November 10, 2016

"ஜம்மியத்துல் உலமா, அரசாங்கத்திற்கு கூறிக்கொள்ள விரும்புவது.."

இலங்கையில் பல நூற்றாண்டுகளாக முஸ்லிம்களால் பின்பற்றப்பட்டு, பேணப்பட்டவந்த சட்டமாக முஸ்லிம் தனியார் சட்டம் காணப்படுகின்றது. அன்றுதொட்டு இன்றுவரை நடைமுறைப்படுத்தப்பட்டுவந்த இந்த சட்டத்தைத் தொடர்ந்தும் பேணிப்பாதுகாப்பது நம் ஒவ்வொருவரினதும் கடமையாகும். 

சர்வதேச அழுத்தம் காரணமாக அல்லது முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் தீய சக்திகளின் தூண்டுதல்கள் காரணமாக முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படுவதை  அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மிக வன்மையாகக் கண்டிக்கின்றது.

முஸ்லிம் தனியார் சட்டத்தில் ஷரீஆவிற்கு முரணில்லாத வகையில் தற்காலத் தேவைகளுக்கு ஏற்ப சில மாற்றங்கள் செய்யப்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக் கிடையாது. இதன் ஒரு கட்டமாகவே 2009 ஆம் ஆண்டு முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசர் ஸலீம் மர்ஸுப் அவர்களின் தலைமையில் முஸ்லிம் தனியார் சட்டத்திற்கான திருத்தங்களை முன்மொழிவதற்கான ஒரு உப குழு நியமிக்கப்பட்டு, அதன் இறுதி அறிக்;கை தற்போது வெளியிடப்படவுள்ளது. இந்நிலையில் சில சர்வதேச அழுத்தங்கள் காரணமாக முஸ்லிம் தனியார் சட்ட திருத்தத்திற்கான புதியதொரு குழு நியமிக்கப்படுவது எவ்வகையிலும் பொருத்தமானதாக அமையாது என்பதை அரசாங்கத்திற்கு மிகவும் தெளிவாகக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். 

முஸ்லிம் தனியார் சட்டத் திருத்தங்கள் இஸ்லாமிய போதனைகளுக்கு முரணாக மேற்கொள்ளப்படாமலிருக்க உலமாக்கள், துறைசார்ந்தவர்கள் மற்றும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் விழிப்புடன் செயற்படவேண்டும். இவ்விடயத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் உரிய தரப்பினருடன் இணைந்து இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றது.

இஸ்லாம் சமூக நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வை வலியுறுத்தும் மார்க்கமாகும். தீமையைச் சுட்டிக் காட்டும் போது மென்மையை கடைபிடிக்குமாறு இஸ்லாம் எமக்குப் போதிக்கின்றது. முஸ்லிம் சமூகம் தமது உரிமைகளைப் பாதுகாத்துக்கொள்ள முன்னெடுக்கும் செயற்பாடுகள் இஸ்லாமிய வரையறைகளுக்கு உட்பட்டதாகவும் நிதானமானதாகவும் அமைய வேண்டும். 

இஸ்லாம் எமக்குக் கற்றுத்தந்துள்ள பேச்சு ஒழுங்குகளையும், உயரிய பண்பாடுகளையும் நிலைநிறுத்தாது நாம் செயற்பட்டால் அல்லது சமூக வலைத்தளங்களில் எழுதினால் இஸ்லாம் பற்றிய பிழையான புரிதலை மாற்றுமத சகோதரர்களிடையே ஏற்படுத்திய குற்றத்திற்கு நாம் ஆளாகிவிடுவோம். இவ்வாறான பிழையான நடவடிக்கைகளை ஜம்இய்யா வன்மையாகக் கண்டிக்கின்றது. மேலும் இவை இஸ்லாத்திற்கு எதிராக செயற்படும் கடும்போக்குவாதிகளுடைய தீய திட்டங்களை செயற்படுத்துவதற்கு வழியமைத்துக்கொடுப்பதாகவே அமையும் என்பதையும் ஜம்இய்யா கூறிக்கொள்ள விரும்புகின்றது.

அதேபோன்று ஒருசிலரின் இவ்வாறான தீவிர செயற்பாடுகள் மொத்த முஸ்லிம் சமூகத்தின் நடவடிக்கையாக ஒருபோதும் பார்க்கப்படக்கூடாது என்பதை ஜம்இய்யா வலியுறுத்தி கூறிக்கொள்கினறது. அத்துடன் பல்லாண்டு காலமாக இந்நாட்டில் முஸ்லிம்களுக்கும் ஏனைய சமூகங்களுக்கும் இடையில் காணப்பட்டு வரும் ஒற்றுமையும் சகவாழ்வும் தொடர்ந்தும் பேணப்பட அரசாங்கம் உட்பட சகல தரப்பினரும் முனைப்புடன் செயற்படவேண்டும் என ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.

அஷ்-ஷைக் எம்.எம்.ஏ முபாறக்     
பொதுச் செயலாளர்
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

17 கருத்துரைகள்:

At least now ACJU opened mouth...!!!!!

ACJU NOT LIKE US.ACJU NOT SODA BOTTLE .They are well organaisation.pls remind you brother

Alhamdullilah. ACJU has proved that it can voice on behalf of our Muslims living in Sri Lanka but they are doing their work at low profile because of the unacceptable behavior of the SLTJ. SLTJ's approaches are creating problems and split the Muslim Ummas into many groups and thereby unnecessarily pave the way to form a strong platform for shouting against us by BBS and others. Prophet Mohammad (PBUH) has left lot of teachings with regard to tolerance for our betterment and the SLTJ totally ignoring all these teachings and put the Muslim Ummas in to trouble.

With all these constraints, the ACJU still trying to unite all Muslims and to bring all under one umbrella and therefore we all will pray the Almighty Allah for them to get succeeded with their effort

Alhamdullilah. ACJU has proved that it can voice on behalf of our Muslims living in Sri Lanka but they are doing their work at low profile because of the unacceptable behavior of the SLTJ. SLTJ's approaches are creating problems and split the Muslim Ummas into many groups and thereby unnecessarily pave the way to form a strong platform for shouting against us by BBS and others. Prophet Mohammad (PBUH) has left lot of teachings with regard to tolerance for our betterment and the SLTJ totally ignoring all these teachings and put the Muslim Ummas in to trouble.

With all these constraints, the ACJU still trying to unite all Muslims and to bring all under one umbrella and therefore we all will pray the Almighty Allah for them to get succeeded with their effort

அதுமாதுரியான ரோஷமுள்ளவர்களாக நாம் உம்மை பார்க்கவில்லை! காவிகள் அல்லாஹ்வையோ ரஸூலுல்லாவையோ இகழ்ந்த போதிலும் திரக்க மட்டுமே வாயை!

It is give a lit bit relieve us, as ACJU come forward and address this issue. we make our dua for the ACJU to give the strength and the intellect to handle this issue.

ohh Just now workup, No need to Brush Go head...... ACJU

Alhamdulillah.. அல்லாஹ் போதுமானவன்....

அல்லாஹ் போதுமானவன்

எந்த விஷயத்தில் சட்டத்தில் மற்றம் செய்ய வேண்டும் என்று தெளிவாக சொன்னால் தானே மக்களுக்கு விளங்கும் ?

I don't find any difference between BBC and SLTJ

முஸ்லீம்கள் என்ற போர்வையில் இஸ்லாதிற்கும் முஸ்லீம்களுக்கும் எதிராக செயல்படும் இந்த sltjஉருப்பினர்களை கைது செய்து சிறையிலடைக்க வேண்டும்

Bullbulli- நியாயமான கேள்வி! பதில்???

Jamaldeen: நீங்கள் கூறுவது பற்றி சிந்திப்பது காலத்தின் தேவையாக உள்ளது.

Lareef Abdul Majeed- BBS N SLTJ sre in the same track but with different slogans. BBS wants to destroy SLTJ wants to save the Islam. Bth are impossible tasks as Islam is Protected by Allah!

அட அட என்ன ஐடியா, நபிகளார் போதித்தபடி இவர் சொல்கிறாரே! நபிகளார் சக முஸ்லிமை கூண்டில் அடை என்றுதானே போதித்தார்கள்? தஃலீம் கிதாப், புர்தா ஷரீப்களில் அப்படியா வந்துள்ளது?
தவ்ஹீத் ஜமாதில் பல குறைகள் இருந்தாலும் அவர்கள் கப்று வணங்கிளையோ , ஏமாற்றுப்பேர்வளிகளான கந்திரி கந்தம் ஓதி அல்லாஹ்வுக்கும் ரஸூலிக்கும் மாற்றம் செய்பவர்களை பொலிஸ் கைது செய்து சிறையில் அடையுங்கள் என்று இஸ்லாதிறகு புறம்பாக கூறியிருக்கமாட்டார்கள்.
இதிலிருந்தே தெரிகிறது. உங்கள் பதிவு வெறும் குரோதமனப்பாண்மையை அடிப்படையாக கொண்டு பதிவிடப்பட்டது என்று.

Post a Comment