Header Ads



முஸ்லிம் பெண்­களை, அடை­யாளம் காண­மு­டி­யா­துள்­ளது - சிங்கள ராவய முறைப்பாடு

ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெற்ற சர்­வ­மதத் தலை­வர்கள் மற்றும் மத விவ­கார அமைச்­சர்கள், கலந்­து­கொண்ட ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான கலந்­து­ரை­யா­டலில் சிங்­கள ராவ­யவின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் உரை­யாற்­று­கையில்,

இன்று நாட்டில் பௌத்­தத்­துக்கும், பௌத்த மக்­க­ளுக்கும் பல சவால்கள் உரு­வா­கி­யுள்­ளன. பௌத்­தர்கள் ஏனைய மதங்­க­ளுக்கு மதம் மாற்­றப்­ப­டு­கி­றார்கள். ஆனால் நாம் எவ­ரையும் எந்த மதத்­தி­ன­ரையும் பௌத்­தத்­துக்கு மதம் மாற்­ற­வில்லை. இன்று பௌத்த மத உரி­மைகள், வர­லாற்று பிர­தே­சங்கள் கிழக்கில் முஸ்­லிம்­களால் அழிக்­கப்­பட்டு வரு­கின்­றன.

கண்­டியில் பள்­ளிரோட் எனும் பெயர்க்கல் எம்மால் உடைக்­கப்­பட்­ட­தாக கூறு­கி­றார்கள். ஆனால் இந்த பள்­ளிரோட் என்ற பாதை முன்பு எஹ­ல­பொல குமா­ரி­ஹாமி என்ற பெய­ரிலே இருந்­தது. இப்­பெ­யரே பள்­ளிரோட் என்று மாற்­றப்­பட்­டது.

எஹ­ல­பொல குமா­ரி­ஹாமி மத்­தும பண்­டா­ரவின்  தாயா­ராவார். அன்று பெயர் மாற்­றப்­பட்ட போது நாம் எதிர்க்­க­வில்லை. அன்று எமக்குள் நல்­லு­றவு இருந்­தது. நாம் ஒற்­று­மை­யா­கவே வாழ்ந்தோம். பிரச்­சி­னைகள் இருக்­க­வில்லை.

ஆனால் இலங்­கையில் முஸ்­லிம்­க­ளி­டையே வஹா­பிஸம் பரப்­பப்­பட்­டதன் பின்பே பிரச்­சி­னைகள் உரு­வா­கின. முஸ்லிம் பெண்கள் கண்­களை மாத்­திரம் மறைக்­காது முழு உட­லையும் மறைத்துக் கொள்­கி­றார்கள்.

இவர்கள் யார்? ஆணா? பெண்ணா? என்று அடை­யாளம் காண­மு­டி­யா­துள்­ளது. நாட்டில் அடை­யாள அட்டை அமுலில் இருப்­பது நபர்களை அடையாளம் காண்பதற்கல்லவா? ஷரீஆ சட்டமும் விமர்சனத்துக்குரியதே. பெண்களின் திருமண வயதெல்லை ஆகக்குறைந்தது 12 என ஷரீஆ சட்டம் கூறுகிறது. இதனை அனுமதிக்க முடியாது. பௌத்த நாட்டில் இவ்வாறான சட்டங்களுக்கு இடமளிக்கக்கூடாது.

பௌத்தர்கள் பலாத்காரமாக சில சலுகைகளை வழங்கி மதம் மாற்றம் செய்யப்படுகிறார்கள். இலங்கையில் மதமாற்றம் தடைசெய்யப்படவேண்டும் என்றார். 

கலந்­து­ரை­யா­டலில் அமைச்­சர்கள் எம்.எச்.ஏ.ஹலீம், ஜோன் அம­ர­துங்க, விஜே­தாச ராஜபக் ஷ மற்றும் பௌத்த மதத் தலை­வர்கள் தரப்பில் பொது­ப­ல­சே­னாவின் செய­லாளர் கல­பொட அத்தே ஞான­சார தேரர், சிங்­கள ராவய அமைப்பின் தலைவர் அக்­மீ­மன தயா­ரத்ன தேரர் அதன் செய­லாளர் மாகல்­கந்தே சுதந்த தேரர் உட்­பட்ட குழு­வி­னரும் அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலமா சபையின் சார்பில் உல­மா­சபைத் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ..எம்.ரிஸ்வி முப்தி தலை­மை­யி­லான குழு­வி­னரும் தேசி­ய­சூரா சபையின் சார்பில் அதன் தலைவர் தாரிக் மஹ்மூத் முஸ்லிம் சமய பண்­பாட்­ட­லு­வல்கள் திணைக்­க­ளத்தின் பணிப்­பாளர் எம்.எச்.எம்.ஸமீல் உட்­பட பலர் கலந்து கொண்­டனர். இந்து சமயத் தலை­வர்­களும் கிறிஸ்­தவ மதத் தலை­வர்­களும் இதில் பங்கு கொண்­டி­ருந்­தனர். மகா­நா­யக்க தேரர்­களும் கலந்து கொண்­டி­ருந்­தனர்.

நாட்டில் தற்போது மதங்களுக்கிடையிலும், இனங்களுக்கிடையிலும் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து விரிவாக ஆராய சர்வ மதத் தலைவர்கள் அடங்கிய விஷேட குழுவொன்றினை நியமிப்பதற்கு  தீர்மானித்துள்ளார்.  இக்குழு மாதத்துக்கு இருமுறை ஒன்றுகூடி பிரச்சினைகள் குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டுமென ஜனாதிபதி மதத் தலைவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார். 

5 comments:

  1. Funny...
    What about our 23+ amaippugal...?
    Do they tell something or Just keep quiet and were sleeping???
    Allah may guide the purity of his path (ISLAM) to all ...!

    ReplyDelete
  2. Let Every one do their Duty and not middle into others matter.


    Police is for investigating any crime and Let not any others groups take the law in hand and harm others.

    Religious leaders is to guide their own people as per their religion and not to middle into others belief and culture and codes of life.

    Court is to establish the justice equally among all citizen regardless of any other influence internally or externally.

    Muslim has never harmed peace in the past, current in future insha Allah

    Muslims can not leave their religion in their life. Shareea is part and parcels of our life. We can not practice as for the interest of another religious teaching or philosophy instead of ISLAM to which we are bonded and as We do not force.

    We Muslim Respect the Culture of Other people, while why they this so called MONKS can not respect others culture if they are following a philosophy that fully support tolerant and peace on earth.

    A Muslim women covers her face, But when needed by security check she will show her face for identity. Even it is the problem to be raised by police But not a MONK who is supposed to stay away all worldly desires.

    We thought all these days BUDDHISM is full of PEACE.. BUT when we see BBS, RAWANA groups tags, we have question about it.

    Still We believe Real BUDDHISM and Majority of its people love peace and are tolerant and respecting the culture of others.

    Let Criminals to be in Jail but not be let free to ignite violence among the people and with no impunity by LAW of country.

    With no question,, Government in the past and present are not acting as per LAW with some people.

    WE MUSLIMS TRUST and REQUEST the ONE TRUE GOD who created them and us to Help us against these tyrants.

    ReplyDelete
  3. There is a deep fear whether justified or not among majority community, that Muslims are becoming radicalized in Sri Lanka . They see face cover as one expression of this extremism, and fear that violence like in face communities communities in Afganistan, Syriya Yemen. So how we allay this fear.

    ReplyDelete
  4. இதுவெல்லாம் வரும் போது எல்லோரும் ஊமையாக மாறுவார்கள் என்று அப்போதே நினைத்தேன் நடக்கின்றது .இஸ்லாம் லேசான மார்க்கம் அவர் அவர் அறிவாளி என்பதற்காக திணிக்கப்படும் சட்டங்கலே இப்போது மற்ற மதத்தவர்கள் வெறுப்படையச் செய்துள்ளது.

    ReplyDelete
  5. Dai RB! You see your society matter.You are expecting Nirwana (Naget) culture to see women without dress. But it never

    ReplyDelete

Powered by Blogger.