Header Ads



மரணத்தின் விளிம்பில், 14 லட்சம் குழந்தைகள்


சோமாலியா, நைஜீரியா, தெற்கு சூடான், ஏமன் ஆகிய நாடுகளில், போதிய போஷாக்கு இன்மையால் 14 லட்சம் குழந்தைகள் சாவின் விளிம்பில் உள்ளதாக யுனிசெஃப் கூறியுள்ளது. குறிப்பாக, இந்த நான்கு ஆப்ரிக்க நாடுகளிலும் பஞ்சம் கடுமையாக வாட்டுகிறது. சோமாலிய மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டோர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக யுனிசெஃப் கூறியுள்ளது.

குறிப்பாக, வடகிழக்கு நைஜீரியாவில் 4,50,000 குழந்தைகள், தெற்கு சூடானில் 2,70,000 குழந்தைகள் போதிய போஷாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உடனடியாக உதவி வேண்டும் என்று யுனிசெஃப் கூறியுள்ளது. மேலும், ஏமனில் 4,62,000 குழந்தைகளும் போதிய போஷாக்கு இன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். முக்கியமாக, ஏமனில் கடந்த 2014-ன் போது ஒப்பிடும் போது இது 200 சதவீதம் அதிகம் என்று யுனிசெஃப் கூறியுள்ளது.

1 comment:

  1. Arab sheiks weasting money for sex & drugs is enough to feed all those countries!

    ReplyDelete

Powered by Blogger.