Header Ads



அமெரிக்காவிடமிருந்து ஆயுதம் வாங்குவதில், உலகிலேயே 3 முஸ்லிம் நாடுகள் முதலிடம்

பனிப்போருக்கு பின்னரான உலக ஆயுத விற்பனை அதன் உச்சத்தை எட்டியிருப்பதாக புதிய ஆய்வொன்று கண்டறிந்துள்ளது.

மத்திய கிழக்கு மோதல் தீவிரமடைந்துள்ளது, தென் சீன கடற்பகுதியில் ஏற்பட்டிருக்கும் பதற்ற சூழல் மற்றும் ரஷ்யாவினால் அதன் அண்டை நாடுகளுக்கு ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தல் போன்றவை ஆயுத விற்பனை அதிகரிக்க காரணிகளாக ஸ்டொக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தின் ஆய்வொன்று குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2016 வரையான ஐந்து ஆண்டுகளில் ஒட்டுமொத்த உலக ஆயுத விற்பனையில் அமெரிக்கா அதிகபட்சமாக 33 வீதமான ஆயுதங்களை ஏற்றுமதி செய்திருப்பதோடு ரஷ்யா இரண்டாவது இடத்திலும் சீனா மூன்றாவது இடத்திலும் காணப்படுகின்றன. அமெரிக்கா கடந்த ஐந்து ஆண்டுகளில் 47 வீதமான ஆயுதங்களை மத்திய கிழக்கு நாடுகளுக்கே ஏற்றுமதி செய்துள்ளது. அமெரிக்காவின் பிரதான கொள்வனவு நாடுகளாக சவூதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் துருக்கி காணப்படுகின்றன.

2012 முதல் 2016 வரையான முக்கிய ஆயுதங்களின் உலக அளவிலான மொத்த இறக்குமதியை, இந்த காலத்திற்கு முந்தைய 5 ஆண்டு காலத்தோடு ஒப்பிடுகையில் 8 சதவீதம் அதிகரித்திருப்பதாக மேற்படி ஆய்கு குறிப்பிட்டுள்ளது. 

2 comments:

  1. The money Saudi spend arm is enough to feed Muslim world and yet questions of Bida is a big issue for clerics to day ...yet JM support Saudi

    ReplyDelete
  2. in the list there are two other countries as wel and why saudi only irritates somebody in all matters even when it comes to security issues. what would be achieved by abusing a muslim nation.

    ReplyDelete

Powered by Blogger.