Header Ads



மஹிந்தவை வீழ்த்தவும், மைத்திரியின் வெற்றிக்கும் உதவிய பேஸ்புக்

“எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படவுள்ள “சுப்பிரி” (சூப்பர்) அமைச்சர் தொடர்பில், அரசாங்கம் பொய்ப் பிரசாரங்களை மேற்கொண்டு நாடகமாடி வருகின்ற போதிலும், அவ்வாறான அமைச்சர் நியமனமொன்று இடம்பெறவுள்ளது உண்​மையே” என, முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.   இந்த சூப்பர் அமைச்சர் பதவி மூலம், அதிகாரம் பாரியளவில் பகிரப்படவுள்ளதாகவும், ஜனாதிபதிக்கு சமமான பலத்தின் மூலம் நாட்டை இரண்டாக பிளவுபடுத்தும் அதிகாரமும் கூட இவர்களுக்கு  பேஸ்புக் பக்கம், நேற்று (22), உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய பீரிஸ், பேஸ்புக் மூலம், நாட்டில் நடக்கும் அனைத்து ஊழல், மோசடிகளையும் மக்கள் அறிந்து கொள்ளவும் மக்களுக்குத் தெளிவுபடுத்தவும் வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாகக் கூறினார்.    இப்படியான பேஸ்புக் பக்கங்களை முடக்கி, மக்களிடம் உண்மைகள் சென்றடையும் வாய்ப்பை இல்லாமல் செய்வதே, அரசாங்கத்தின் தேவையாக இருக்கின்றது எனவும், அவர் குறிப்பிட்டார்.    மேலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை ஆட்சியில் இருந்து அகற்றியதோடு, மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்துக்கு கொண்டு வருவதற்கு பிரதான சக்தியாக இருந்த பேஸ்புக் சமூக வலைத்தளத்தின் முக்கியத்துவத்தை, அரசாங்கம் தற்போது மறந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார். இதேவேளை, “சமூக வலைத்தளம் மூலம் சமூகத்துடன் பாரிய பயணம் ஒன்றை மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளோம்” என குறிப்பிட்ட அவர், இதற்கு மக்களும் தமது பங்களிப்பை வழங்க முடியும் எனவும், அவர் மேலும் கூறினார். 

1 comment:

  1. மிஸ்டர் ஜீ் எல் பீரிஸ் அவர்களே சுமார் 98 விகிதமான மக்கள் நீங்கள் சூரியனை காட்டி அது சூரியன் என்று சொன்னால்தான் நம்புவார்கள் நீங்கள் எந்த ஊகத்தளங்களை பாவித்தாலும் சரியே!

    ReplyDelete

Powered by Blogger.