Header Ads



மஸ்ஜிதுல் அக்ஸாவுக்கு கீழ் இஸ்ரேல் சுரங்கம் அகழ்வது, தலதா மாளிகைக்குகீழ் சுரங்கம் அகழ்வதற்கு சமம்

மஸ்­ஜிதுல் அக்ஸா பள்­ளி­வா­ச­லுக்கு கீழ் இஸ்ரேல்  சுரங்கம் அகழ்­வது தலதா மாளி­கைக்கு கீழ் சுரங்கம் அகழ்­வ­தற்கு சமம். உலகில் பிர­பல நாடுகள் வாக்­க­ளிக்கும் போது ஏன் இலங்கை வாக்­க­ளிக்­க­வில்லை என கேள்வி எழுப்­பிய ஜே.வி.பி எம்.பி. பிமல் ரத்­நா­யக்க,

பலஸ்தீன் வாக்­கெ­டுப்பில் மங்­கள சம­ர­வீர எடுத்த தீர்­மா­னத்­திற்­காக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன 17 தூது­வர்­க­ளிடம் மன்­னிப்பு கோரி­ய­தாக தெரி­வித்தார். 

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை வரவு – செலவுத் திட்­டத்தின் வெளி­வி­வ­கார அமைச்சு செல­வின தலைப்­பி­லான குழு­நிலை விவா­தத்தின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.  அவர் மேலும் உரை­யாற்­று­கையில்;

மஸ்­ஜிதுல் அக்ஸா பள்­ளி­வாசல் தொடர்­பாக சர்­வ­தேச மட்­டத்தில் நடத்­தப்­படும் முதல் வாக்­கெ­டுப்பே யுனெஸ்கோ வாக்­கெ­டுப்­பாகும். இந்த வாக்­கெ­டுப்­பிற்கு ஜி 7, சார்க் உள்­ளிட்ட நாடுகள் அனைத்தும் வாக்­க­ளித்­துள்­ளன.

குறிப்­பாக அமெ­ரிக்கா, இந்­தியா தவிர பிர­பல பலம் வாய்ந்த நாடுகள் வாக்­க­ளித்­துள்­ளன. ஆனால் இலங்கை ஏன் வாக்­க­ளிக்­க­வில்லை. 

மஸ்­ஜிதுல் அக்ஸா பள்­ளி­வாசலின் கீழ் இஸ்ரேல் சுரங்கப் பாதை அகழ்வில் ஈடு­பட்டு வரு­கி­றது.

இதற்கு எதி­ரா­கவே சர்­வ­தேச நாடுகள் இந்த வாக்­கெ­டுப்பை கோரி­யது. இந்­நி­லையில் சார்க் நாடு­க­ளுக்கோ, ஜி 7 நாடு­க­ளுக்கோ சாராமல் எப்­படி தனி தீர்­மானம் எடுக்க முடியும். இது தலதா மாளி­கையின் கீழே சுரங்கம் அகழ்­வ­தற்கு சம­மாகும். 

வெளி­நாட்டு கொள்­கையை மங்­கள சம­ர­வீ­ர­வினால் தீர்­மா­னிக்க முடி­யாது. அமைச்­சரின் மோச­மான தீர்­மா­னத்தின் கார­ண­மாக ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன 17 தூது­வர்­க­ளிடம் மன்­னிப்புக் கோரி­யுள்ளார். 

இது பிழை­யான தீர்­மானம், பாலஸ்தீன் மீதான இலங்கை கொள்கை மாறி­யுள்­ளதா? இதன்­போது எழுந்து பேசிய வெளி­வி­வ­கார பிரதி அமைச்சர் ஆர்.டி.சில்வா, ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எந்­த­வொரு தூது­வ­ரி­டமும் மன்­னிப்புக் கோர­வில்லை என்றார். 

இதனை தொடர்ந்து பேசிய பிமல் ரத்நாயக்க, அது உங்களுடைய கருத்தாகும். ஆனாலும் மன்னிப்புக் கோரியதாக எமக்குத் தகவல் கிடைத்துள்ளது. ஆகவே இலங்கையின் அணிசேராக் கொள்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்றார். விடிவெள்ளி

1 comment:

  1. Thanks MP V Rathnayaka.

    You spoke at the time of our Muslim MP's don't even open there mouth to voice against the world dissaster by occupied Palastin.

    ReplyDelete

Powered by Blogger.