Header Ads



'இராணுவ சதிப்புரட்சி நடந்தால், துருக்கியில் போல வீதியில் இறங்கி முறியடிப்போம்' - UNP

இராணுவம் அல்லது அதன் ஒரு பகுதியினரை பயன்படுத்தியாவது ஆயுத பலத்தில் நாட்டின் அதிகாரத்தை கைப்பற்ற முயற்சித்தால், அதற்கு எதிராக கட்சி பேதமின்றி வீதியில் இறங்கி போராடத் தயாராக இருப்பதாக பிரதியமைச்சர் அஜித் பீ. பெரேரா தெரிவித்துள்ளார்.

பண்டாரகமையில் இன்று -21- நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இராணுவத்தை பயன்படுத்தி அதிகாரத்தை கைப்பற்றி நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி கொண்டு செல்ல முயற்சித்தால துருக்கியில் நடந்தது போல், கட்சி பேதமின்றி வீதியில் இறங்கி அந்த சக்தியை தோற்கடிப்போம்.

தினேஷ் குணவர்தன அண்மையில் நாடாளுமன்றத்தில் இராணுவ சதிப்புரட்சி ஏற்படலாம் எனக் கூறியிருந்தார்.

இராணுவ சதிப்புரட்சியின் மூலம் இராணுவத்தினரை பயன்படுத்தி எதிர்காலத்தில் நாட்டை ஆட்சி செய்வது அவரது எதிர்பார்ப்பும், பிரார்த்தனையாகவும் உள்ளது.

எதிர்காலத்தில் நாட்டை எந்த கட்சி ஆட்சி செய்தாலும் ஜனநாயக ரீதியாக மக்கள் தெரிவு செய்த அரசாங்கமே நாட்டை ஆட்சி செய்யும் என்பதை நான் அச்சமின்றி கூறுகிறேன் என அஜித் பீ. பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

2 comments:

  1. பிரச்னை வரமுன்பே அதனை வெற்றிகரமாக முறியடிக்கும் திட்டத்தையும் வைத்திருக்கும் அரசியல்வாதிகள் எவ்வளவு முன்னேறிய நாடு நமது தாயகம்.

    ReplyDelete
  2. நம் நாட்டில் இராணுவ ஆட்சி தேவையில்லை இராணுவம் ஆட்சி நடாத்தும் அனைத்து நாடுகளும் அனைத்து துறையிலும் பின்னோங்கிவிட்டது. நம் நாட்டுக்கு இராணுவம் ஆட்சி ஞானசார தேர்ரையும் அவரின் கூட்டத்தின் அடாவடித் தனங்ளையும் இல்லாமலாக்க மட்டும்தான் தேவை ஞானசார நாட்டின் இரண்டாவது பிரபாகரனாக வாழ்கின்றார்.

    ReplyDelete

Powered by Blogger.