Header Ads



நாம் எதிர்கொள்ளும் பிரதான அபாயங்கள்..!

இலங்கை முஸ்லிம் சமூகம் எதிர்கொள்ளும் அபாயங்கள் யாவை என சிந்திக்கையில் அவை வெளி அபாயங்கள் மாத்திரமல்ல, உள் அபாயங்கள் பல இருப்பதனையும் அவதானிக்க முடிகிறது.

அவை பற்றி சில விளக்கங்களைத் நோக்குவோம்,

I. ஷீயா என்ற அபாயமான சிந்தனைப் பிரிவு உருவாகி படிப்படியாக வளர்ந்து வருகின்றமை. அது ஓரளவு கிட்டிய எதிர்காலத்தில் ஒரு தனி சமூகமாக மாறும் அபாயம் உள்ளது. அப்போது உள் முரண்பாடு மிகக் கடுமையாக மாறும் சந்தர்ப்பம் நிறையவே உண்டு.

II. அண்மைக் காலமாக இஸ்லாத்திலிருந்து பௌத்த மதம் நோக்கிச் செல்லும் நிலை ஓரளவு அதிகரித்துள்ளது, இது ஒரு அபாய சமிக்ஞையாகும். இதில் பெண்கள் பலர் இருப்பதுவும் அவதானிக்கத் தக்கதாகும்.

III. இஸ்லாத்திற்கு வெளியே சிந்திக்கும் ஒரு பிரிவினர் உருவாகி வருகின்றமை இன்னொரு அபாயமாகும். இஸ்லாத்தின் அடிப்படை மூலாதாரமான அல்குர்ஆன், ஸுன்னாவையும் இவர்கள் விமர்சிக்கத் துவங்கியுள்ளனர். ஒரு வகை நாஸ்திக, மதச்சார்பின்மை போக்கு என இதனை ஓரளவுக்கு அடையாளப் படுத்தலாம். இவர்கள் சிதறிய தனி நபர்களாகவன்றி ஒரு குழுவாக, கட்டமைப்பாக இயங்கும் நிலைமை தோன்றியுள்ளமை அவதானிக்கத் தக்கதாகும்.

இஸ்லாத்தை நவீன காலத்தில் பொருத்தமற்ற வகையில் முன்வைப்பதுவும், இறுக்கமான சட்டதிட்டமாக அதனை அறிமுகப் படுத்துவதும், பகுத்தறிவு ஏற்க முடியாத வகையில் சில சிந்தனைகளை இஸ்லாம் என்ற பெயரில் விளக்குவதும் இதற்கான பிரதான காரணங்களாகும்.

தீவிர பெண்ணிய சிந்தனைகளை முன்வைபோரும் இதில் அடங்குகின்றனர். இவ்வாறானவர்களும் வளர்ந்து வருகிறார்கள். அவர்கள் ஒரு கட்டமைப்பாக மாறியுள்ளமையும் அவதானிக்கத் தக்கதாகும்.

தஃவா இயக்கங்கள், சட்டக் கருத்து வேறுபாடுகள் என்ற எமது உள்முரண்பாடுகளை விட இவை மிகவும் அபாயகரமானவை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். இவற்றின் வளர்ச்சி சமூகத்தையே சின்னாபின்னப்படுத்தி குழப்பி மிகவும் பலவீனப்படுத்திவிடும். அது வெளி அபாயங்களை எதிர் கொள்வதில் எம்மை மிகவும் பலவீனப்படுத்திவிடும் என்பதில் சந்தேகமில்லை.

இதற்கான தீர்வு இவர்களுடனான சுமூகமான ஆழ்ந்த விரிந்த கலந்துரையாடலேயாகும். அதற்கு இஸ்லாத்தை விஞ்ஞானபூர்வமாகவும், பகுத்தறிவு ரீதியாகவும் முன்வைக்கத் தெரிய வேண்டும். அத்தோடு சமூக வாழ்வு சம்பந்தமான இஸ்லாத்தின் கொள்கைகள், சட்டதிட்டங்களை சமகால பிரச்சினைகள்,யதார்த்தங்களுக்கேற்ப முன்வைக்கும் சிந்தனைப் போக்கும் அடிப்படையானது.

எமது சமூகத்தின் இத்தகைய அபாயகரமான நிலைகளை சற்றுக் கவனமெடுத்து ஆழ்ந்து நோக்குவதும், அவற்றை எதிர்கொள்வதற்கான திட்டங்களை வகுத்துக்கொள்வதும் இன்றைய காலத்தின் தேவையாகும்.

(Usthaz Mansoor)

6 comments:

  1. Eppothu Ilangai makkal...paravaathi 23+ amappugalai ellam thookki veesi vittu...Unmayana..samogattukkaaha..Naattukkaha Unmayana Islaathukkaga ulaikkum SLTJ pinnal eppothu varuhintraargalo appoothuthaan Unmayana vetri ellorukkum kedaikkum Intha naattu mattra inangalukkumthaan....
    Thalaila thoppithaan but manasu avvalavum keadu ketta nattam

    ReplyDelete
  2. Unfortunately, the ability to think independant from traditional mathhab confines is a major tragedy, in this modern era, and minority community.

    ReplyDelete
  3. இஸ்லாத்தின் பொது எதிகளுக்கு எளிதில் பதில் சொல்லலாம்.

    மறைமுகமான எதிரிகள் பல கோணங்களில், பல வடிவங்களில் வெளிவருவதை நாம் அன்றாடம் பார்க்கிறோம்.

    அவர்ளை இனம் கண்டு, பதில் அளிக்க முற்படும் நம் இஸ்லாமிய சகோதர்களை அதைரியப்படுத்தும் விடயத்தில், நமது உள்ளக முரண்பாடுகள் மேலோங்கி விடுவதனைப் பார்க்கிறோம்.

    இஸ்லாமிய இயக்கங்களுக்கிடையிலான உள்ளகக் கட்டமைப்புகள், வலுவில்லாமல் ஒரு தொய்வு நிலையில் இருப்பதை நாம் பார்க்கிறோம்.

    பெண்ணியம், நாஸ்திகம், சடவாதத் தன்மை பேசுபவர்களைக் கூட, இஸ்லாம் சுண்டி இழுக்கும் தன்மையாக மேற்குலகம் ஓரளவு மாறி இருக்கிறது.

    அதற்கு காரணம், நமது இஸ்லாமிய சகோதரர்களின் சிந்தனை ரீதியான பங்களிப்பு.

    இலங்கையில் அப்படி இல்லை. இது கவலை தரும் விடயம்.

    ReplyDelete
  4. இதற்க்கு ஒரே வழி நம் அரசியல் தலைவர்கள் அனைவரும் ஓன்று பட வேண்டும் அல்லது நாமாகவே அவர்களை கலட்டிவித்ட் சமுதாய அக்கறையுள்ள ஒற்றுமையுல்ல்வார்களை கொண்டு வர வேண்டும்.2 மார்க்கம் என்ற போர்வையில் பிரிந்து கிடக்கும் இயக்க ம் பாராட்டும் அனைவரும் உலமா சபையும் ஒரு மேசையில் இருந்து இதுதான் இஸ்லாம் என்ற முடிவுக்கு வர வேண்டும்.அப்போதுதான் நம் எதிரிகள் விரண்டு ஓடுவார்கள் இல்லை என்றால் நமது பிரிவுகள் அவர்களின் பாரிய பலம்.இதை உணராதவரையில் நாம் வெற்றி பெற முடியாது.யார் இவர்களை ஒற்று சேர்ப்பது என்ற பிரச்சினைதான் இருக்கிறது.உடனடியாக புத்திஜீவிகளில் இருந்து ஒரு சாமாதான குழுவை அமைக்க வேண்டும் அதன் மூலம் எல்லோரையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரவேண்டும்.அவ்வாறில்லாமல் அடி விழுந்த பின் ஓன்று படுவதில் எந்த அர்த்தமும் கிடையாது

    ReplyDelete
  5. மிக விவேகமாகவும் அழகிய முறையிலும் இலங்கை முஸ்லிம்கள் எதிர்கொள்ளவுள்ள அபாயத்தை ஒஷ்தாத் அவர்கள் முன்வைத்துள்ளார்.
    தான்சார்ந்த இயக்கத்தை வளர்ப்பதன் மூலம்தான் இஸ்லாத்தை அழகிய முறையில் மக்கள்மயப்படுத்தலாம் என்ற குறுகிய சிந்தனையிலிருந்து விடுபடவேண்டிய அவசியத்தையும் அவசரத்தையுமே இத்தகவல் கோடிட்டுக்காட்டுகின்றது.
    நபிகளாரின் பல்கலைக்கழகத்தில் இத்தகைய இயக்கங்களின் ஊடாகவே இஸ்லாத்தை முன்வைக்கவேண்டும் என்று பாடத்திட்டத்தில் இருந்ததாக எத்தகைய பதிவுகளையும் எனது சிற்றறிவு தேடியறியவில்லை.
    வாதப்பிரதிவாதங்களை மூட்டைகட்டி வைத்துவிட்டு ஓரணியில் நின்று இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் பாதுகாக்க நாம் ஒவ்வொருவரும் முன்வரவேண்டும்.

    ReplyDelete
  6. புத்தி ஜீவிகளின் உருவாக்கம்
    காலத்தின் அவசியமோ ???
    சம காலத்தில் தங்களின்
    கருத்துக்களை படிக்கும் போது
    என்னுள் உங்களைப்பற்றி ஒரு
    அச்சஉணர்வு ஏற்படுகிறது .
    நாளை உங்களை ஒரு டிவி நிகழ்ச்சிக்கு
    அழைத்து நிகாப் பற்றி கேட்டால் ?
    என்ன சொல்லிப் போடுவீர்களோ
    என்றுதான் .......

    ReplyDelete

Powered by Blogger.