Header Ads



முஸ்லிம் பிரதேசங்களில் கிறீஸ் மனிதனா..? பீதியில் மக்கள்..!

-V.T.Sahadevarajah-

அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பொலிஸ்பிரிவிற்கு உட்பட்ட நிந்தவூர் கிராமத்தில் அண்மைக்காலமாக இரவுவேளைகளில் ஒரு வித பீதி நிலவுகின்றது.

இரவுவேளைகளில் வீடுகளுக்குள் புகும் இனந்தெரியாத கோஷ்டியினரின் செயற்பாடே இவ்வச்சத்திற்கு காரணமெனக்கூறப்படுகின்றது.

ஒரு சில இடங்களைத்தவிர, மற்றைய இடங்களில் ஒன்றையுமே திருடாமல் பயத்தை ஏற்படுத்திச்சென்றுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இதற்கு ஆவாக்குழு காரணமா அல்லது கிறீஸ் மனிதன் போன்ற மற்றுமொரு குழுவினர் காரணமா? என பொதுமக்கள் சந்தேகிக்கின்றனர்.

ஒருசில வீடுகளில் தங்கச்சங்கிலி, பணம் போன்றவை திருடப்பட்டுள்ளதாகத் தெரியவருகின்றது.

நேற்றிரவு நிந்தவூர் 11ஆம் பிரிவிலுள்ள றிஸ்வான் என்பவரின் வீட்டின் இரவு 8மணியளவில் கூரைமேல் ஏறி பிளாஸ்ரிக் சீலையிலான அண்டர் சீற்றை வாளால் துளையிட்ட நபரை அவ்வீட்டுப் பெண்மணிகண்டு ஓலமிட, குறித்த நபர் தப்பிஓடியுள்ளார். மழைநேரமாகையால் மக்கள் யாரும் வெளியேவரவில்லை.

அதே பிரிவில் றிசாட் என்பவரின் வீட்டிலுள்ள யன்னலை நள்ளிரவு 11மணியளவில் அலவாங்கிட்டு பெயர்த்தெடுத்து உள்நுழைந்துள்ளனர். அங்கு வீட்டுக்காரர் விழித்தெழ அவர்கள் தப்பி ஓடியுள்ளனர்.

பள்ளிவாசல்களில் இதுதொடர்பில் அறிவித்து வீதிகளிலும், வீடுகளிலும் மின்விளக்கை எரியவிடுமாறு கோரியுள்ளதுடன் பொலிசாரிடமும் குறித்த விடயம் தொடர்பில் கூறியுள்ளனர்.

எனினும் இரவு நேர இச்செயற்பாடு தொடர்ந்து வருகின்றமையால் மக்கள் அச்சத்திலும் பீதியிலும் உள்ளனர்.

இதேவேளை நிந்தவூர் கடலோரத்தில் நடமாடும் பொலிஸ் நிலையமொன்று நேற்று நிறுவப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.

1 comment:

  1. நிம்மதி நிரந்தரமற்ற ஒண்றாகவே உள்ளது...

    ReplyDelete

Powered by Blogger.