December 02, 2016

கல­வ­ரத்தை உரு­வாக்­கவே, ஞான­சாரர் உலமா சபை­யிடம் விளக்­கம் கோரி­யுள்ளார் - ரிசாத்

முஸ்­லிம்­களின் நிம்­ம­தியைக் குலைப்­ப­தற்கும் பொரு­ளா­தா­ரத்தை அழிப்­ப­தற்கும் மீண்டும் ஒரு கல­வ­ரத்தை உரு­வாக்­கு­வ­தற்குமாகவே பொது­ப­ல­சேனா அமைப்பின் செய­லாளர் ஞான­சார தேரர் உலமா சபை­யிடம் விளக்­கங்­களைக் கோரி­யுள்ளார்.

இவற்றை உலமா சபை கவ­னத்­திற்­கொள்ள வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்­கி­ரஸின் தலை­வரும் கைத்­தொழில் மற்றும் வர்த்­தக அமைச்­ச­ரு­மான ரிசாத் பதி­யுதீன் தெரி­வித்தார்.

பொது­ப­ல­சேனா அமைப்பு குர்ஆன் அத்­தி­யா­யங்கள் சில­வற்றைக் குறிப்­பிட்டு அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபை­யிடம் அவற்­றுக்­கான விளக்­கங்­களைக் கோரி­யி­ருப்­பது தொடர்பில் கருத்து வின­விய போதே அமைச்சர் ரிசாத் பதி­யுதீன் விடி­வெள்­ளிக்கு இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் கருத்துதெரி­விக்­கையில்;

நல்­லாட்சி அர­சாங்கம் நாட்டில் இனங்­க­ளுக்­கி­டையில் நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு பல்­வேறு நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கி­றது. ஆனால் ஒரே ஒரு விட­யத்தில் மாத்­தி­ரமே கடந்த கால அர­சாங்­கத்தின் கொள்­கையைப் பின்­பற்­று­கி­றது.

அது பொது­பல சேனாவின் செய­லாளர் ஞான­சார தேரர் விவ­கா­ரத்­திலும் மட்­டக்­க­ளப்பு மங்­க­ள­ராம விகாரை அதி­ப­தியின் விவ­கா­ரத்­தி­லாகும். இன­வா­தத்தைத் தூண்ட முயற்­சிக்கும் இவர்­களை அர­சாங்கம் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். 

முஸ்­லிம்­களை எதி­ரி­க­ளாக எண்­ணி­யி­ருக்கும் ஞான­சார தேரர் குர்ஆன் விளக்­கங்­களை அறிந்து கொள்­வ­தற்குத் தேவை­யில்லை. உலமா சபை தெளி­வான விளக்­கங்­களை வழங்­கி­னாலும் ஞான­சார தேரர் அதனை ஏற்­றுக்­கொள்­ள­மாட்டார். அதில் மாற்­றங்­களைச் செய்து முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக பல போராட்­டங்­களை முன்­னெ­டுப்பார். 

பொது­பல சேனாவின் செய­லாளர் மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்ட ஒருவர். அவர் காவி­யுடை அணிந்­தி­ருப்­ப­தி­னாலே மக்கள் அவரை மதிக்­கின்­றனர். இல்­லையேல் அவர் பல சவால்­க­ளுக்­குள்­ளா­கி­யி­ருப்பார். மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்ட அவ­ரது கடிதம் தொடர்பில் உலமா சபை அலட்டிக் கொள்ளத் தேவை­யில்லை. 

சிறைக்குள் இருக்க வேண்­டி­ய­வர்கள் சுதந்­தி­ர­மாக நட­மாட விடப்­பட்­டி­ருப்­ப­த­னா­லேயே இன்று இனவாதம் தலையோங்கியுள்ளது.  குர்ஆனுக்கு விளக்கம் கோரியிருப்பது வேறோர் இனவாத முயற்சிக்கான ஏற்பாடாகும். எனவே உலமா சபையும் முஸ்லிம் சமூகமும் இச்சந்தர்ப்பத்தில் விழிப்பாக இருக்க வேண்டும் என்றார்.

6 கருத்துரைகள்:

100% சரியாக சொன்னீங்க சேர்.

இவன் ஓரமாந உராசினான் நினைத்தது நடக்கவில்லை, இப்ப எதில கைவைத்தால் உணர்ச்சிவசப்படுவார்களோ அங்கவாரான், இவன்ரத்தத்தில் விஷம் மேலோங்கிவிட்டது, பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருடய துஆ வாயினம் கபூலாகும் இன்ஷாஅல்லாஹ்....

முடிவ பார்க்கத்தானேபோறம்...

MY3 and Ranil... We Muslim Did not vote for this type of GIFT from you both. Why Not acting against those who create rasism and violence ? Even after enough crystal clear evidences.. Why not your arrest such people, while you urge to arrest suspects before proving in many other political issues.

We feel no difference between MARA and Your Ruling in this BBS and other racist issues against muslims. BUT we only trust in OURs and YOURs ONE TRUE GOD who created you and us and this Universe. We have ways to complain this to him.. as He is all justful and will punish each and every one who directly and indirectly involve in this unjusftful hate and destruction to Muslims, who have never claim separate area or made blasting in country to harm others. We have been living peacefully long period and always stood in support of this Land.

If you miss treat us.. We ask Ours and Yours Loard to Reply you in suitable manner.

Correctly said. Let ACJU act cautiously.

ரிசாத் முஸ்லிம்களின் நிம்மதியை ஞானசார தேரர்கு முன்னரே நீங்கள் அழித்திவிட்டீர் முஸ்லிம் காங்கிரஸ் என்ற பெயருடன் அஸ்ரபினால் உருவாக்கப்பட்டு அதன் கீழ் ஒன்று திரட்டப்பட்டிருந்த முஸ்லிம்களை மஹிந்தவின் குடும்பத்துடன் சேர்ந்து களைத்துவிட்டீர் மேலும் எஞ்சியிருக்கும் முஸ்லிம் காங்கிரஸை பூண்டுடன் அழிக்க செயற்படுகின்றீர்,நீங்களே உங்கள் கட்சியில் முஸ்லிம் என்ற பெயரையே நீக்கிவிட்டு உங்கள் சுயநலதிற்காக முஸ்லிம்களின் மறைமுக எதிரியாக இருந்து கொண்டு பொதுபல சேனாவை பற்றி கதைக்கின்றீர் வெக்கமில்லையா?உங்களின் இந்த இழிவான சுயனல நிலைமைக்கு அல்லாஹு மிக விரைவில் முற்றுப்புள்ளி வைப்பானாக!

ரிசாதே: உலமாசபை ஞானசார தேரருக்கு பதில் கொடுக்க வேண்டிய கட்டாயமில்லை அவன் ஒரு பௌத்த அறிஞர்கள் அமைப்புடன் தொடர்பானவனும் இல்லை இருப்பினும் அவன் குர்ஆனை விளக்கி தரும்படி கேட்டுள்ளான் இதை உலமாசபை சந்தர்பமாக பயன்படுத்தி அழகிய முறையில் அல் குர்ஆனின் விளக்கத்தை எழுதி தேரருக்கு கொடுப்பதுடன் அதை ஏனைய பெரும் பான்மை இனத்தவர்களுக்கும் அஸ்கிறிய பௌத்த அறிஞ்சர்களுக்கும் கொடுக்க வேண்டும் இதனால் அவர்களுக்கு அல்லாஹு நேர்வழிகாட்டுவான் இலங்கை மக்களின் சிந்தனை அனைத்தும் ஞானசார மட்டியின் சிந்தனை போன்றது அல்ல!மேலும் ஏனைய சிங்கள பாமரமக்களுக்கும் நாங்கள் பொதுபல சேனாவுக்கு இதைத்தான் விளக்கிவுள்ளோம் என்று பலகோணங்களிலும் வெளிப்படுத்தவும்.

அல்குர்னுக்கு பொதுபல சேனா விளக்கம் கேட்டுள்ளது அதை உலமாசபை நன்றாக விளக்கி எடுத்து கூறவும் இல்லாவிட்டால் அவர்கள் அதை தவறாக விளக்கி மக்களுக்கு எடுத்து காட்டுவார்கள் மேலும் பொதுபல சேனா உலமாசபையின் பேப்பரின் வடவத்தில் தவறான விடங்களை எழுதி மக்களுக்கு பறப்பாமல் இருக்க கவனம் எடுக்க வேண்டும் தற்போது நாட்டில் ஆங்காங்கே நிகழும் இனவாத செயல்களை கவனித்தில் எடுத்து பொதுபல சேனாவிற்கு பதில் கொடுக்குமுன் சமய கலாச்சார அமைச்சர்களின் அனுமதியை கேட்கவும்.எதை செய்தாலும் ஏனைய மக்களுக்கு தெரியும்படியே செய்யவேண்டும் இது நன்று

Post a Comment