Header Ads



அரசாங்கத்தின் அகோர முகம் வெளியானது - GL


நல்லாட்சி அரசாங்கத்தால் தமது உரிமைகளுக்காக குரல் கொடுத்த விசேட தேவையுடைய இராணுவ வீரர்களின் மீது அடக்குமுறைகளை பிரயோகித்ததன் மூலம் இவ்வரசாங்கத்தின் அகோர முகம் வெளிப்பட்டுள்ளதாக கூட்டு எதிரணியின் உறுப்பினர் ஜி.எல்.பீரிஸ் குற்றம் சுமத்தினார்.

மங்களாராம விகாரையில் இன்று -08- ற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மக்களின் அத்தியாவசிய தேவைகளையும் அவர்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுப்பதிலும் பாரிய அநீதியை அரசாங்கம் இழைத்து வருகின்றது. தங்களது உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக அன்றாடம் வீதியில் இறங்கி போராடும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றனர்.
அந்தவகையில் கடந்த காலங்களில்  பல்கலைகழக மாணவர்கள் வைத்தியர்கள் தோட்டத்தொழிலாளர்கள் ஓய்வு பெற்ற அதிகாரிகள் என பல தரப்பினரும் அன்றாடம் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டனர்.

தங்களது தேவைகள் மற்றும் அவர்களது நிலைமை மற்றும் எதிர்ப்பார்ப்புகளை அரசாங்கத்திற்கு தெரியப்படுத்துவதற்காகவே இவ்வாறான போராட்டங்களை மக்கள் மேற்கொள்கின்றனர். 

இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பில் மிகப்பெரிய பங்கெடுத்த முன்னாள் இராணுவ வீரர்கள் மற்றும் விசேட தேவையுடையோர் என்பதையும் பாராமல் அவர்களது உரிமைகளுகளுக்காக போராடியவரகள் மீது நீர்த்தாரை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமையானது மிகவும் கண்டிக்கத்தக்கது.

இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் நல்லிணக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும். இவ் மிலேச்சத்தணமான முடிவுகளை எடுத்ததன் மூலம் நல்லாட்சி அரசாங்கத்தின் அகோர முகம் வெளிப்பட்டுள்ளது. எனினும் அவர்களுக்கான நீதி கிடைக்கும் வரையில் தொடர்ந்தும் இவ்விடயம் தொடர்பில் நாங்கள் அவதானம் செழுத்துவோம் என்றார்.

1 comment:

  1. பெரியவரே! உங்களுடைய ஆட்சி காலத்தில் சுத்தமான நீர் வேண்டி ஆர்ப்பாட்டம் செய்த அப்பாவி மக்களைச் சுட்டுக் கொலைசெய்த போது அப்பாவி தொழிலாளர்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளை வேண்டி கட்டுநாயக்காவில் ஆர்ப்பாட்டம் செய்த போது சுட்டுக் கொலை செய்த அரசாங்கத்தில் நீங்கள் வாய்மூடி,கைகட்டி உங்கள் சனாதிபதிக்கு தலைகுனிந்து வணங்கி வழிபட்டீர்களே அப்போது உங்கள் வாய் எங்கே இருந்தது.இப்போது மக்களுக்கு பேச்சுச் சுதந்திரம் தாராளமாக இருக்கின்றது என்ற காரணத்துக்காக பேசித்தள்ளுகின்றீர்களா? பேச முன்பு உங்கள் தலைவரின் காலத்தை ஒருதடவை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். உங்கள் பேச்சைக் கேட்கும் எல்லா சனங்களும் முட்டாள்கள் அல்ல என்பதையும் கொஞ்சம் ஞாபகப்படுத்திக் கொள்ளலாமே.

    ReplyDelete

Powered by Blogger.