December 13, 2016

ஞான­சாரரை அழைத்­தது ஏன் - மைத்திரியின் விளக்கம் இதோ..!

பொது­பல சேனாவின் பொதுச் செய­லாளர் ஞான­சார தேரரை நான் ஒரு­போதும் பாது­காக்­க­வில்லை. அவ­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கா­தி­ருக்­கு­மாறு நான் வலி­யு­றுத்­த­வு­மில்லை.

சட்­டத்தை மீறும் எவ­ரா­யினும் இன மத பேத­மின்றி நட­வ­டிக்கை எடுக்­கு­மாறே நான் சட்டம் ஒழுங்கு அமைச்­ச­ருக்கு உத்­த­ர­விட்­டுள்ளேன் என ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.

முஸ்லிம் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கும் ஜனா­தி­ப­திக்­கு­மி­டை­யி­லான விசேட சந்­திப்பு நேற்று மாலை ஜனா­தி­பதி செய­ல­கத்தில் நடை­பெற்­றது. இதன் போதே ஜனாதிபதி மேற் கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் அண்­மைக்­கா­ல­மாக முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக தலை­தூக்­கி­யுள்ள இன­வாத செயற்­பா­டுகள் தொடர்பில் கலந்­து­ரை­யாடும் பொருட்டே மேற்­படி சந்­திப்பு ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்­தது.

இதன்­போது பொது பல சேனா பொதுச் செய­லாளர் ஞான­சார தேர­ருக்கு எதி­ராக பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் இருக்­கின்ற போதிலும் எந்­த­வித சட்ட நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­டாமை தொடர்பில் முஸ்லிம் எம்.பி.க்கள் அதி­ருப்­தியை வெ ளிப்­ப­டுத்­தினர்.

அத்­துடன் அவர் கைது செய்­யப்­ப­டா­மைக்கு ஜனா­தி­ப­தி­யா­கிய நீங்­கள்தான் கார­ணமா என்றும் கேள்வி எழுப்­பினர். இதன்­போதே ஜனா­தி­பதி மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். இதே­வேளை அண்­மையில் நடை­பெற்ற மத தலை­வர்­களின் நல்­லி­ணக்க கூட்­டத்­திற்கு ஞான­சார தேரரை அழைத்­தது ஏன் என்றும் முஸ்லிம் அமைச்­சர்­களும் எம்.பி.க்களும் ஜனா­தி­ப­தி­யிடம் கேள்­வி­யெ­ழுப்­பினர்.

இதற்குப் பத­ல­ளித்த ஜனா­தி­பதி, ஞான­சார தேரரை பேச்­சு­வார்த்­தைகள் மூல­மான நல்­லி­ணக்க வழி­மு­றைக்கு கொண்டு வரு­வ­தற்­கான முயற்­சியின் ஓர் அங்­க­மா­கவே நாம் அக் கூட்­டத்­திற்கு அவ­ரையும் அழைத்தோம். எனினும் அவர் நல்­லி­ணக்­கத்­திற்கு ஒத்­து­ழைக்­காத வகையில் செயற்­பா­டு­வா­ராயின் அவ­ருக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுப்­ப­தற்கு பின்­னிற்கப் போவ­தில்லை என்றும் ஜனா­தி­பதி பதி­ல­ளித்­துள்ளார்.

கடந்த காலங்­களில் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ராக இடம்­பெற்ற சம்­ப­வங்கள்,  அவை தொடர்பில் முன்­வைக்­கப்­பட்ட பொலிஸ் முறைப்­பா­டுகள் தொடர்பில் எது­வித நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­ப­டாமை குறித்த விப­ரங்­களும் ஜனா­தி­ப­தி­யிடம் முஸ்லிம் எம்.பி.க்களால் கைய­ளிக்­கப்­பட்­டன.  இச் சந்­திப்பில் முஸ்லிம் அமைச்­சர்­க­ளான ஏ.எச்.எம்­பௌசி , ரவூப் ஹக்கீம், ரிசாத் பதி­யுதீன், எம்.எச்.ஏ.ஹலீம், பைசர் முஸ்­தபா, ஹிஸ்­புல்லா, பிர­தி­ய­மைச்­சர்­க­ளான ஹரீஸ், பைசால் காசிம், அமீ­ரலி, எம்.பி.க்களான முஜிபுர் ரஹ்மான், மரிக்கார், காதர் மஸ்தான், இஷாக் ரஹ்மான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 SNM.Suhail

4 கருத்துரைகள்:

We should use our brain technically to solve such problems not emotionally. I think we should not motivate the government to arrest them. But the arrests will be done technically without involved by our community.

In my point of political views, the joint opposition (gotapaya) and the racists are eagerly waiting to that situation to unite all Buddhists to one side and they will raise the voice against us and easily may win the next elections by using the word " thambila ape sadulava hire dhemma api unta veda thenta one". Then they will start to kill us like Burma if they win the next election by using racist.
This is what they need right now to be happened.

So, I think we should not motivate the government to arrest them but the arrests against racist must be done technically without involve of our community. It must be look like natural arrest but we should work technically for that.
Unless there is no benefit for us but the situation will be more critical.

So let's use this government for a better meetings with each other's to solve the problems. If not, we should be ready for everything when they cross the border.

Let's think. Let's unite. Let's move technically.

May Allah Keep This UNIT of our Brothers for the sake ISLAM and Muslims in this LAND and its PEACE

கண்டிப்பாக அடக்கவேண்டும் அல்லது கைதுசெய்து அடைக்கவேண்டும்...

Post a Comment