Header Ads



முஸ்லிம்களின் சந்­தோஷம் நீடிக்­க­வில்லை - ஹலீம்


வில்­பத்­துவில் தங்­க­ளது பூர்­வீகக் காணியில் குடி­யே­றி­யுள்ள மக்­களை அகற்ற முடி­யாது. வில்­பத்து வனப்­பி­ர­தேசம் விஸ்­த­ரிக்­கப்­ப­டு­வ­தென்றால் அவர்­க­ளுக்கு வேறு இடங்­களில் காணி வழங்­கப்­பட வேண்டும் என அனைத்து மதங்­க­ளி­னதும் அமைச்­சர்கள் கலந்து கொண்ட கூட்­டத்தில் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. 

கூர­கல மற்றும் வில்­பத்து விவ­காரம் தொடர்பில் ஜனா­தி­பதி மற்றும் பிர­த­மரை சந்­தித்து கலந்­து­ரை­யா­டு­வ­தெ­னவும் அஸ்­கி­ரிய மற்றும் மகா­நா­யக்க தேரர்­களைச் சந்­திப்­ப­தெ­னவும் இணக்கம் காணப்­பட்­டது. 

நேற்று மதியம் நீதி­ய­மைச்சில் நீதி­ய­மைச்­சரும் புத்­த­சா­சன அமைச்­ச­ரு­மான விஜே­தாச ராஜ­ப­க்ஷவின் தலை­மையில் அனைத்து மதங்­க­ளுக்­கு­மான அமைச்­சர்­களின் சந்­திப்­பொன்று இடம்­பெற்­றது.

இச்­சந்­திப்பில் முஸ்லிம் சமய விவ­காரம் மற்றும் தபால், தபால்­துறை அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், இந்­து­ச­மய மீள் குடி­யேற்றம், புனர்­வாழ்வு மற்றும் சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன். கிறிஸ்­தவ மதம், சுற்­றுலா மற்றும் காணி அமைச்சர் ஜோன் அம­ர­துங்க, தேசிய கலந்­து­ரை­யாடல் அமைச்சர் மனோ கணேசன் ஆகி­யோரும் கலந்து கொண்­டனர்.

இனங்­க­ளுக்­கி­டையே நிலவும் சந்­தே­கங்கள், பிரச்­சி­னைகள் பற்றி கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­துடன் அவற்­றுக்­கான தீர்­வுகள் பற்­றியும் ஆலோ­சிக்­கப்­பட்­டன. அர­சாங்க திணைக்­க­ளங்­க­ளிலும் நிறு­வ­னங்­க­ளிலும் சிங்­கள மொழியில் மாத்­திரம் கட­மைகள் மேற்­கொள்­வதால் தமிழ் பேசும் மக்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள் முன்­வைக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து அர­சாங்க திணைக்­க­ளங்­க­ளிலும் நிறு­வ­னங்­க­ளிலும் கரு­மங்கள் தமிழ்­மொ­ழி­யிலும் இடம்­பெ­று­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­வ­தெ­னவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

முஸ்லிம் சமூ­கத்­தினர் எதிர்­கொள்ளும் பிரச்­சி­னைகள், சவால்கள் பற்றி அமைச்சர் எம்,எச்,ஏ.ஹலீம் விளக்­கினார். கடந்­த­கால அர­சாங்­கத்தின் ஆட்­சிக்­கா­லத்தில் முஸ்­லிம்கள் பெரிதும் பாதிக்­கப்­பட்­டனர்.

அவர்­க­ளுக்­கெ­தி­ராக பல நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. நல்­லாட்சி அர­சாங்கம் பத­வி­யேற்­றதும் முஸ்­லிம்கள் தமது பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு கிடைத்­து­விட்­டது, பாது­காப்பு கிடைத்­து­விட்­டது என்று சந்­தோ­ஷ­ம­டைந்­தனர். ஆனால் அச்­சந்­தோஷம் நீடிக்­க­வில்லை.

மீண்டும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான நட­வ­டிக்­கைகள், சவால்கள் என்­பன தோற்றம் பெற்­று­விட்­டன. இந்­ந­ட­வ­டிக்­கை­களை மேற்­கொண்­டுள்­ள­வர்­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­க­வேண்டும்.

ஐ.எஸ் தீவி­ர­வா­தி­க­ளுடன் எமது நாட்டு முஸ்­லிம்­க­ளுக்கு தொடர்பு இருக்­கி­றது என்று வெளி­யி­டப்­பட்ட கருத்­துகள் முஸ்லிம் மக்­களை தவ­றான கண்­ணோட்­டத்தில் பார்ப்­ப­தற்கு வழி­ய­மைத்து விட்­டது. முஸ்­லிம்­களை ஏனைய சமூ­கத்­தினர் தவ­றான கருத்­துடன் நோக்­கு­கி­றார்கள்.

முதலில் எமக்­கி­டை­யே­யான சந்­தே­கங்கள் தீர்க்­கப்­பட வேண்டும். முஸ்­லிம்­களின் பிர­தான அமைப்­பான உலமா சபை சந்­தே­கங்கள் ஏதும் இருந்தால் கேட்டுத் தெரிந்து கொள்­ளுங்கள். சந்­தே­கங்­க­ளுக்கு தெளிவு பெற்­றுக்­கொள்­ளுங்கள் என்று தெரி­வித்­துள்­ளது. எனவே இனங்­க­ளுக்­கி­டையில் நிகழும் சந்­தே­கங்கள் முதலில் தீர்க்கப்பட வேண்டுமென்றார். 

-ARA.Fareel-

No comments

Powered by Blogger.