Header Ads



பொலிஸ்மா அதிபருக்கு Call எடுத்தது சாகலவா..? கோத்தாவா..??

இரத்தினபுரியில் நடைபெற்ற பகிரங்க கூட்டமொன்றில் பொலிஸ் மா அதிபருக்கு வந்த தொலைபேசி அழைப்பு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவர் உரையாற்றிக் கொண்டிருக்கையில் கைபேசிக்கு வரும் அழைப்பிற்கு பதில் வழங்கும் பொலிஸ்மா அதிபர் குறித்த நிலமேயை கைது செய்யப்போவதில்லை என்று கூறுவது ஊடகங்களில் பரவலாக வெளியிடப்பட்டது.

இந்த விடயம் நேற்று பாராளுமன்றத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. குறித்த மர்ம நபர் யார் என பல ஊகங்கள் வெளியிடப்பட்டதோடு பொலிஸ் மா அதிபர் 'சேர்' என்று சொன்னதால் அந்த நபர் சட்டம் ஒழுங்கு அமைச்சர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

குழு நிலை விவாதத்தில் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால உரையாற்றிய பின்னர் ஐ.ம.சு.மு பாராளுமன்ற உறுப்பினர் விமலவீர திசாநாயக்க உரை நிகழ்த்தினார்.பொலிஸ்மா அதிபரின் உரை தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர்,பொலிஸ்மா அதிபர் திரும்பவும் சட்டத்தை வலைக்க முற்பட்டுள்ளார்.

கூட்டமொன்றில் உரையாற்றுகையில் அமைச்சரொருவரிடமிருந்து வரும் தொலைபேசி அழைப்பிற்கு பதிலளிக்கும் அவர் குறித்த நிலமேயை கைது செய்யப் போவதில்லை என்று தெரிவித்தார்.அந்த நபர் தெவேந்திரமுனை பஸ்னாயக்க நிலமேயா என அரசாங்கத்தை கேட்கிறேன் என்றார்.

சபையில் இருந்த ஜனாதிபதி அதற்கு பதிலளித்தார்.

பொலிஸ்மா அதிபர் பேசும் வீடி​ேயாவை நானும் பார்த்தேன்.அந்த செயற்பாடு மிகவும் தவறானது. இது தொடர்பில் அவரை அழைத்து விளக்கம் கோர இருக்கிறேன் என்று அவர் தெரிவித்தார்.

இந்த சர்ச்சையில் கருத்து வெளியிட்ட விளையாட்டுத் துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர. குறித்த நிலமே யாருக்கு உதவினார்? அவரை காப்பாற்ற யார் முயல்கிறார் என்பது எமக்குத் தெரியும் என்றார்.

நேற்றை விவாதத்தில் கருத்து வெளியிட்ட ஜே.வி.பி தலைவர் அநுர குமார திசாநாயக்க,அரசியல் தலையீடு காரணமாக குற்றவாளிகள் தப்பிச் செல்கின்றனர்.

பொலிஸ் மா அதிபர் 'சேர்' இடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பையடுத்து குற்றவாளி ஒருவரை விடுவிப்பதாக கூறுகிறார்.நல்லாட்சியிலும் சட்டம் ஒழுங்கு நிறைவேற்றப்படவில்லை.குற்றவாளியை விடுவிக்குமாறு பொலிஸ்மா அதிபருக்கு தொலைபேசி அழைப்பு விடுத்தவர் சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க என்பது தெளிவு.

முடிந்தால் அவருக்கு பாராளுமன்றத்திற்கு வந்து மறுக்குமாறு சவால் விடுகிறேன்.

2

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கும் கைது ஆபத்து இருப்பதாகவே கூறப்படுகின்றது. இதன் படி கோத்தபாய கைது செய்யப்பட இருந்ததாகவும், எனினும் உயர்மட்டத்தில் இருந்து விடுக்கப்பட்ட உத்தரவின் பேரில் அவர் கைதில் இருந்து காப்பாற்றப் பட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்த சந்தேகம் நேற்று பொலிஸ் மா அதிபருக்கு வந்த மர்ம நபரின் தொலைபேசி அழைப்பின் ஊடாக மேலும் வலுப்பெற்றது.
நேற்று பொலிஸ் மா அதிபர் மேடை ஒன்றில் உரை நிகழ்த்த தயாராக ஒலி வாங்கிகளுக்கு முன் சென்றுள்ளார். அதே நேரம் அவருக்கு அவசர தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது,
பின்னர் பொலிஸ் மா அதிபர் தொலைபேசியில் உரையாடுவது தெளிவாக காணொளிகளில் பதிவாகியுள்ளது. அதில்,
வணக்கம் சேர்....., அவசரமான விடயம் ஏதாவதா சேர் .... இல்லை.... நிதி மோசடி விசாரணை பிரிவின் பணிப்பாளரிடம் சொல்லியுள்ளேன்....., அதனை நான் கேட்டுள்ளேன் கட்டாயமாக எனக்கு கிடைக்கும்...., அவற்றினை எடுத்துக் கொண்டு நான் சந்திக்கின்றேன்...,
ஆம் வரச்சொல்லி இருக்கின்றார்கள் சேர்......, இல்லை அப்படி நடக்க சாத்தியம் இல்லை நான் ஏற்கனவே கேட்டுவிட்டேன்....,
நிச்சயமாக நான் கூறுகின்றேன் சேர்......, அவர் கைது செய்யப்படப் போவதில்லை......, நிச்சயமாக கூறுகின்றேன்..., அவர் கைது செய்யப்படப்போவது இல்லை.....,
நான் தெளிவாக பணிப்பாளரிடம் கூறியுள்ளேன் என்னிடம் கேட்காமல் கைது செய்ய வேண்டாம் என... கைது செய்யப்பட மாட்டார் என்பது நிச்சயம் சேர்..., நன்றி நான் பின்னர் அழைக்கின்றேன்....,
இவை தொலைபேசி அழைப்பில் பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர பேசிய வார்த்தைகள்.
இவரது உரையாடல்த்த கோத்தபாய ராஜபக்சவை மையப்படுத்தியே நடைபெற்றிருக்கலாம் என கருத்துகள் வெளியிடப்படுகின்றது.
அதே சமயம் வார்த்தைக்கு வார்த்தை இவர் போட்ட சேர் மூலம் உயர் மட்டத்தில் இருக்கும் ஒருவரே அழைப்பினை ஏற்படுத்தியிருக்கக் கூடும் என்பதும் தெளிவாகின்றது.
இதேவேளை நேற்றைய தினம் இவர் கைது செய்யப்படலாம் என்ற செய்திகள் ஊடகங்களில் பரவலாக வெளிவந்தன. அதனைத் தொடர்ந்து இன்றைய தினம் கோத்தபாய நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தார்.
அதேபோன்று “கோத்தபாயவை கைது செய்ய திட்டங்கள் வகுக்கப்பட்டு விட்டன, அதனால் கொழும்பு நீதிமன்றத்திற்கு முன் அனைவரும் ஒன்று திரள வேண்டும்” என நேற்று செய்திகள் பரப்பப்பட்டன என்பதும் சுட்டிக்காட்டப்படத்தக்கதாகும்.

1 comment:

  1. பொலீஸ் மா அதிபரை இந்த அரசு எப்போதோ அடக்கிப் போட்டுவிட்டது. "வேலையில் வேகம்" கொண்ட நமது பொலீஸ் மா அதிபர் அரசின் நகர்வுக்கு வைத்த எதிர் நகர்வாகவே தெரிகிறது. "வசதியாக தவறொன்றை மக்கள் முன்னிலையில் செய்துள்ளார்." இவருக்கு இருக்கும் அளவு நேர்மை கூட நமது சமூக ஆலிம்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் இல்லை என்பது தான் ஐயம்.
    என்னவோ எதோ "யூதர்களின் பிடியில் இலங்கை" என்பதில் எள்ளின் முனை அளவிலும் சந்தேகம் கிடையாது.

    ReplyDelete

Powered by Blogger.