Header Ads



பேட்டரி பிரச்னையில் சிக்கியது ஆப்பிள்

திடீரென்று ஸ்விட்ச் ஆஃப் ஆகும் ஐஃபோன் 6s ஃபோன்களின் பேட்டரியை ஆப்பிள் நிறுவனம்,  இலவசமாக மாற்றித்தர உள்ளது. 2015ல் தயாரிக்கப்பட்ட சில ஐஃபோன் 6s மொபைல்களுக்கு இந்த சலுகை என்று கூறப்படுகிறது.

ஐஃபோன் 6s ஃபோன்களில் சிலவற்றைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் போதே திடீரென்று ஸ்விட்ச் ஆஃப் ஆகி விடுகிறதாம். பிறகு சார்ஜ் செய்யப்படும் போது தான் பயன்படுத்த முடிகிறதாம். இந்த பிரச்னை சில 6s வகை ஃபோன்களில் இருக்கலாம் என்று ஒப்புக்கொண்ட ஆப்பிள் நிறுவனம், அந்த ஃபோன்களின் பேட்டரியை இலவசமாக மாற்றித்தர அழைப்பு விடுத்துள்ளது.

இந்த விஷயம் பற்றி ஆப்பிள் நிறுவனம்,'2015ன் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் தயாரிக்கப்பட்ட சில ஃபோன்களில் மட்டும் தான் இந்த கோளாறு உள்ளது. அந்த ஃபோன்களுக்கு பேட்டரி இலவசமாக மாற்றிக் கொடுக்கப்படும்.' என்று கூறி இருக்கிறது. 

No comments

Powered by Blogger.