Header Ads



எவ்வளவு நேரம், குழந்தைகளை Tv பார்க்க அனுமதிக்கலாம்..?


அமெ­ரிக்­காவின் சான்­பி­ரான்­சிஸ்கோ நகரில் இடம்­பெற்ற அமெ­ரிக்க குழந்தை நல மருத்­து­வர்­களின் மாநாட்டில் ஸ்மார்ட் போன்கள் உபயோகம் குறித்த சில பரிந்துரைகளை வெளி­யி­ட்டுள்ளது.மேலும், இதில் குழந்தைகளை எந்த வயதில் இருந்து தொலைக்காட்சி பார்க்கலாம் என்பது குறித்தும் பரிந்துரைகள் வெளியிடப்பட்டது. ஒவ்வொரு குழந்தையின் வயதுக்கு ஏற்ப இந்த பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது.

18 மாதங்கள் மற்றும் அதற்குக் குறைவாக உள்ள குழந்­தைகள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்ப்பதிலிருந்து முற்றிலுமாக தவிர்க்கப்பட வேண்டும். 

இந்த சமயத்தில் தொலைக்காட்சிகளில் இருந்து வெளியாகும் சத்தம் மற்றும் அசைவுகள் குழந்தையின் உறக்கம் பாதிக்கப்படுகிறது. இந்த சமயத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் இருந்து தவிர்த்து, தாய் தனது குழந்தையின் கண்களை உற்று நோக்கும்பொழுது குழந்தையின் மூளை வளர்ச்சியானது அதிகரிக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். 

ஐந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதில் உள்ள குழந்தைகளை தவிர்க்க முடியாத சூழல் இருப்பின் நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் மட்டுமே பார்க்க அனுமதிக்க வேண்டும். அதற்குமேல் அனுமதித்தால் குழந்தையின் சிந்திக்கும் திறன் குறைய வாய்ப்பிருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

No comments

Powered by Blogger.