Header Ads



பேஸ்புக்குக்கு அடிமையான மஹிந்த

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தற்போதைய நிலை குறித்து கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மஹிந்த ராஜபக்சவுக்கு புதிதாக வேலைவாய்பொன்று கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் அந்த தொழிலுக்கு சம்பளம் கிடைக்காது. அது தன்னார்வு தொண்டர் போன்ற தொழிலாகும். மஹிந்த ஜனாதிபதியாக செயற்பட்ட காலப்பகுதியில் “என்ன இது எந்த நேரமும் போனை நோண்டிக் கொண்டிருக்கின்றீர்கள்”... “கேள்வி ஒன்று கேட்டால் பதில் வழங்குவதில்லை என மஹிந்த, தனது மூன்று மகன்களையும் கண்டித்திருந்தார். எனினும் தற்போது மஹிந்த அந்த நிலைமைக்கு வந்துள்ளதாக கூறப்படுகின்றது.

காலை 5 மணிக்கு எழும்பும் மஹிந்த கஞ்சி அல்லது கோப்பி ஒன்று கிடைக்கும் வரையில் முதல் வேலையாக பேஸ்புக் பார்ப்பதை வழக்கமாக்கிக் கொண்டுள்ளார். கோப்பி கிடைத்தவுடன் ஒரு கையில் கோப்பி கோப்பையை பிடித்துக் கொண்டு மற்ற கையில் கையடக்க தொலைப்பேசியை பிடித்துக் கொண்டு பேஸ்புக் பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன் பின்னர் காலை நடை பயிற்சியில் ஈடுபடும் போதும் கையடக்க தொலைப்பேசியை பையில் எடுத்து செல்ல ஆரம்பித்துள்ளார். 10 நிமிடத்திற்கு ஒரு முறை நடைப்பயிற்சியை நிறுத்திவிட்டு கையடக்க தொலைப்பேசியில் பேஸ்புக் பார்த்து சிரிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

நடை பயிற்சியின் பின்னர் காலை உணவின் போதே ஷிரந்தி மஹிந்தவை சந்திப்பார். இருவரும் ஒருவருக்கு ஒருவர் கதைத்துக் கொள்ளாமல் கையடக்க தொலைப்பேசியை பார்த்தவாறு மஹிந்த உணவையும் பார்க்காமல் எதையாவது சாப்பிடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. ஏதாவது கதைக்க ஆரம்பித்தாலும் பேஸ்புக்கில் உள்ள விடயத்தை பற்றி தான் மஹிந்த கதைப்பார். தாய், தந்தையின் இந்த செயற்பாட்டினால் மூன்று மகன்களும் குழப்பமடைந்துள்ளனர். அவர்களின் கேள்விகளுக்கு கையடக்க தொலைப்பேசியை பார்த்தவாறே மஹிந்த பதிலளித்துள்ளார்.

“நான் இந்த பேஸ்புக்கில் இருந்து எப்படி வெளியே வருவதென ஆராய்ந்து வருகின்றேன்”.. என மஹிந்த அண்மையில் நாமலிடம் கூறிள்ளார். பெருமைக்குரிய தந்தையின் அந்த கருத்திற்கு நாமல் பதில் பேசாமல் சென்றுள்ளார். “வசிய பந்தை முன்னர் அழுத்திக் கொண்டிருந்ததனை போன்று தற்போது இந்த போனை அழுத்திக் கொண்டிருந்தால் நாங்கள் முன்னேற்றமடைந்து விடலாம்”... என ஷிரந்தி ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

மஹிந்தவின் பேஸ்புக் அடிமைத்தனத்தினால் அவரை பார்க்க வருபவர்களுக்கும் தற்போது பிரச்சினையாக உள்ளதென தெரிவிக்கப்படுகின்றது. முக்கியமான பேச்சுவார்த்தைகளின் போதும் மஹிந்த பேஸ்புக் பார்க்க ஆரம்பித்துள்ளார். குறித்த கையடக்க தொலைப்பேசிக்கு வரும் அழைப்புகளுக்கும் நொடிப்பொழுதே பதில் வழங்கி வருகின்றார். தனியாக இருப்பதையே மஹிந்த தற்போது அதிக விரும்புகின்றார். ஒரு பக்கத்தில் ஷிரந்தி தனது வேலைகளை செய்து கொண்டு, மறுபக்கத்தில் பேஸ்புக் பார்ப்பதனையே நாள் முழுவதும் தொழிலாக மஹிந்த மேற்கொள்ளவதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜனவரி முதலாம் திகதி மஹிந்தவிடம் ஆசிர்வாதம் பெற்றுக் கொள்ள வந்த மகன்களின் ஐ.போன் சிறியதாக உள்ளது. எனக்கு பெரிய திரையை கொண்ட நல்ல போன் ஒன்றை கொண்டு வந்து தாருங்கள்” என மஹிந்த கூறியுள்ளார். என்னை பேஸ்புக் ஊடாகவே வீழ்த்தினார்கள். நானும் பேஸ்புக் ஊடாகவே வீழ்த்தவுள்ளேன்.. என மஹிந்த தெரிவித்துள்ளார்.

இது நகைச்சுவை அல்ல. மஹிந்த என்பவர் வித்தியாசமான திறமையை கொண்ட ஒருவர். விரைவில் மஹிந்த ஆசிரியராக செயற்படும் இணையத்தளம் ஒன்றும் உருவாகுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இந்த ஆண்டு அரசாங்கத்தை கவிழ்ப்பதாக மஹிந்த கூறுகின்ற நிலையில் இந்த விடயம் தொடர்பில் அவதானமாக இருக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.