December 25, 2016

26 ஆம் திகதிக்குள் மைத்திரி உயிரிழப்பார் என்ற, ஆருடத்தை அடுத்து பாதுகாப்பு அதிகரிப்பு

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாக வெளியான ஆரூடங்களை அடுத்து அவரது பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன வரும் ஜனவரி 26ஆம் நாளுக்குள் உயிரிழப்பார் என்று விஜிதமுனி ரோகண என்பவர் ஆரூடம் வெளியிட்டுள்ளார்.

இந்த ஆரூடத்தின் பின்னால் ஒரு அரசியல் சதி இருப்பதாகவும், இதுகுறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், சிறிலங்காவின் ஊடகத்துறை அமைச்சின் செயலர் நிமல் போபகே கூறியிருந்தார்.

இந்த நிலையில், சிறிலங்கா அதிபரின் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக சிறிலங்கா பாதுகாப்புச்செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்தார்.

ஆரூடம் மற்றும் அதன் பின்னால் சதித் திட்டங்கள் உள்ளனவா என்பது பற்றி பாதுகாப்புத் தரப்புகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

பாதுகாப்புக் காரணங்களுக்காக அதுபற்றிய தகவல்களை வெளியிட முடியாது, எனினும், சிறிலங்கா அதிபரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.

நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள்: –
“யாராவது ஒருவர் ஜோதிடத்தின் ஏதேனும் ஒன்றைக் கற்றுக் கொள்வாராயின் அவர் சன்யத்தை (ஸிஹ்ர்) கற்றவன் போலாவான்” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ், ஆதாரம், அபூதாவுத்.
“யாராவது குறி சொல்பவனிடம் சென்று அவன் கூறுவதை உண்மை என்று நம்பியவர் முஹம்மது(ஸல்) அவர்களுக்கு அருளப்பட்டதை நிராகரித்தவர் ஆவார்”  அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), ஆதாரம் அபூதாவுத்.
“குறி சொல்பவனும் அதைக் கேட்பவனும், எதிர்காலத்தை கணித்துக் கூறுபவனும் அதைக் கேட்பவனும், சூன்யம் செய்பவனும், அதைச் செய்யச் சொன்னவனும் நம்மைச் சார்ந்தவன் இல்லை” என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அல் பஸ்ஸார் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
எதிர் காலத்தைக் கணித்துக் கூறுவது என்பது மறைவான செய்திகளைக் கூறுவது போலாகும். இறைவனின் திருமறை பல இடங்களில் “மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே” என்று வலியுறுத்திக் கூறுகிறது.
எதிர் காலத்தை, நல்ல நேரத்தை ஒருவர் கணித்துக் கூறுதல் என்பது “இறைவனைத்’ தவிர்த்து தமக்கும் மறைவான விஷயங்கள் தெரியும்” என கூறுவது போலாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: –
“(இன்னும்) நீர் கூறுவீராக: ‘அல்லாஹ்வைத் தவிர்த்து, வானங்களிலும், பூமியிலும் இருப்பவர் எவரும் மறைவாயிருப்பதை அறிய மாட்டார்” (அல்-குர்ஆன் 27:65)
அறியமையினால் இத்தகைய படுபாதகமான தீய செயல்களாகிய அறியாமைக்கால மூடநம்பிக்கையில் சிக்கி உழன்றுக் கொண்டிருக்கும் நமது முஸ்லீம் சகோதர சகோதரிகள் உடனே இதிலிருந்து விடுபட்டு, அல்லாஹ்விடம் மன்றாடி பாவமன்னிப்புக் கோரவேண்டும். தம்முடைய அறியாமையினால் செய்த இத்தகைய அறிவீனமான செயலை மீண்டும் செய்ய மாட்டேன் என உறுதிபூண்டவராக அல்-குர்ஆன் மற்றும் சுன்னாவின் ஒளியில் தம் வாழ்வை அமைத்துக் கொள்ள முன்வர வேண்டும். அல்லாஹ் இதற்கு அருள்பாலிப்பானாகவும்.

1 கருத்துரைகள்:

கசுமாலி விஜிதமுன ரோகன அவர்களே முதலாவதாக நீ எப்போது செத்துபோவாய் என்று சொல் அதன் பின் உனது ஆருடத்தை மற்றவர்களுக்கு சொல் நீயே உன்வாழ்கையைபற்றி தெரியாமல் இந்த சாஸ்திரம் என்ற பெயரில் பிச்சை எடுத்து வாழ்கின்றாய்,மஹிந்த கொம்பனி இந்த சாஸ்திரதிட்கு எவ்வளவு உன்வாழ்கைகு ஒதிக்கியுள்ளார்கள்,கொஞ்சம் பொறு உனக்கு ஆப்பு தயாராகின்றது.மைத்திரியை யாரைவைத்து கொள்ள திட்டம் தீட்டிவுள்ளார்கள் என்று உன்சாஸ்திரம்மூலம் ஏன் வெளிப்படுத்த முடியாது!? யாருக்குடா டிமிக்கி உடுகின்றாய்? மனிதனை படைத்த கடவுள் ஒவ்வொரு மனிதனிட்கும் ஆய்வு முடியும் காலத்தை எமன்தேவனிடம் கூறியுள்ளான்.

Post a Comment