Header Ads



நாடா சூறாவளி, வடக்கில் பாரிய மழை

காங்கேசன்துறையிலிருந்து சுமார் 400 கிலோமீற்றர் தொலைவில் வங்காள விரிகுடாவில் நிலை கொண்டுள்ள  நாடா சூறாவளி காரணமாக வவுனியா உள்ளிட்ட வட மாகாணத்தின் பல்வேறு பிரதேசங்களில் பாரிய மழை பெய்து வருகின்றது.

கரையோரப் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 - 80 கிலோ மீற்றராக இருக்கும் எனவும், கடல் அலையின் உயரம் 3 மீற்றர் வரை உயர்வாகக் காணப்படும் எனவும் வளி மண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த புயல் வடக்கு திசையில் நகர்ந்து தமிழகத்தில் தரை தொடும் என வானிலை அவதானிகளால் எதிர்வு கூறப்பட்டுள்ளது. 

மீனவர்கள் கடற்றொழிலுக்கு செல்லவில்லை

மன்னார் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள சீரற்ற கால நிலையின் காரணமாக மன்னார் மாவட்டத்தில் அதிகளவான மீனவர்கள் இன்று (01) கடல் தொழிலுக்குச் செல்லவில்லை.

மன்னாரில் இருந்து காங்கேசன்துறை மற்றும் திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புக்களில் அவ்வப்போது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை கடற்பரப்பிலும் கடும் காற்றுடன் கூடிய மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்நிலையில் மன்னார் மாவட்டத்தில் அதிகளவான மீனவர்கள் இன்று (30) காலை மீன்பிடிக்கச் செல்லவில்லை. 

மேலும் மன்னார் பெரிய பாலத்தடியில் இருந்து ஆத்துவாய் பகுதியூடாக கடலுக்குச்செல்லும் மீனவர்களை சீரற்ற காலநிலையின் காரணமாக மீனவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அப்பகுதியில் கடற்பாதுகாப்பில் ஈடுபடும் கடற்படையினர் தொழிலுக்குச் செல்ல அனுமதி மறுத்துள்ளனர்.

மேலும் மன்னார் கடற்கரை பகுதியில் வழமைக்கு மாறாக சற்று காற்று வீசி வருவதோடு மழையும் பெய்து வருகின்றது.

இதனால் மீனவர்களின் இயழ்பு நிலை பாதீக்கப்பட்டுள்ளதோடு மன்னாரில் திடீர் திடீர் என மழை பெய்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.