Header Ads



506 தொன் லக்கேஜுடன், பயணம் செய்யும் சவுதி அரசர்

சவுதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அசிஸ் அல் சவுத் 9 நாள் அரசு முறைப் பயணமாக இந்த வாரத்தில் இந்தோனேசியா செல்லவுள்ளார். 

அவருடைய பயணத்துக்காக மட்டும் 506 டன் எடைக்கு லக்கேஜ் கொண்டு செல்லவுள்ளார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. 

அந்த லக்கேஜில் இரண்டு எஸ்600 ரக பென்ஸ் கார்கள், மற்றும் இரண்டு லிப்ட் கொண்டு செல்கிறார். 

சவுதி மன்னரின் லக்கேஜ்களை கையாள்வதற்கு தனியார் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது. 

அந்த நிறுவனத்தின் சார்பில் லக்கேஜை கையாள்வதற்கு 572 ஊழியர்களை நியமித்துள்ளனர். 

சவுதி அரேபிய வரலாற்றில் அப்துல் அசிஸ் சுமார் 46 ஆண்டுகள் கழித்து, இந்தோனேசியாவுக்குச் செல்லும் முதல் மன்னர். 

சவுதி மன்னரின் இந்தோனேசியப் பயணத்தில், அவருடன் சேர்ந்து 10 அமைச்சர்கள், 25 இளவரசர்கள், 110 பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட 1,500 பேர் செல்லவுள்ளனர்.

-விகடன்-

9 comments:

  1. If He commits mistakes,, he will carry it to the day of judgement. But for talking personnel issue of a person whether it is true or falls.. the writer has to carry it to the day of judgment.

    If he commits anything against Islam in misguiding people, then every one should warn the public of his religious mistakes.. BUT not his worldly and personnel issues. OK fine then who will correct them.. ? Yes Islam guides us in a proper way.. "It is the responsibilities of scholars to go in person to advice and warn them for their (Rulers) mistakes.

    May Allah Guide the Rulers and Us into the way of Islam.

    We spend time to rectify the mistake of others.. But we neglect our mistakes to be rectified which will harm us on the day of judgement.

    ReplyDelete
    Replies
    1. Yes, you have a wishful thinking scholars will go and admonish him. Well I think you are very naive to think like that as everyone knows how corrupt the entire Saud clan.

      Delete
  2. அல்லாஹ் பாதுகாப்பானாக! இது வீண் விரயத்தின் உச்ச கட்டம்.
    வீண் விரயம் செய்பவரை அல்லாஹ் சபிக்கிறான் என்பது தெரிந்தும் இப்படிச் செய்கிறார்கள். இது தேவையா? அல்லாஹ் கொடுப்பதுபோல் திரும்ப எடுத்துக் கொள்வான். அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும்.

    ReplyDelete
  3. வீண் விரயம் செய்கிறார்

    ReplyDelete
  4. இந்த 110 பாதுகாப்பு அதிகாரிகளில் எத்தனை பேர் இவரது கபுருக்குள் இவருக்குப் பாதுகாப்பு வளங்க வருவார்கள் ?

    இல்லையா......... இந்த 1500 பேரில் எத்தனை பேர் இவரது கபுருக்குள் இவருக்குப் பணிவிடை செய்ய வருவார்கள் ??

    குறைந்த பட்சம் ஒருவரையாவது இவரால் அப்போது பெற்றுக்கொள்ள முடியுமாயின் - இப்போதய அவரது இந்த ஆடம்பரப் பயணம் வெற்றியானதுதான்.

    இல்லையென்றால் இந்தப்பகட்டு அந்தக் கபுருவரைதான்...........

    ReplyDelete
  5. Hehehe 😂😂😂😂 Islam peranthe Nadu. Solwathallam seyyamudeyaathu.

    ReplyDelete
  6. What a waste,this is Islam which they want to propagate.This is shame and they are insulting Islam.What those who criticize Iran and Shia say about this?Muslim world is burning but this man going picnic in wasting money and country's economy is in trouble.

    ReplyDelete
  7. கடந்த கால சவூதி மன்னர்களில் சல்மான் ஒரு வித்தியாசமான நடவடிக்கை கொண்டவர் முஸ்லிம்கள் விடயத்தில் கடுமையாக சிந்திக்க கூடியவராகவும் இருக்கிறார்,ஆகவே இந்த விடயத்திலும் அவர் ஏதும் வித்தியாசமாக சிந்தித்து இருக்கலாம்.நாம் அவசரப்பட்டு பாவத்தை தேட வேண்டிய அவசியம் இல்லை,ஆடாம்பரத்தை விரும்பாத ஒருவர் சல்மான் ,பொறுத்து இருந்து பார்ப்போம்,

    ReplyDelete

Powered by Blogger.