Header Ads



பர்தா விவகாரம், பிரதமருடன் பைஸர் முஸ்தபா பேச்சு

இலங்கையில் தற்போது நடைபெறும் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை எழுதும் முஸ்லிம் மாணவிகளை பர்தா மற்றும் ஹிஜாப் போன்ற உடை அணிந்து பரீட்சை எழுதுவது தொடர்பாக சர்ச்சை எழுந்துள்ளதை அடுத்து மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி பையிஸர் முஸ்தபா இது தொடர்பில் கருத்தில் எடுத்து இது தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கல்வியமைச்சர் அகில விராஜ் காரிய வசம் ஆகியோரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை நாடு தழுவிய ரீதியில் ஆரம்பமான இத் தேர்வு, எதிர்வரும் 17ம் வரை நடைபெறுகின்றது. இந்த தேர்வு பெறுபேறுகளை பொறுத்தே 12ம் தர கல்வி அதாவது கல்வி பொதுத் தராதர உயர்தர கல்வி தீர்மானிக்கப்படுகின்றது.

ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தல் தொடர்பாக பரீட்சைகள் ஆணையரால் இம்முறை வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கை காரணமாகவே இந்த சர்ச்சை எழுந்துள்ளது.

பரீட்சார்த்தியொருவரின் ஆள் அடையாளம் தேர்வு எழுத முன்னர் மேற்பார்வையாளர் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே ஏற்கனவே நடைமுறையிலிருந்த சுற்றறிக்கையாகும்.

இம் முறைவெளியிடப்பட்டுள்ள புதிய சுற்றறிக்கையில் ஆள் அடையாளம் உறுதிப்படுத்திய பின்னர் அவ்வாறு இருந்தவாறே தேர்வு எழுத வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இதன் காரணமாக குறிப்பாக முஸ்லிம் மாணவிகள் தங்கள் கலாசார ரீதியான அடையாளத்தை பிரதிபலிக்கும் உடைகளை அணிதல், பாடசாலை அல்லாத பரீட்சார்த்திகளில் ஆண்கள் தாடியுடன் தோற்றுதல் போன்றவை தொடர்பாக பிரச்சினைகளை எதிர்கொள்வதாக கூறப்படுகின்றது.

கண்டி, அனுராதபுரம், குருநாகல், முல்லைத்தீவு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் இது தொடர்பான முறைப்பாடுகள் பதிவானதை அடுத்தே அமைச்சர் இது தொடர்பில் கவனம் செலுத்த தீர்மானித்துள்ளார்.

இவ்விவகாரம் தொடர்பில் பிரதமருடனும் கல்வியமைச்சருடனும் நேரடியாக தொலைபேசி மூலம் அமைச்சர் அமைச்சில் இன்று உரையாடினார். மேலும் இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்; 

முஸ்லிம்களை  பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் பிரமுகர் என்ற வகையில் இதனை தான் வன்மையாக கண்டிப்பதாக தெரிவித்தார். முஸ்லிம்களின் பல நூற்றாண்டு கால வரலாற்றில் முஸ்லிம்களால் கட்டாயம் மேற்கொள்ளப்படவேண்டிய நடைமுறைகளில் ஒன்று எனவே இந்த விடயத்தில் முஸ்லிம்களது உரிமைகளை பாதுகாக்கும் வகையில் செயற்படுமாறு அனைத்து பரீட்சை நிலைய பொறுப்பாரிகளிடம் நான் வினயமாக கேட்டுக்கொள்கிறேன். பரீட்சை நிலையத்தில் ஆள் அடையாளத்தை இனம்கண்டு கொள்வதட்காக முகத்தை அடையாளப்படுத்த முடியுமே தவிர முஸ்லிம்களின் ஆடைச்சாரத்தை அகற்றுவது என்பது கவலைக்குரிய விடயமாகும் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 

1 comment:

  1. அடையாளப்படுத்துவது முகத்தைமட்டுமே என்று தெரிந்ததும் பொறுமயை சோதிக்கும் மோடக்கூட்டம்

    ReplyDelete

Powered by Blogger.