ReplyDelete
  12. nirvaana padam potta idaththil nee
    thoppiudan ippothu?

    ReplyDelete
  13. My First Comment should not be posted here.. As it was posted due to the wrong NUDE drawing representing Adam and Eve as a picture to the same above article.

    Thanks that you have replaced a picture suitable to this article.. But you have kept my comment related your wrong pic., but which might be misunderstood for he current picture.
    This is for Jaffnamuslim.com... Be professional in your editing.

    ReplyDelete

Powered by Blogger.