Header Ads



தக்பீர் முழக்கத்துடன், முஸ்லிம் தரப்பு மேற்கொண்ட தீர்மானங்கள்

வில்பத்து பகுதியில் முஸ்லிம்கள் குடியிருக்கும் பகுதிகளை வனத் திணைக்களத்திற்கு சொந்தமாக்கிக் கொள்ளுமாறும், அதுதொடர்பில் வர்த்தமானி அறிவித்தலை வெளியடுமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளமை தொடர்பில் ஆராயும் முக்கிய கூட்டமொன்று நேற்று -02- மாலை கொழும்பில் நடைபெற்றுள்ளது.

அமைச்சர்கள் பௌசி, ஹலீம், றிசாத், ஹிஸ்புல்லா உள்ளிட்டவர்களுடன் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜம்மியத்துல் பிரதிநிதிகள், முஸ்லிம் சமூக செயற்பாட்டாளர்களும் பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதி வெளியிட்ட கருத்துக்களினால் வடக்கில் மீளக்குடியேறியுள்ள முஸ்லிம்களுக்கு காத்திருக்கும் சவால்கள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.

2012 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல், தற்போது அங்கு குடியேறியுள்ள முஸ்லிம்களை இலக்குவைத்து வெளியிடப்படவுள்ள வர்த்தமானி அறிவித்தல் பற்றியும் இங்கு ஆராயப்பட்டுள்ளது.

இதன்போது உடனடியாக பிரதமர் ரணிலை சந்திப்பதெனவும், பிரதமரிடம் இதுபற்றி முறையிடுவது எனவும், உண்மை நிலையை ஊடகங்களுக்கு எடுத்துக்கூறுவது எனவும், வடக்கு முஸ்லிம்களின் நலன் தொடர்பில் 21 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களும் இணைந்து செயற்படுவதெனவும் இதன்போது தக்பீர் முழக்கத்துடன் தீர்மானங்கள் நிறைவேற்றபட்டுள்ளன.

1 comment:

Powered by Blogger.