Header Ads



அரசாங்கத்தை பதவிவிலக வலியுறுத்தி, பிக்குணி சாகும்வரை உண்ணாவிரதம்

அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, பெண் பௌத்த துறவி ஒருவர் கண்டி தலதா மாளிகைக்கு எதிரில் சாகும் வரையான உணவு தவிர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளார்.

பிக்குணி இன்று -22- அதிகாலை முதல் இந்த உண்ணா நிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பிக்குணியின் பெயர் விபரங்கள் வெளியாகவில்லை.

தனது போராட்டம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள பிக்குணி, 

தற்போதைய அரசாங்கம் விரும்பி ஆட்சியில் இருந்து விலகும் வரை உண்ணாநிலை போராட்டத்தை நிறுத்த மாட்டேன். அரசாங்கம் தான் எண்ணியபடி செயற்பட்டு வருகிறது. இந்த பூமியை நேசிக்கும் பௌத்தன் என்ற வகையில் சிங்கள இனம் அழிவை பொறுத்து கொள்ள முடியாது நான் இங்கு வந்து அமர்ந்துள்ளேன் எனக் கூறியுள்ளார்.

தான் காடுகளில் தவத்தில் ஈடுபட்டு வந்ததாகவும் இறுதியில் அரசாங்கத்திற்கு எதிரான இந்த சாகும் வரையான உண்ணா நிலைப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடு அழிந்து விடும் என்று என் மனத்திற்கு தோன்றியது. இதனையடுத்து என்னால், தவம் செய்ய முடியவில்லை. நான் எவ்வளவோ முயன்றும் மனதை கட்டுப்படுத்தி தவத்தில் ஈடுபட முடியவில்லை.

எனக்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தற்போது எனது வழி மாறியுள்ளது எனவும் பிக்குணி மேலும் தெரிவித்துள்ளார்.


2 comments:

  1. இவருக்கு மன நோய் முற்றிவிட்டது உடனடியாக மநோதத்துவ நிபுணரிடம் காட்ட வேண்டும்,

    ReplyDelete
  2. அம்மா ஏன் இந்த முடிவுக்கு வந்தீர்கள் ? தவறான முடிவால் சந்ததியற்று தனிமரமாக நிற்பதனாலா?

    ReplyDelete

Powered by Blogger.