Header Ads



மற்றுமொரு ரவுடியை சந்திக்கிறார் விஜயதாஸா, முஸ்லிம்கள் பொறுமை காக்க வேண்டுமாம்..!

இஸ்லாத்துக்கு எதிராக செயற்படுபவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் அல்லது அவர்களை கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் முஸ்லிம் இளைஞர்கள் ஆயுதம் ஏந்துவதை யாராளும் தடுக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் நாடாளுமன்றத்தில் கடுமையாக பேசியிருந்த நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ ஆகியோர் அமைச்சருடன் தனிப்பட்ட கலந்துரையாடலொன்றை மேற்கொண்டு சமரசப்படுத்தியுள்ளனர். 

இராஜாங்க அமைச்சரின் உரை இடம்பெறும் போது நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் இருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உரையை கேட்டுள்ளதுடன் பின்னர் ஹிஸ்புல்லாஹ்வுடன் கலந்துரையாடியுள்ளார். 

இதன் போது, நடுநிலையாக சிந்திக்கக் கூடிய ஹிஸ்புல்லாஹ் இவ்வாறு காரசாரமாக உரையாற்றியதைப் பார்த்து தான் வியந்ததாகவும், முஸ்லிம்களது மனோநிலை தனக்கு நன்கு தெரியும். எனவே விரைவில் இப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரிடம் உறுதியளித்துள்ளார்.  

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் மேற்படி வாக்குறுதியையே அவரிடம் வழங்கியுள்ளார். பின்னர், நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தனிப்பட்ட ரீதியில் இராஜாங்க அமைச்சுடன் முஸ்லிம்களது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடியுள்ளார். 

இதன்போது, மட்டக்களப்பு சுமனரத்ன தேரரரை அடுத்த வாரம் மட்டு. சென்று தான் பேசுவதாகவும், முஸ்லிம்கள் இந்த விடயத்தில் சற்று பொறுமை காக்கும் படியும் கூறியுள்ளார். அத்துடன், நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிமை தனக்கும் - உங்களுக்கும் இடம்பெற்ற விவாதத்தின் போது கடந்த ஆட்சியில் இருந்த முஸ்லிம் அமைச்சர்கள் தெடார்பில் தான் வெளியிட்ட கருத்துக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். 

6 comments:

  1. I herd the speech of the minister Hisbullah, very brave speech. This speech will take very long lasting political stability among Muslims. Unfortunately the heading doesn't include the name of persons who get this far. That is disappointing

    ReplyDelete
    Replies
    1. @ Muslim way ! Did you hear what Wijedasa said to Hisbullah?
      He said Hisbullah you didn't utter a word under MR Regime when Darga town issue happened, you are here to gain political gain and take benefits from governments not for people.
      Wijedasa was right our Muslim Ministers are useless.

      Delete
  2. அமிர்த லிங்கத்தின் ஞாபகம் வந்தது இளைஞர்களை உசுப்பேத்தும் நோக்கம் முடிவு?

    ReplyDelete
    Replies
    1. வாய் திறந்து பேசவே விர்றிங்கலியெ

      Delete
  3. "For Him to be patient." What Does this means by the justice Minister ? MUSLIMS ARE wrong ?

    Rather He should be warned about his evils..

    ReplyDelete
  4. No problem.he can meet like that monks. Because he is a minister for Buddhism. But he cannot be a minister for justice.

    ReplyDelete

Powered by Blogger.