Header Ads



பௌத்த மதவெறியினால், மியான்மாருக்குள் ஊடுருவும் IS தீவிரவாதம்

ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடனான மியான்மாரின் பிரச்சினைகள் உலக வரைபடத்தில் சிறிய விடயமாகவே காணப்படுகின்றன. உலகின் மிகப் பெரிய பயங்கரவாத வலைப்பின்னல்களில் ஒன்று தற்போது மியான்மார் அரசாங்கத்தை அச்சுறுத்தி வருகின்றது. மியான்மாரில் வாழும் சிறுபான்மை ரொகிங்யா முஸ்லீம் சமூகம் மீதான மியான்மார் அரசாங்கத்தின் கண்டிக்கத்தக்க நடவடிக்கையே இதற்கான காரணமாகும். இந்த உண்மையை அறிந்த சிலர் இது தொடர்பில் அதிர்ச்சியடைய மாட்டார்கள். ஆனாலும் இந்த விடயம் தொடர்பில் இஸ்லாமிய அரசிடமிருந்து எதிர்ப்புக் கிளம்பியுள்ளது.

சிறிலங்காவைப் போலவே, மியான்மாரில் வாழும் பௌத்தர்களுக்கும் சமாதானம் என்பது தொலைவிலேயே காணப்படுகிறது. இந்த மக்களின் ஒரு சாரார் யுத்தத்தில் ஈடுபடுகின்றனர். சிறிலங்காவில் வாழும் சிங்கள பௌத்த அரசாங்கமானது 2009ல் 160,000 இற்கும் மேற்பட்ட இந்து மற்றும் கத்தோலிக்க மதங்களைச் சேர்ந்த தமிழ் மக்களைப் படுகொலை செய்தது. மியான்மாரில் வாழும் ரொகிங்யா முஸ்லீம்கள் மீதான இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையானது சிறிலங்காவில் இடம்பெற்றது போன்றே நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. இது இந்த மக்கள் மத்தியில் அச்சநிலையைத் தோற்றுவித்துள்ளது.

மியான்மார் அல்லது பர்மா என அழைக்கப்படும் ஆசிய நாடானது றக்கின் பௌத்தர்கள் வாழும் ஒரு நாடாகும். இந்த நாடானது பிரித்தானியாவின் கொலனித்துவ ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து இராணுவ அதிகாரத்துவ ஆட்சியானது பல பத்தாண்டுகளாக மியான்மிரில் இடம்பெற்றது. மியான்மாரின் அரசியல் வரலாற்றில் றக்கின் பௌத்த சமூகத்தைச் சேர்ந்த ஆங் சாங் சூயி மிகவும் பிரபலமானவராவார். இவர் உண்மையில் ரொகிங்யா முஸ்லீம் சமூகத்திற்காக எதையும் செய்யவில்லை. அத்துடன் இவர் ஒடுக்கப்பட்ட ஜனநாயகத்தின் பிரதிநிதியாகக் கருதப்பட்ட போது ரொகிங்யா முஸ்லீம் சமூகத்திற்காக குரல்கொடுக்க மறுத்துவிட்டார்.

இதனால் இவர் மீது மியான்மாரில் வெறுப்பும் ஏற்பட்டது. பூமியில் வாழும் மக்களில் மிகவும் துன்புறுத்தப்பட்ட மக்கள் என ஐக்கிய நாடுகள் சபையால் அறிவிக்கப்பட்ட ரொகிங்யா முஸ்லீம்கள் நாடற்ற மக்களாகவே வாழ்கின்றனர். மத வெறுப்புக்கள் மியான்மாரின் பௌத்தர்களின் தோற்றமாகவே எப்போதும் இருந்து வருகிறது என்பது 2012ல் ரொகிங்யா முஸ்லீம்களால் பௌத்த பெண்மணி ஒருவர் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலைசெய்யப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட போது இவ்விரு மதத்தவர்களுக்கும் இடையிலான விரோதம் மேலும் தீவிரமுற்றது.

இவ்வாறு கொலை செய்யப்பட்ட பெண்ணின் இறந்த உடலமானது ஒளிப்பதிவு செய்யப்பட்டு பத்திரிகைகளில் வெளியிடப்பட்டு 24 மணித்தியாலங்களின் பின்னர் ரொகிங்யர் அல்லாத முஸ்லீம் ஆண்கள் பலர் காடையர்களால் பேருந்து ஒன்றிலிருந்து வெளியே இழுத்தெடுக்கப்பட்டு வீதிகளில் வைத்துக் கொலை செய்யப்பட்டனர். பெண்ணொருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டு பல மணித்தியாலங்களின் பின்னரே காடையர்களால் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். பர்மிய ரொகிங்யர்கள் மீதான இனப்படுகொலையானது பர்மிய றக்கின் பௌத்தர்களாலேயே ஆரம்பித்து வைக்கப்பட்டது.  

மியான்மாரில் வாழும் ரொகிங்யா மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் பல்வேறு குற்றங்கள் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுடன் நான் பணியாற்றியுள்ளேன். அந்தவகையில் அவர்களின் பாதிப்புக்களை நான் மின்னஞ்சல் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளேன்.

மியான்மாரில் உள்ள பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடாத்தப்பட்டுள்ளன. சில பள்ளிவாசல்களில் சிறுவர்களும் இருந்துள்ளனர். றோகின்யர்களின் முழுமையான கிராமங்களும் எரித்து அழிக்கப்பட்டுள்ளன. அவர்களுடைய உடைமைகளும் அழிக்கப்பட்டன. மொபெட்களில் பயணிக்கும் பௌத்தர்கள் தமது கைகளில் கூரிய ஆயுதங்களுடன் றோகின்ய முஸ்லீம்களைப் படுகொலை செய்யும் காட்சிகள் பதிவாக்கப்பட்டுள்ளன. பர்மாவில் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு சித்திரவதைகள் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட காட்சிகளையும் நான் ஆவணப்படுத்தியுள்ளேன். மியான்மாரைச் சேர்ந்த பௌத்த தீவிரவாதிகள் தமது பௌத்த மதவாதத்தைக் காண்பிப்பதற்காக தமது மத அடையாளத்தை (swastikas)  தாம் அணியும் ரீசேட்டுக்களில் பொறித்திருப்பார்கள்.

மியான்மாரில் வாழும் றோகின்ய முஸ்லீம்கள் மீது பல ஆண்டுகளாக அந்நாட்டு பௌத்தர்களால் மேற்கொள்ளப்பட்டு வந்த தாக்குதல்கள் மற்றும் சித்திரவதைகளுக்கு எதிராகவே தற்போது ISIL  தீவிரம் பெற்றுள்ளது. இத்தீவிரவாத அமைப்பிற்குள் தற்போது றோகின்ய முஸ்லீம்கள் உள்வாங்கப்பட்டு மியான்மாரின் அரசாங்கத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது.

ஆனாலும் றோகின்ய முஸ்லீம்களுக்கு எதிராக இடம்பெற்ற தாக்குதல்கள் தொடர்பாக பல்வேறு ஆவணங்கள் காணப்படுகின்ற போதிலும் இவ்வாறான தாக்குதல்கள் எவையும் இடம்பெறவில்லை என மியான்மார் அரசாங்கம் மறுத்து வருகிறது. மியான்மாரின் பௌத்த அடிப்படைவாத  தலைவராக விளங்கும் விராது என்பவர் முஸ்லீம்கள் மற்றும் கத்தோலிக்கர்களைக் குறிவைத்து பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார்.

2013 ஜூலை மாதம் வெளியாகிய ‘ரைம்’ சஞ்சிகையின் முகப்பில் விராதுவின் முகம் பொறிக்கப்பட்டிருந்ததுடன் ‘பௌத்த பயங்கரவாதத்தின் முகம்’ எனவும் தலைப்பிடப்பட்டிருந்தது. ஆனாலும் அமெரிக்காவில் வெளியிடப்பட்ட இந்த சஞ்சிகையின் பதிப்பின் முகப்பில் ஒரு சுவரை மூன்று பேர் வர்ணம் தீட்டுவது போன்ற காட்சி பதிவாக்கப்பட்டிருந்ததுடன் அதன் கீழ் ‘எங்களை சேவை எப்படிக் காப்பாற்ற முடியும்’ எனத் தலைப்பிடப்பட்டிருந்தது.

நவீன வரலாற்றை அமெரிக்கர்கள் குழிதோண்டிப் புதைக்கின்றனர் என்பதற்கு இதைவிட வேறெந்த சிறந்த சாட்சியமும் இருக்க முடியாது என நான் நினைக்கிறேன். இவ்வாறான நடைமுறை காரணமாகவே அமெரிக்கர்கள் அறியாமையில் வாழ்கின்றனர். இதனாலேயே ISIL மியான்மாரை நோக்கி வருவதுடன் முற்றிலும் வேறுபட்ட பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

ஆங்கிலத்தில் – Tim King வழிமூலம்      – Salem-News மொழியாக்கம் – நித்தியபாரதி

No comments

Powered by Blogger.