Header Ads



நாட்டில் காவிவாதம் ஊற்றெடுக்கின்றது - மங்கள சமரவீர

வரலாற்று காலத்திலிருந்து இலங்கை பெளத்தர்கள் மீது தொடரும் ஆக்கிரமிப்புக்கள் 2500 வருடங்களுக்கு பின்னரான இன்றும் குறைவில்லை. இந்நிலையில் நாட்டினை பிளவு படுத்தி பிரிவினைவாதிகளுக்கு எழுதிக்கொடுக்க  அரசாங்கம் முயற்சிக்கின்றது என தேசிய சங்க சபை தெரிவிக்கின்றது.

இதனை எதிர்க்கின்றமையினாலேயே விமல் வீரவன்ச கைது செய்யப்பட்டார். இதன் அடுத்த கட்டமாக விரைவில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோரும் கைது செய்யப்படுவர் என தேசிய சங்க சபையின் தலைவர் மாதுரு ஒயே தம்மிஸ்ஸர தேரர் தெரிவித்தார்.

கொழும்பு தேசிய நூலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார், அவர் மேலும் தெரிவிக்கையில், 

தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகள் எவையும் ஏற்றுக்கொள்ள முடியாதுள்ளது. இலங்கையில் பெளத்த மதத்திற்கு முரணான செயற்பாடுகளை அரசாஙகம் முன்னெடுத்து வருகின்றது. மறுபுறத்தில் இதற்கு எதிராக குரல் கொடுக்கும் தேசிய தலைவர்கள் சிறையிடப்படுகின்றனர்.

அம்பாந்தோட்டையில் அண்மையில் நாட்டினை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்கின்றமைக்கு எதிராக போராட்டம் நடத்தியபோது பிக்குகளின் காவி உடைகளை களைந்து துரத்தியடிக்குமாறு பொலிஸ் மா அதிபர் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார். 

இவற்றையெல்லாம் இந்த நாட்டினை சங்க சபையான நாங்கள் அனுமதியோம். வெளிவிவகார அமைச்சர் நாட்டில் காவிவாதம் ஊற்றெடுக்கின்றது என்று குற்றம் சாட்டியுள்ளார. அவ்வாறு பிக்குகளை காவிதாரிகள் என்று அமைச்சர் குறிப்பிடுவாராயின் புத்தரும் ஒரு காவிதாரி என்றே குறிப்பிட்ட  வேண்டும். அவ்வாறான வார்த்தை பிரயோகங்கள் பெளத்தர்களையும் புத்த பெருமானையும் நிந்தனை செய்வதாக அமையும்.

இந்த விவகாரங்கள் குறித்து ஜனாதிபதி ஆராய்ந்து பார்க்க வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு கடிதம் அனுப்பியுள்ளோம். வரலாற்றிலும் நாட்டில் இவ்வாறான இன்னல்களுக்கு பிக்குகள் முகம்கொடுத்தனர். ஆனால் அவ்வாறு பிக்குகளுக்கு இன்னல்களை ஏற்படுத்தி அரசியல் வாதிகள் இன்று அடையாளம் இல்லாமல் போயுள்ளனர்.  பிக்குகளை  நிந்தித்தால் இதுதான் நிலைமை என்றும் தற்போதைய ஆட்சியாளர்கள் உணர்ந்துக்கொள்ள வேண்டும்.

இந்த நிலைமை நீடித்தால் பெரும் அழிவுக்கு முகம்கொடுக்க நேரிடும். விமல் வீரவன்ச உள்ளிட்ட தேசிய தலைவர்கள் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். இதன் அடுத்த கட்டமாக முன்னாள் ஜனாதிபதியும் முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய  ராஜபக்சவுமே கைது செய்யப்படுவர். 

No comments

Powered by Blogger.