November 24, 2016

SLTJ குறித்த நம்பிக்கை..!

-மஸிஹுத்தீன் இனாமுல்லாஹ்-

சகோதரர் அப்துல் ராசிக் குறித்தோ SLTJ குறித்தோ புதிதாக சொல்வதற்கு என்னிடம் எதுவும் இல்லை, தற்போதைய நெருக்கடி நிலையில் இருந்து அவர்களும் சமூகமும் மிகவும் நிதானமாக வெளியே வரல் வேண்டும்.

இனி வரும் காலங்களில் இன்ஷா அல்லாஹ் மிகவும் சமயோசிதமாகவும் சாணக்கியமாகவும் கூட்டுப் பொறுப்புணர்வுடன் அவர்கள் நடந்து கொள்வார்கள் என்றும் அவர்களது வேகத்தை விவேகத்துடன் நெறியாண்டு முதிர்ச்சியுள்ள சமூக அமைப்பாக அவர்கள் மாறுவார்கள் என்ற நம்பிக்கையும் இருக்கிறது.

ஊழல் மோசடிகளும் பொய்யும் உருட்டும் புரட்டும் திருட்டும் காடைத் தனங்களும் நிறைந்த மட்டரகமான சூதாட்ட அரசியல் கலாசாரத்தை மாற்றீடு செய்ய அவர்களது தூய்மை வாத சீர்திருத்தப் பணிகள் எதிர்காலத்தில் உச்சகட்ட சாணக்கியத்துடன் இடம்பெற வேண்டும் நாளை ஒருநாள் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் பொறுப்புள்ள ஒரு முஸ்லிம் தலைமையாக அவர்கள் மிளிர வேண்டும் என்றும் எதிர்பார்கின்றேன்.

பல்கோண பல்பரிமாண சவால்கள் நிறைந்த அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்குள் அறிந்தோ அறியாமலோ முஸ்லிம் இளைஞர்கள் உள்வாங்கப் படாமல் இருப்பதனையும்,பலிக்கடாவாக்கப் படாமல் இருப்பதனையும் அவர்களும் சமூகத்தின் பொறுப்புள்ள தலைமைகள் அவதானமாக சிந்தித்து செயலாற்ற வேண்டும்.

கருத்து வெளியீடுகள் எவ்வாறு அவர்களுக்கும் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்திற்கும் அவர்கள் பிரச்சாரம் செய்யும் கட்டிக் காக்க விரும்பும் இஸ்லாத்திற்கும் எதிரான தவறான புரிதல்களை ஏற்படுத்தும், குறுகிய மற்றும் நீண்ட கால விளைவுகளை கொண்டுவரும் என்பதற்கு கீழ் காணும் கருத்துப் பரிமாறல் ஒரு எடுத்துக் கட்டாக இருக்கும் என நம்புகின்றேன்.

உணர்ச்சி வசப்படாது அறிவுபூர்வமாக சிந்தித்து செயலாற்றுவோம், அரசியல் வாதிகளினதும் தீய சக்திகளினதும் கருத்து வெளியீடுகள் குறித்தும் நாம் நிதானமாக நாம் செயற்படல் வேண்டும்.

சம்பவங்களால் நிகழ்வுகளால் அறிக்கைகளால் உந்தப்பட்டு நிலைப்பாடுகளை தாறுமாறாக எடுக்காது நிகழ்வுகளிற்குப் பின்னால் உள்ள வெவ்வேறு முகாம்களின் நிகழ்ச்சி நிரல்கள் குறித்து நாம் அவதானமாக இருப்போம். இன்ஷா அல்லாஹ்.

3 கருத்துரைகள்:

Sure Sir...They are on their way for purity Allah may help & guide them...!!!
However, My kind request to you as you are honest writer....
Why the 23 koottamaippugal...did agreement with SLTJ as One-Word then spoiled it and they didn't include the SLTJ on their public report....?
I trust you can review and can bring the true publicly to identify who are the Game Players on Muslims..... Then we know how to shut the door to those 23 koottamaippugal

மார்க்கம் தெரியாதவன் , குடிகாரன் , தானும் தனது குடும்பமும் தன்னோடு ஒட்டியிருப்பவனும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற சுயநலவாதிகள், ஒட்டு மொத்த சமூகத்தை மறந்து தனது பிரதேசத்தை மட்டும் மைய்யத் படுத்தி வாக்கு வங்கிக்காக அரசியல் செய்பவன் - இவர்கள் எல்லோரையும் தூக்கி வீசி விட்டு , மார்க்கம் தெரிந்த , நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களிடமும் அக்கறை காட்டும் தலைமைத்துவத்தை நாம் உருவாக்க வேண்டும். இப்படியானவர்களை சமூகத்தில் இனம் காண வேண்டும்.
எமக்கான ஒரு நல்ல தலைமையை நாம் உருவாக்காமல் விட்டுச் சென்றால் , நான் மேலே சொன்ன சாக்கடைகள் எமது சமூகத்தை நாறடித்து விடுவார்கள்.

Razik is a NIB AGENT in Rajapakse regime.It was a lond held suspicion.They were very good with REtd DIG Anura senanayake.They have been taken for a ride with or without knowledge.Poor grass root SLTJ chaps are not aware of it.It is high time they should be exposed to the society.Take it up Masihuddin!

Post a Comment