Header Ads



UNP யின் செயற்பாடுகளில் அதிருப்தி - மைத்திரியிடம் வலியுறுத்திய SLFP

மத்திய வங்கி பிணைமுறி விநியோக மோசடிகள் தொடர்பில் கோப் குழுவின் அறிக்கைக்கு அமைய உடனடியாக விசாரணைகளை நடத்தக்கோரி  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தில் கட்சி உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவிற்கு வலியுறுத்தியுள்ளதுடன், நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில்  விசேட குழுவொன்றை நியமித்து விசாரணைகளை நடத்தவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது . தேசிய அரசாங்கத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாடுகள் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் குறிப்பிட்டுள்ளனர். 

குறிப்பாக  கடந்த ஆண்டு பெப்ரவரி மாதத்தில் இருந்தே மத்திய வங்கி விவகாரம் பெரியதொரு சர்ச்சையாக பாராளுமன்றத்திலும்இ மக்கள் மத்தியிலும் விமர்சிக்கப்பட்டுவரும் நிலையில் இது வரையில் அதற்கான எந்தவொரு விசாரணை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாதமை  குறித்து நாம்   ஜனாதிபதியிடம் தெரிவித்தோம். மக்கள் மத்தியில் இந்த விவகாரம் மிகப்பெரிய பூதாகரமாக மாறியுள்ளது. ஆகவே ஜனதிபதி என்ற வகையில் இந்த விடயத்தில் இஸ்திரமான நிலைப்பாட்டை எட்டவேண்டும். அதேபோல் மத்திய வங்கி விவகாரத்தில் கோப்குழு கடந்த வாரம் பாராளுமன்றத்தில் முன்வைத்த அறிக்கையின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொள்ள குழுவொன்றை நியமிக்குமாறும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளோம். அதற்கான அனுமதி கிடைத்துள்ளது. 

அந்த வகையில் அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவினர் ஜனவரி மாதத்திற்கு முன்னர் இந்த விவகாரம் தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவேண்டும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

No comments

Powered by Blogger.