Header Ads



பொதுபல சேனாவுக்கு, ஜம்மியத்துல் உலமா பதில் வழங்கக்கூடாது

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையையும் முஸ்லிம்களையும் படுமோசமாக விமர்சித்துவரும் குர்ஆனை அவமதித்து பேசும் பொது பலசேனாவின் கடிதத்துக்கு உலமா சபை பதில் வழங்கக் கூடாது.

குர்ஆனைப் பற்றி தெளிவுகள் வேண்டுமென்றால் அஸ்கிரிய மற்றும் மல்வத்த மகா நாயக்க தேரர்களுக்கே பதில் அளிக்க வேண்டுமென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான எம்.ரி. ஹஸன் அலி தெரிவித்தார்.

பொதுபலசேனா அமைப்பு குர்ஆன் அத்தியாயங்களுக்கு விளக்கம் கோரி உலமா சபைக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

உலமா சபை முஸ்லிம்களின் சமயம் தொடர்பில் உயரிய சபையாகும். பொது பலசேனா தொடராக முஸ்லிம்களின் கலாசாரத்தையும் மார்க்க கோட்பாடுகளையும் இழிவுபடுத்தி வருகிறது.

அல்லாஹ்வைப் பற்றியும் ஞானசார தேரர் மோசமாக கருத்து வெளியிட்டுள்ளார். இந்நிலையில் பொது பலசேனாவை ஓர் அமைப்பாக அங்கீகரித்து அந்த அமைப்பின் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய தேவை எமக்கில்லை. எனவே இது தொடர்பில் உலமா சபை பதில் அளிப்பதை தவிர்ந்து கொள்ள வேண்டும்.

அவ்வாறு பதில் அளிப்பது அவசியமென்றால் பௌத்தர்களின் உயரிய பீடமான மல்வத்த, அஸ்கிரிய பீட மகாநாயக்க தேரர்களுக்கே அளிக்க வேண்டும்.

பொது பலசேனா அமைப்பு குர்ஆன் தொடர்பான விளக்கங்களைக் கோரி நிற்பது ஏதோவோர் சூழ்ச்சியினால் என்று எண்ணத் தோன்றுகிறது. எனவே உலமா சபை நிதானத்துடன் செயற்பட வேண்டும் என்றார்.

-ARA.Fareel விடிவெள்ளி

13 comments:

  1. Good Opinion .ACJU Will Consider This Matter Sir

    ReplyDelete
  2. Seems Good Advice ... YES

    ReplyDelete
  3. குர்ஆன் பற்றி யார் விளக்கம் கேட்டாலும் கட்டாயம் அவர்களுக்கு உரிய முறையில் விளக்கம் அளிப்பது முஸ்லிம்களின் கட்டாய கடமை ஆகும். முஸ்லிகள் அவர்களுக்கு விளக்கம் அளிக்காத விடத்து அல்லாஹ் வேறு ஏதேனும் ஒருவகையில் விளக்கம் தேடுபவர்களுக்கு அவன் அதற்க்கான வழியேய் அமைப்பான். என்னடா இது இலங்கையில் அஸ்கிரிய பிக்குகளுக்கு மட்டும்தான் விளக்கம் கொடுக்க சொல்லும் இந்த ஜனாப் ஹசன் அலி எதை வைத்து இப்படி சொல்கின்றார் என்று விளங்குவது இல்லை. நான் இதுவரையும் இவரை ஒரு அறிவாளனாக பார்த்தேன் ஆனால் இஸ்லாத்துக்குள் இவரது பார்வை .......

    ReplyDelete
  4. கட்டாயம் விளக்கம் கொடுக்கப்பட வேண்டும் ஆனால் பகிரங்கமாக ஊடகங்கள் மூலம் தான் கொடுக்க வேண்டும்

    ReplyDelete
  5. if any one doesn't know the religion of humanity (ie Islam) it is the Muslim responsibility to educate them. We don't look who wants it.
    I would say ACJU must reply to the letter as respect to there request. At the same time before it been handed to them , should have public brefing regarding the letter and reply to the letter. This is a just a facts explaining not a question and answer.

    ReplyDelete
  6. Regarding this matter, let the ACJU decide. They are the authorised body. Let them decide whether to reply or not

    ReplyDelete
  7. ACJU Must reply to BBS inquiry without any hesitation meanwhile same copy to send both mahanayaka theros

    ReplyDelete
  8. ஆமாம், வெட்டி சேனாவை கணக்கிலெடுக்காமல் முழு தெளிவுபடுத்தலயும் ஒரு டீ வி ப்ரோகிரேம் மூலம் இருமொழிகளிலும் தெளிவுபடுத்துங்கள்...

    ReplyDelete
  9. Must do it ...but not like in a form of letter..
    But as some good lessons..
    Call them all for good class and teach them Islam from basic .
    But do not bring Salafi groups to teach them Islam..they will create more problems

    ReplyDelete
  10. I believe that ACJU already answered most of their queries through it's publications

    ReplyDelete
  11. இவர் ஒரு அரசியல்வாதி உலமசபை மார்க்கம் சொல்லியபடி நடந்து கொள்வதுதான். சரியானது.நபிமார்களுடன் ஒப்பிடுகையில் நமக்கு வந்துள்ள சோதனை சிறியதுதான்.அவர்களுடைய தவக்கல் முன் எல்வாம் தவிடு பொடியாகிவிட்டது.

    ReplyDelete
  12. We should reply but not in a letter. We must conduct A meeting with journalists and the religious heads in order to explain. This is an opportunity Allah gave us to explain his words. Let's use it.

    ReplyDelete

Powered by Blogger.