Header Ads



'முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தம்' கூட்டுப் பொறுப்புடன் செயற்பட வேண்டுகோள் - SLMDI UK

இலங்கையின் சகல தரப்பு மக்களின் பேசு பொருளாக மாறியிருக்கின்ற முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தம் தொடர்பில் இலங்கை முஸ்லிம்கள் கரிசனையோடு கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் தேவையாக மாறியுள்ளது.

முஸ்லிம் தனியார் சட்டத்திருத்தம் வேண்டி நிற்கின்ற மிக முக்கியமான அம்சம் என்னவெனில், இலங்கையில் காணப்படுகின்ற பழைமை வாய்ந்த முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டம் அனைவருக்கும் சமத்துவத்தை வழங்கக் கூடிய வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டுமென கூறுகின்ற  இலங்கை பாராளுமன்றத்தின் முடிவை, இலங்கை முஸ்லிம் சமூகத்தின் பொறுப்பு வாய்ந்த சமூக நிறுவனங்கள் முஸ்லிம் அரசியல் தலைமைகள் சமுக அக்கறையோடு அணுகி அதற்கான மாற்றுத்திட்டத்தை கூட்டுப்பொறுப்புடன் முன்மொழிய வேண்டும் என்பதை புலம்பெயர்ந்து வாழும் இலங்கை முஸ்லிம்களின் அமைப்பான SLMDI UK மிகத் தாழ்மையோடு வழியுறுத்துகின்றது.

கடந்த காலங்களில் இச்சட்டத்தில் திருத்தம் செய்வதற்கான பல்வேறு சந்தர்ப்பங்கள் கிடைத்தும் அது நமது சமுகத்தின் கவனயீனத்தால் தவறவிடப்பட்டது என்பதே கசப்பான உண்மையாகும்.இப்பொழுது நம் முன் மீண்டும் ஒரு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

நமது சமூகத்தின் உள்ளக முரண்பாடுகளையும் இயக்க வேறுபாடுகளையும் சற்றே தள்ளி வைத்துவிட்டு முஸ்லிம் தனியார் சட்டத்திருத்த விடயத்தில் இலங்கை முஸ்லிம் சமுகம் தமது இலக்கை வெற்றிகரமாக அடைய வேண்டும். இதில் முஸ்லிம் அரசியல் தலைமைகளின் பங்கு மிக முக்கியமானதாகும். 

ஏற்கனவே அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுடன் இணைந்து இன்னும் முக்கிய சமுக நிறுவனங்கள் மற்றும் சில தஃவா அமைப்புக்கள் மேற்படி விடயத்தில் ஒன்றிணைந்து இயங்க ஆரம்பித்துள்ளன.

முஸ்லிம் சமூகத்தின் துறைசார்ந்த கல்வியிலாளர்கள் குழுவும் இதற்காக அமைக்கப்பட்டுள்ளது. மேற்படி குழுவினால் முன்மொழியப்படும் பரிந்துரைகளை அரசாங்கத்திடமும் பாராளுமன்றத்திலும் கொண்டு போய்ச் சேர்த்து அதற்கான சட்ட அங்கீகாரத்தை பெற்று கொடுக்க வேண்டியது முஸ்லிம் அரசியல்வாதிகளுக்குரிய தார்மீக கடமையாக மாறியுள்ளது.

எம்மை பொறுத்த வரையில் இவ்விடயத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் மற்றும் முற்போக்கு முஸ்லிம் அரசியல் தலைமைகள் காட்டும் அக்கறை மிக குறைவாக உள்ளதாகவே நாம் கருதுகின்றோம்.

அந்தவகையில் முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தம் தொடர்பான வாதங்கள் வலுப் பெற்றிருக்கும் இந்த நேரத்தில் நீண்ட காலமாக காத்திருந்த இந்த சந்தர்ப்பத்தை சமூகம் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இலங்கை முஸ்லிம் அரசியல் தலைமைகள், மார்க்க அறிஞர்கள் மற்றும் புத்திஜீவிகள் கூட்டுப்பொறுப்புடன் செயற்பட வேண்டும் என்று SLMDI UK அன்பாய் கேட்டுக் கொள்கின்றது.

  நன்றி.  
இலங்கை புலம்பெயர்ந்தோர் அமைப்பு (SLMDI UK), பிரித்தானியா

2 comments:

  1. My beloved SLMDI UK,

    Tamil diasporas are taking much interest in the matters of Tamils in Sri Lanka. They submit devolution package to the government and give pressure for solution to Tamils.

    I am requesting you brothers to do such things for Muslims.Your pressure in this regard will have an international value. Please consider my humble suggestion.

    ReplyDelete
  2. Enter your comment...Ask them to Sri Lanka first

    ReplyDelete

Powered by Blogger.