November 21, 2016

அன்பான SLTJ சகோதரர்களே! உங்களோடு சில நிமிடங்கள்.

உங்களது ஏராளமான பணிகளை எம்மால் பாராட்டாமல் இருக்க முடியாது. எனினும் சில விடயங்களில் உங்களது நிலைப்பாடுகள், நீங்கள் சுன்னாவை அணுகுகின்ற விதம் அதனை முன்வைக்கின்ற போக்கு போன்றவற்றில் எமக்கு எவ்வித உடன்பாடும் கிடையாது.

அண்மையில் நீங்கள் அரங்கேற்றிய ஆர்ப்பாட்டத்தின் போது எல்லை கடந்து கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்தியமைக்கு ஆதாரமாக ஹுதைபியா உடன்படிக்கையின் போது அபூ பக்ர் ரழி அவர்கள் பேசிய வாசகங்களை ஆதாரமாக முன்வைத்துள்ளீர்கள். இதனை குர்ஆன் மற்றும் நபிகளாரின் தெளிவான வழிகாட்டலில் வைத்து நோக்கும் போது உண்மையில் அது பிழையான ஓர் ஆதாரமாகவே உள்ளது.
ஹுதைபிய்யாவில் உர்வா பின் மஸ்ஊத் ரழி அவர்கள் வந்து பேசியபோது நபிகளாரின் சாணக்கியத்தையும் அவர்களது விட்டுக் கொடுப்பையும் மௌனத்தையும் கண்டு கொள்ளாத நீங்கள் அபூபக்ர் ரழி அவர்கள் உணர்ச்சிகளால் தூண்டப்பட்டு கோபத்தில் சொன்ன வாசகங்களை தமக்கு ஆதாரமாக கொள்கிறீர்கள்..
மூச்சுக்கு முன்னூறு தடவை ஸஹாபாக்களை பின் பற்றுவது வழிகேடு என்றும் சொல்லிக் கொள்கிறீர்கள்.
கேட்டால் நபிகளார் அதை தடுக்கவில்லை எனவே அதுவும் நபிகளார் அங்கீகரித்த ஒரு சுன்னா என்பதாக தப்பித்துவிட நொண்டிச் சாட்டு வேறு. அப்படியாயின் இதே வழிகாட்டலை உங்கள் குடும்பத்தினருக்கும் பிள்ளைகளுக்கும் சொல்லிக் கொடுத்தால் அதுவும் தவறில்லையே.. உங்கள் வாப்பாவோடு அல்லாஹ்வுக்காக கோபப்பட்டு இப்படி சொல்வீர்களா ? தெருப்பொறுக்கிகள் பாதைகளில் உம்மா ..... வாப்பா .....
என்று ஆவேசப்பட்டு சப்தமிட்டு கூக்குரலிடுவதும் உங்களது பார்வையில் நபிகளாரின் வழிமுறைதான் என்று பகிரங்கமாக அறிவிக்க முடியுமா ? அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
அபூ பக்ர் ரழி அவர்கள் பேசியதை நபிகளார் குறித்த அந்த இடத்தில் கண்டிக்கவில்லை என்றால் அது அங்கீகாரமாகிவிடுமா ? அதே இடத்திலே குறித்த அந்த தவறை கண்டிக்கவில்லையென்றால் அது அங்கீகாரமாகிவிடும் என்றால் வாழ் நாள் முழுக்க கண்டித்தார்களே அதனை ஏன் நீங்கள் கவனிக்கவில்லை ? வாழ் நாளில் அவர்கள் எதிரிகளோடும் பகைவர்களோடும் எவ்வாறு பேசினார்கள் கோபம் அதிகரித்த நிலையிலும் எப்படி நடந்து கொண்டார்கள் என்ற வழிமுறைகளை அவர்களது ஸீராவை படிக்கின்ற சிறு பிள்ளைகளுக்கும் தெரிந்த விடயமே.
ஒருமுறை நபி (ஸல்)  அவர்களின் முன்னிலையில் ஒரு இறை மறுப்பாளன் அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்களை கடும் வார்த்தைகளால் தூசித்துக்கொண்டிருந்தான், இதை பார்த்து நபி (ஸல்) அவரகள் புன்னகைத்துக் கொண்டிருந்தார்கள், சிறிது நேரம் மௌனமாக இருந்த அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் பொறுமை இழந்து தானும் பதிலுக்கு கடும் வாரத்தைகளால் பதிலளிக்கலானார்கள் உடனே நபி (ஸல்) அவரகள் அதிருப்தியுடன்  தான் அமர்திருந்த இடத்திலிருந்து விரைவாக அகன்றார்கள், பதறிப்போன  அபூபக்ர் சித்தீக் (ரலி) அவர்கள் நபிகளாரை சந்தித்து பணிவாக காரணம் வினவ நபி (ஸல்) அவரகள்  "அவன் உங்களை தூசித்துக்கொண்டிருக்கும் போது மலக்குமார்கள்  உங்களுக்கு ஆசீர்வாதம் வழங்கிக் கொண்டிருந்தார்கள் நீங்கள் எப்போது அவனுக்கு கோபத்துடன் பதில் கொடுக்க ஆரம்பித்தீர்களோ மலக்குமார்கள் அவ்விடத்தை விட்டு அகன்றுவிட்டார்கள் ஷைதான் அவ்விடத்தை  நிரப்பினான்,
ஷைதான் இருக்கும் சபையில் நான் இருப்பதில்லை" என பதிலளித்தார்கள்.
- முஸ்னத் அஹ்மத் - ஸஹ்ஹஹுல் அல்பானி.
இந்த செய்தியில் கூட நபிகளார் அபூபக்ர் ரழி அவர்களுக்கு உணர்த்த வரும்  விடயத்தைப் புரிந்து கொண்டாலே போதும் அவர்கள் எவ்வளவு தூரம் தகாத வார்த்தைகளையும் உணர்ச்சிவசப்பட்டு பேசுவதையும் கண்டித்திருக்கிறார்கள் என்பதனை.. குறித்த ஒரு செயலை அதே இடத்தில் உணர்த்தியிருந்தால்
அவர் இருந்த கோபமான நிலையில் அதனை உணர்ந்து கொள்ளமாட்டார் என்பதனையும் அதனை உணர்த்தும் சந்தர்ப்பங்களில் பல்வேறு விதமாகவும் உணர்த்தியுள்ளார்கள் என்பதனையும் புரிந்து கொள்ளவேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்: “நன்மையும் தீமையும் சமமாக மாட்டா, நீர் (தீமையை) நன்மையைக் கொண்டே தடுப்பீராக! அப்பொழுது, யாருக்கும் உமக்கிடையே, பகைமை இருந்ததோ, அவர் உற்ற நண்பர் போல் ஆகிவிடுவார். (41:34)
இறைவனின் இக்கட்டளைக்கு கொஞ்சமாவது செவிசாய்க்க வேண்டாமா ?
‘ஒரு முஃமின் திட்டுபவனாகவோ, சபிப்பவனாகவோ, கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்க மாட்டான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி), (திர்மிதீ)
இந்த நபி மொழியிலுள்ள முஃமினின் வரைவிலக்கணக்கத்தை கொஞ்சமாவது சிந்தித்துணர வேண்டாமா ?
அபூ ஹுரைரா (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்: நபி (ஸல்) அவர்களிடம் ”அல்லாஹ்வின் தூதரே! இணை வைப்பாளர்களுக்கு எதிராக அல்லாஹ்விடம் துஆச் செய்யுங்கள்” என்று கூறப்பட்டபோது, நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ”நான் சபிப்பவராக அனுப்பப்படவில்லை; அருட்கொடையாகவே அனுப்பப்பட்டுள்ளேன்.” (ஸஹீஹ் முஸ்லிம்)
இணைவைப்பாளர்கள் நபிகளாரை எவ்வளவோ துன்புறுத்தியும் கூட அவர்களுக்கெதிரான ஏச்சுக்களையோ வசைபாடல்களையோ சாபமிடல்களையோ நபிகளாரின் வாழ்க்கையிலிருந்து உங்களால் காட்ட முடியுமா ?
அனஸ் (ரழி) அவர்கள் கூறுகிறார்கள்; நபி (ஸல்) அவர்கள் அருவருப்பான செயலை செய்பவராகவோ, சபிப்பவராகவோ, ஏசுபவராகவோ இருக்கவில்லை. மிகவும் கோபமான சந்தர்ப்பங்களில் “அவருக்கென்ன நேர்ந்தது. அவரது நெற்றி மண்ணாகட்டும்” என்று சொல்பவர்களாக இருந்தார்கள் (ஸஹீஹுல் புகாரி)
நபிகளாரின் உச்சகட்ட கோப நேரத்தில் கூட நபிகளாரின் முன்மாதிரிகள் இவ்வாறிருக்க இதனை விட்டு விட்டு நீங்கள் மறுக்கின்ற ஒன்றை வலிந்து ஆதாரமாகக் கொள்வது எவ்வகையில் நியாயமாகிவிடப்போகிறது.
சரி உங்களது வாதப்படி குர்ஆன் ஹதீஸில் அல்குர்ஆனை முற்படுத்தவேண்டும் அங்கு இல்லாத ஒரு விடயம் என்றால் ஸஹீஹான ஹதீஸ்களைப் பார்க்க வேண்டும்
அப்படியிருக்கையில் அல்குர்ஆனில் நான் தான் ரப்பு என்று வாதிட்ட உலகின் மிகப்பெரிய அநியாயக்காரன் பிர்அவ்னுடன் ( மூஸா , ஹாரூன் ஆகிய ) நீங்களிருவரும் பேசும் போது நிதானமாதகவும் மென்மையாகவும் பேசுங்கள் என்ற இறை கட்டளைக்கு முரணாக வந்திருக்கின்ற அபூபக்ர் ரழி அவர்களின் கருத்துக்களை பொதிந்துள்ள அந்த அறிவிப்பை குர்ஆனுக்கு முரண்படுகிறது என்று தட்டிவிடவேண்டுமே.. சரி அப்படித்தான் முடியாவிட்டாலும் அமலுக்கு பொருத்தமற்றது என்று கூட சிந்திக்க வேண்டாமா ?
ஹதீஸ்களில் சொல்லை
முற்படுத்துவதா? செயலை முற்படுத்துவதா? என்று ஒரு பகுதியுண்டு அப்படியிருக்கையில் தெளிவான குர்ஆன் , ஹதீஸை விட்டு விட்டு ஸஹாபியின் கருத்துக்கு போவச் சொன்னது மனோ இச்சையே அன்றி வேறில்லை..
புத்திக்கு படாத ஸஹீஹான ஹதீஸையே மறுத்த நீங்கள் உங்களது நிலைப்பாட்டை சரிசெய்ய ஸஹாபாக்களின் கருத்துக்களை தூக்கிப்பிடித்து குர்ஆன், ஸுன்னாவை உதறித்தள்ளுவது ஏன்?
குர்ஆனும் , ஸஹீஹான ஹதீஸும் என்ற நீங்கள் இப்போது இரண்டையும்
விட்டு விட்டு ஸஹாபாக்களில் தொங்குவது ஏன் ?
குர்ஆனின், ஹதீஸின் போதனைகளை  விட அபூபக்ர் ரழி அவர்களின் கருத்துக்கள் ஆதாரமானதுதான் நகைப்புக்குரிய விடயமாகத் தெரிகிறது.
நல்லதைப் பாராட்டுவதும் தவறென்று தெரிகின்ற போது உணர்த்துவதும் எமது கடமை, அல்லாஹ் நமது முயற்சிகளை பொருந்திக் கொள்வானாக.

36 கருத்துரைகள்:

yes brother, you said well, may allah bless you

Dear Sheikh Mufaris
Thank you for your explanation and post.As a lament i never accept SLTJ as muslim and they are following the teaching of islam. i have seen many practical example in my village,among my relations,in my country that main agenda of SLTJ is bring division among people between brothers,parents and kids,sisters,society and individuals in the name religion. where ever they go there is fithna and problem.in janaza,wedding, pray and you name it, and there they make problem. They and BBS are same for me.

Dear brother Mufaris rashadi!
Good message. But This people's will never understand the true. This people's heads are much weight. Allah will explain everything for them. So let's leave this to Allah.

وَمِنَ النَّاسِ مَنْ يَّشْتَرِىْ لَهْوَ الْحَدِيْثِ لِيُضِلَّ عَنْ سَبِيْلِ اللّٰهِ بِغَيْرِ عِلْمٍ‌ۖ وَّيَتَّخِذَهَا هُزُوًا ‌ؕ اُولٰٓٮِٕكَ لَهُمْ عَذَابٌ مُّهِيْنٌ‏ 
(இவர்கள் தவிர) மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள் - அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சுக்களை விலைக்கு வாங்கி, (அவற்றால் மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக் கொள்ளவும் (முயல்கிறார்கள்) இத்தகையோருக்கு இழிவுதரும் வேதனையுண்டு.
(அல்குர்ஆன்: 31:6)

Good article. But ippa inga vandu ungalukku shia kaaran endu esa poranga

Hudaybiyyah agreement is different from Hudaibiya aarpaattam. Hudaybiya agreement is to yield the peace and Hudaybiyyah aarpaattam is to kill the peace.

If you are a real muslim wait till Razik comes out and you can debate him directly. But I doubt you could do that, I can understand your level reading this article, the article itself has answers for all your questions! so you can not even try to be a word hero! most of the muslims here regarless of which Jamaath they belong to, are sad and questioning the injustice to him, and you are trying to argue with a lion in the cage! very ashamed of you... but very proud of Razik whom I never seen even face to face...THE only muslim in SL to roar as a lion at the Yellow Robe rowdy who repeatedly abused Allah & his messenger as well as muslims as a whole!

நான் SLTJ மெம்பர் அல்ல இருப்பினும் உம்மைப்போன்ற சிலர் முட்டாள் தனமான இப்படிப்பட்ட அறிவுரைகள் என்று எழுதிவரும் சிறுகதைகளை(ஹதீஸ்களை அல்ல) ஜீரணிக்க முடியாதுள்ளது
ஆர்ப்பாட்டமும் அந்த ஆர்ப்பாட்டத்தில் பேசப்பட்டவைகளும் எதற்க்காக என்ற கேள்வியை மனதில் இருத்திக்கொண்டு எழுதுங்கள் நாமும் வாசித்து விட்டுப்போகிறோம்
அல்லாஹ்வையும் ரசூல் ஸல் அவர்களையும்,குர்ஆனையும் இழிவாகவும் தூற்றியும் பேசியவனை ஏசியுள்ளார்கள் அவ்வளவுதான் வேறு விடயங்களை வைத்து SLTJ யை மடக்குங்கள் ஏசுங்கள் நாம் உங்களுடன் தர்க்கத்துக்கு வர மாட்டோம்.

allahvayum allahda thoodarayum esinathukku allah kuduppan .... adukku naangalum avarhalukku samamaha venuma...?
Nabi (sal) awrhalukku esina abu lahabukku allah quranl shafam vittan

Thawheed Jamaath shout on Gnaanasara not because that Gnaanasara abuse Allah or his messenger or Islam. Thawheed Jamaath shout on Gnaanasara simply because Gnaanasara told that he will stop the protest and chase them out. The dirty words used by Thawheed Jamaath cannot be written by anyone in public. This is a personal fight between BBS and Thawheed Jamaath and have no connection with Muslims or Islam

அஷ்ஷேஹ் முபாரிஸ் அவர்களே SLTJ சகோதரர்களிடம் ஒரு சில நிமிடங்கள் என்று பேசுவதை விட BBS சகோதரர்களிடம் ஒரு சில நிமிடங்கள் என்று பேச முன்வாருங்கள் தைறியமாக மார்க்க சட்டங்களுக்கு உட்பட்டு

பொன்னத்தனமான செயல்
மாற்று மதத்தவர்கள் தமக்கு கருத்து வேறுபாடு கொண்டு இருந்தாலும் முஸ்லிம்களை ஒழிக்க ஒன்று பட்டார்கள் ஆனால் நமது சமூகம் நமது உலமாக்கள் நமது ஆலிம்கள் இன்னும் பல இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் தம்மை தவ்ஹீத் வாதிகள் என்று பீத்தி திரியும் உலமாக்கலும் பத்துகின்ற நெருப்பில் குளிர்காய நினைக்கிறார்கள் இது இவர்களின் மடமையை தான் காட்டுகிறது.

சிறந்த கருத்துகள்
இதை ஏற்காதவர்கள் அபுபக்கர் ரழி யா
அப்துர்ராஸிக்கா என்ற முடிவை எடுத்தால் நல்லது நடு நிலையாக..

Razik's speech was a well calculated preparation . I
don't agree with SLTJ's Islam but their protest in
public and blasting off GNANASARA in the public
meeting was a fitting ANSWER in GNANASARA'S own way .
RAZIK did that for Muslims , for all Muslims .His
strategy was right even though he was punished
unfairly leaving the GNANASARA out at large . The
only impolite word Razik used was "UMBA." But that
racist GNASARA well deserves more than such words.
Sinhala Buddhists or Catholics or Hindus , non of
them tolerate him except a few outcasts rejected by
the country . Thugs and rogues are not monks simply
because the govt and other religious bodies are
watching Gnasara's antics in yellow robes ! Razik
didn't disrespect any Buddhist monk or Buddhism in
public this time . Rest assured , Razik arrest was
a bad decision and anti-Muslim .

Mr Aroos
We are muslim we don't want argument with our people in the islamic path we have qur'aan & sunnah. What a blady argument

TMM அவர்களே! நீங்கள் கூறுவது போல சில விடயங்களில் SLTJ இணர் முட்டாள் தனமாக நடந்து கொண்டாலும் மார்க்கத்தில் எது கூறப்பட்டது அதை சொல்லித்தான் ஆக வேண்டும்.
சிலரைப்போல் இயக்க பள்ளியில் குனூத் ஓதாமல் , மற்றைய பள்ளியில் ஓதியும் , கூட்டு துஆ இயக்க பள்ளியில் கேட்காமலும் மற்றைய பள்ளிகளில் கேட்டும், தனது வசதிக்கேட்ப மார்க்கத்தை மாற்றவும் முடியாது.
மற்றது ஒற்றுமை என்பது அல்லாஹ் ரசூல் சொன்ன வற்றில் மாத்திரம் தான் கூட்டு சேர வேண்டுமே தவிர அல்லாஹ் , நபி சொல்லாத விடயங்களில் அல்ல. மேலும் உங்களை போன்ற ஹதீஸ் கலை தெரிந்தவர்ஹல் மேலும் பிரிவு வந்துவிடாமல் நீங்கள் குறிப்பிட்ட அந்த SLTJ செய்யும் நல்ல விடயங்கள் , மற்றைய ஜமாஅத்கல் எவ்வாறு ஒன்று சேர்ந்து நடத்தலாம் என்பதை பற்றி எழுதியிருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்

As usual 'SLTJ' supporters state the Highness of their leader and the lowness of others including the author. They never listen or read what is meant by saying. Even here calling for debate. Disgusting....

Sakur a seyed -kuran rasool (s a)sahabakkal and hadees ellavatraiyum ilivu paduththuvazu tj vahabihal

இந்த ராசா SLTJ க்கு , பிஜே க்கு எதிரானவர்………பல மேடைகளில் SLTJ க்கு எதிராக பேசுபவன்…….. அறிவு ரீதியாக விவாதம் செய்வோம் உண்மையை அறிவோம் என்று அழைத்தால் ஓடி ஒளிப்பவன் …….. இப்ப என்ன கிளம்பின ? ஒரு விசயத்த செய்யவும் மாட்டானுகள் செய்ப்பவனை விடவும் மாட்டானுகள்…… சிங்களவன் ஏறி மிரிக்கும்போது இந்த ராசாதிக்கு விளங்கும்……இப்ப ராசாதிக்கு இயக்க வெறி தலையில் அடிச்சுள்ளது…… அதான் இது


3:173 اَلَّذِيْنَ قَالَ لَهُمُ النَّاسُ اِنَّ النَّاسَ قَدْ جَمَعُوْا لَـكُمْ فَاخْشَوْهُمْ فَزَادَهُمْ اِيْمَانًا  ۖ وَّقَالُوْا حَسْبُنَا اللّٰهُ وَنِعْمَ الْوَكِيْلُ‏ 
3:173. "மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. "எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்.
3:173

I did listen to some clip about this Abu Bakr Rali's statement: there are so many interpretation about this.
fist of there are so many different point and status about this saying of Abu Bakr.. It is not Hadith rather it is statement of Abu Bakri..
some says it is Hassan, some says it Hassan Mudallas and some day its majhool Hadith.. Al- Bani says it is Hadith Mjahool.. but contents of this hadith has been rejected by many people ..
a Muslim is not a one who scolds, insults and shouts at any people there is no bad words than this? secondly Prophet did not say it and he did not did not order such thing. so many Hadith that says about modesty and shyness in Islam and Prophet did not approve to go back the quality of ignorance time..
It was reported in time of anger and resentment
it was not repeated at all. it was said once and it was utterance from his tongue..such slip of tongue.. Do we build rules on such Hadith which was uttered in a status of strong anger ..

Yes good article but certain standard SLTJ exceeded their limit.in any situation they should have to learn to control themself. and still some brothers are try to argue in this situation. please every have to learn this is not a time to argue or giving the bad feedback against the other Muslim brothers.

Yes good article but certain standard SLTJ exceeded their limit.in any situation they should have to learn to control themself. and still some brothers are try to argue in this situation. please every have to learn this is not a time to argue or giving the bad feedback against the other Muslim brothers.

All SLTJ members are onions (Venkayam)

Mr Arooz

Lion???? (what you gonna mean by Lion)

SLTJ பிரியர்களே!

உங்கள் பிடிவாதம், முரண்டுத்தனம் போன்ற குணங்களை விட்டு விட்டு நடு நிலமையாக சிந்திக்கப்பா!!! அல்லாஹ் அருள் புரிவான்.

இப்போ ராஸிக் அவர்கள் உள்ளே இருக்கும் போது ஏனைய அனைத்து முஸ்லிம்களும் அவருக்கு கருனை காட்ட முன்வருகிர இல்லையென்றால் என்ன காரணம்???

இந்த SLTJ அமைப்பு அவர்களின் கொள்கை மற்றும் நடத்தையால் மக்களின் வெறுப்பை சம்பாதித்துள்ளார்கள் என்பது தான் அருத்தம்.

நபியவர்களின் ஒரு ஹதீஸில் ('நிச்சியமாக சில பயான்களில் சூனியம் இருக்கின்றது என்பதாக') வந்துள்ளது.

இதனடிப்படையில் பார்த்தால் அண்ணன் பீ.ஜே அவர்களின் பேச்சும் ஒரு சூனியவாதியின் பேச்சைப் போல்தான் இருக்கின்றது. ஏன் அவர் பேசுகின்ற பானியால் இந்திய மக்கள் உண்மை எது என தேடிப்பார்க்காமலேயே அவர் பக்கம் சாய்கின்றார்கள்.

அதனால் அண்ணன் அவர்கள் தைரியமாக நாளுக்கு நாள் புதுப் புதுப் கருத்துக்களை சொல்கின்றார்கள்.

இதனை மறைப்பதற்காகத்தான் P.J அவர்கள் சூனியம் என்று ஒன்று இல்லையென்று மறுக்கின்றார்களாக இருக்கும்.

அதனால் இலங்கை SLTJ இஸ்லாமிய நெஞ்சங்களே! அவர்களின் கொள்கையை விட்டு இஸ்லாத்தின் பக்கம் மீண்டு மனிதகுளத்தின் அன்பினை பெற்றுக் கொள்ள முயற்ச்சி செய்யுங்கள்.

Listen to this Mr.TMMR, I am sorry I am afraid to call you Ash-sheik...
https://www.youtube.com/watch?v=lBqBQoGoraM
Nisvi Nisthar eppidi eppidi TJ ellawatrayum ilivu padutthuwaangalaa? Neenga eppidi? Gnana saaravai pughal padutthunga...Silarukku ummayai chonnaa blady argumentaam...
Do these people really know what they write here?

Mohammed Isnath bro, who is the child shown here? It's not good to show children in public domain! anyway your Q to me Lion???? What I meant roared as a lion or like a lion means, I wanted to stress the word ROAR not Lion, when someone wants to mention anger or bravery, normally everyone says this...Bro. Razik has shown his anger towards the devil that abused Allah & his Messenger! Here it means Razik was like a lion in anger... any problem bro?

The problem TJ is whatever they say is correct. Lions should be in the cage not in the town. Arrogance will spoil u brothers....

Mr.Nizar, good point, ok let's forget about Razik, after all he is paying the price behind bars. why do we care! anyway If suppose it was you who organized the protest and Gnana said the same thing to you... what would you do bro. NIZAR?

சகோதரர் இப்திகார் ஹஸன் இஸ்லாத்தையும் இஸ்லாமிய வரலாறுகளில் முதன்மையான நபிமார்களின் வரலாறுகளை படிப்பினைகளோடு படிக்கக் கடமைப்பட்டுள்ளார் என்பதனை அவரது ஆக்கம் மிகத் தெளிவாக அவருக்குச் சுட்டிக்காட்டுவதை எம்மால் அறிய முடிகின்றது.

ஏனெனில் அனைத்து நபிமார்களும் மக்களுக்கு மத்தியில் மிகவும் உன்னதமானவர்களாக மதிக்கப்பட்டும் மக்கள் அவர்களுடைய கருத்துக்களை ஏற்க மறுத்தவர்களாகவும் அவர்களை திட்டம் தீட்டி வதை செய்யக் கூடியவர்களாகவும் தான் பெரும்பாலான மக்கள் அக்காலங்களில் வாழ்ந்து மடிந்தார்கள் என்பது வரலாற்றுச் சான்றாகும்.


உண்மையில் அன்று நபி இப்றாஹிம் (அலை) நேர்மையானவர்களாக வாழ்ந்து மக்களை தூய இஸ்லாமிய மார்க்கத்தின் பால் அழைப்பு விடுத்தார்கள் ஆனால் மக்கள் அவருக்கு வழங்கிய மிகப் பெரிய பரிசு என்ன?அவரை மக்கள் தீ குண்டத்தில் தூக்கி வீசி ஆனந்தம் கொண்டாடினார்கள் இந்தச் சம்பவம் சகோதரர் இப்திகார் ஹஸன் போன்ற குறுகிய சிந்தனையுடையவர்களுக்கு அன்றே சமர்ப்பணம்.


அது மட்டுமல்ல அன்று நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் மக்களுக்கு மத்தியில் உண்மையாளனாகவும் சத்தியவானாகவும் பார்க்கப்பட்டார்கள் வஹி எனும் இறைச் செய்தியை பெற்ற பின் மக்கள் அவர்களை அழைத்த விதம் கவிஞர், பைத்தியகாரன் பொய்யன் என்று அதற்குக் காரணம் என்ன சகோதரர் இப்திக்கார்? கொள்கையில் உறுதியா? கொள்கையில் கோளைத்தனமா? தஃவா முறை தெரியாதா? சிந்தியுங்கள்...

உண்மையில் 'வைக் கோல் கும்பியில் கிடக்கும் நாய் போல'; சில சகோதரர்கள் இந்த உலகம் அழியும் வரை இருப்பார்கள் அவர்கள் நல்லதை செய்யவும் மாட்டார்கள் செய்பவர்களை ஆர்வமூட்டவும் மாட்டார்கள் எனவே இப்படியானவர்களை நல்லவர்கள் கவனிக்கவும் மாட்டார்கள். 'உரிமைகள் இன்றி வாழ்வு இல்லை' என்பார்கள் அந்தவகையில் நாம் அரசியல் யாப்பினால் வரையப்பட்ட உரிமைகளோடுதான் வாழ்கின்றோம் எமது உரிமைகள் அத்து மீறிப்பட்டால் அதற்காக போராட வேண்டும் என யாப்பும் சொல்கிறது இன்னும் எமது இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களும் கூற்pயிருக்கிறார்கள். இதனை அடிப்பமையாக வைத்துதான் sltj அமைப்பு போரட்டங்கள் மூலம் உரிமைகளை பாதுகாக்க போராடுகிறது ஆனால் சகோதரர் இப்திகார் ஹஸன் இதை பிழை என்று சொல்ல வருகிறாரா?

Dear brothers and group followers!
Why this much love for the silly groups which will be destroyed soon by Allah.
Its showing you were brainwashed by Saithan. I can understand this when I see the comments of the group followers.
Ya Allah.
Why this much crazy? Why this much stupidity? Why don't you understand the reality of Islam. Why you want a group to show you are a Muslim? Where are we going brothers? Ya Allah.

Allah saying don't stick to groups so why your people's doing it? Is that correct? Your people's denied the order of Allah and saying you are the real followers of Quran and sunnah. How?
Is that impossible to follow Quran and sunnah without stick to groups??? Is that very hard??? Lazy people's wake up.

Follow Quran and sunnah but don't stick to groups. It' will move us to jehannam. Try to understand the Islam by your sense which Allah gave it to use it. But your people's gave that right to someone else groups. And now your people's trying to urge you are correct even if you have erroneous. How clever you are

Come out from the groups who ever wants to be united as Muslims until end of this world. Otherwise wait for a day until Allah destroy your groups. Allah will destroy your groups.

Your people's doesn't have an answer which group prophet Jesus will join when he comes to the world in the future?? Sltj ? Can you answer ? Any other groups?? NO. He will join with the Muslims. Idiotic people's even Cannot understand.
Allah give the sense to this people's.

Allah says;

مِنَ الَّذِيْنَ فَرَّقُوْا دِيْنَهُمْ وَكَانُوْا شِيَعًا ‌ؕ كُلُّ حِزْبٍۢ بِمَا لَدَيْهِمْ فَرِحُوْنَ‏ 
எவர்கள் தங்கள் மார்க்கத்தில் பிரிவினைகளை உண்டாக்கி (பல) பிரிவுகளாகப் பிரிந்து விட்டனரோ; (அவர்களில் ஆகி விட வேண்டாம். அவ்வாறு பிரிந்த) ஒவ்வொரு கூட்டத்தாரும் தங்களிடமிருப்பதைக் கொண்டே மகிழ்வடைகிறார்கள்.
(அல்குர்ஆன்: 30:32)

I really like your article. One of the famous Muslim Town in down south SLTJ people must read this. Not only in my family there are many families separated by SLTJ in this town. All I know I am Muslim practice Islam covering myself the way Islam teach us. Why I need a “SLTJ” name to practice Islam???

@ Ayesha islam says that you can only untie under Quran and sunnah,
Did Mohamed ( sal) and his uncle were in the same position ?
Even if it's your mum you can't follow her if she is not following the Quran and sunnah.
Before umar (ra) accepted Islam his sister and her husband did accepted the Islam, 2/: he nice to his sister ?
Allah says in the Quran that we should only unite in Quran and sunnah and for the sake of Allah not for Worldly desires.

Good attitude. Appreciated.

இக் கட்டுரையில் நியாயங்கள் உள்ளன.ஆக்கத்தை வரவேற்கின்றோம்

**Voicesrilanka** I like your explanation. Thank you. But you did not answer my question. Do I need a name “SLTJ”
to be a Muslim OR practice Islam? if "yes" WHY?

Post a Comment