Header Ads



யா ரப்பே..! நீ கொடுத்தால், யார் தடுக்க முடியும்..?

எனது வாழ்நாளில் நான் கண்ட ( பலரையும் வியப்பில் ஆழ்த்திய ) மிகப்பெரும் அள்ளாஹ்வின் உதவியிற்கு இன்று ஒரு வருடம் பூர்த்தியாகின்றது. ஆம் குறித்த தினம் நான் கண்ட அவ் உதவியை அன்று (02/11/2015) அன்று WhatsApp மற்றும் FB  இன் ஊடாக  நான் குறிப்பிட்ட  நண்பர்கள் பலருடன்  பகிர்ந்திருந்ததுடன் பல நூறு பேரின் பெறுமதிமிக்க துஆக்களையும் பெற்றிருந்தேன். ஆம் இன்று நான் எனது FB  கணக்கை ஐ திறந்த போது இன்றுடன் ஒருவருடம் கழிந்து விட்ட அந்நிகழ்வு பற்றி FB Team இனால் எனக்கு ஞாபக படுத்தப் பட்டிருப்பதை ( மீள பதிவு செய்யப் பட்டிருந்ததை) கண்ணுற்றேன்.                                     

 சரியாக  ஒரு வருடத்திற்கு முன்பு என்னால் பதிவிடப் பட்டிருந்த அள்ளாஹ்வின் அம் மாபெரும் உதவியை மீண்டும் ஒரு முறை மேலும் சில முக்கிய குறிப்புக்களுடன்  நண்பர்களுக்கிடையில்  பகிர்ந்து கொள்வதில் மன நிறைவு அடைகின்றேன். குறித்த எனது பதிவை FB இல் கண்ணுற்ற UK இல் எம்முடன் வசிக்கும் Milton Keynes நகரை சேர்ந்த சகோதரர், நண்பர் அப்துர் ரzஸ்ஸாக்  அவர்கள் Madawala News, Jafna Muslim உள்ளிட்ட சமூக வலைத்தளங்களினூடாக அத்தினம் பதிவு செய்திருந்ததால் அந் நாற்களில் அது ஒரு பிரபல்யமான செய்தியாகவே பரவி இருந்தது. ஆம் இது தான் அவ் உதவியும் கட்டுரையும்  👇👇                                            

வார்தைகளால் விவரிக்க முடியாத, எழுத்துக்களால் வர்ணிக்க முடியாத அள்ளாஹ்வின் உதவி இதோ. படித்து விட்டு கண்டிப்பாக எனக்காக அனைவரும் துஆ செய்வீர்கள் என்ற அவாவுடன் ................                   

ஒரு மனிதனுடன்  அள்ளாஹ் இறக்கப்பட்டு,  அவனுக்கு உதவி செய்ய நாடுகின்ற போது அவனது வாழ்வில் எப்டியெல்லாம் அள்ளாஹ்வின் அருளும் உதவியும் வந்து செல்கின்றன என்பதற்கு எனது வாழ்க்கையின் இன்றைய தினம் (02/11/2015) மிகப் பொருத்தமான தருணம் என்றால் மிகையாகாது. ஆம் நான் இங்கே (UK) வந்து ஐந்து வருடங்கள் கழிந்துள்ள நிலையில் அதில் இறுதி நான்கு வருடங்களும் சிறுநீரக ( Kidney ) வருத்தத்துடன் அவதிப்பட்டு சுமார் மூன்றரை  வருடங்களாக இரத்த சுத்திகரிப்பு ( Dialysis ) செய்து வருவதை சொந்தக்காரர்கள், நன்பர்கள் அனைவரும் அறிவீர்கள்.                            

இந்த நாட்டில் மிகச்சிறந்த சிகிச்சைகள் கிடைக்கின்ற போதும் எமது அவசரத்திற்கு ( இலங்கையில் போன்று ) பணம் கொடுத்து ஒருவரிடமிருந்து Kidney ஐ பெற்று,  Kidney Transplant பண்ண முடியாது. Transplant waiting List இற்கூடாக பொருத்தமான  Kidney ஒன்று கிடைக்கும் வரை Dialysis பண்ணிக்கொண்டே காலம் கடத்தியாக வேண்டும். ஆம் அவ்வாறுதான் நானும். மூன்னறரை வருட காலத்திற்கும் அதிகமாக  கிழமைக்கு மூன்றுமுறை என்ற அடிப்டையில் 570 இற்கும் அதிகமான Dialysis களை செய்து,  கலைத்துப் போய், பொருத்தமான Kidney ஒன்று இதுவரை கிடைக்காததால் அடுத்தவாரம் அளவில் இலங்கையில் நிரந்தரமாக குடியேறி,  இம்மாத இறுதியில் இலங்கையில் Kidney Transplant பண்ணுவதற்கான சகல ஆயத்தங்கையும் பூர்த்தி செய்து விட்டு,  இன்னும்  சில தினங்களில் இலங்கை செல்ல  நாள்பார்துக் கொண்டிருக்கும் தருணம் இது.                                 

இங்கே ( UK இல் ) பல இடங்களிலும் எனக்காக சென்ற மாதம் (ஒக்டோபர்  2015) இல்  பிறியாவிடைக் கூட்டங்கள் நடாத்தப் பட்டு,  முஸாபஹா, முஆனக்கா என அனைத்தும் நடந்தாகி விட்டது. ஆம் இலங்கை செல்ல  நாள் எண்ணிக் கொண்டிருந்த எனக்கு இன்று தான் அந்த அருளாலன் அள்ளாஹ்விடமிருந்து பெரும் பேரதிர்ச்சி காத்திருந்தது. அள்ளாஹ்வின் உதவியும் கருணையும் இன்று  என்னைச் சூழ்ந்து கொண்டது.                                                               

ஆம் சகோதரர்களே ! இன்று காலை 09 மணியலவில்  கிழக்கு லண்டனில் அமையப் பெற்றுள்ள Royal London Hospital இல் இருந்து  எனக்கு ஒரு அவசர அழைப்பு வந்தது. என்னவாக இருக்கும் ? ஆம் Waiting List இனூடாக  Kidneyக்காக காத்திருந்த எனக்கு 100 விகிதம்  பொருந்தக் கூடிய Kidney ஒன்று கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் உடனடியாக என்னை Hospital இற்கு வரும்படியும் வேண்டப்பட்டது. ஸுப்ஹானள்ளாஹ். என்னால் நம்ப முடியவில்லை. ஒரு பக்கம் பெரும் சந்தோஷம், இன்னொரு பக்கம் ஒரு பெரும் அதிர்ச்சி வைத்தியம் போல் இருந்தது. ஏனெனில் டயலிசீஸ் ( இரத்த சுத்திகரிப்பு ) செய்து கொண்டு வருடக்கணக்காக சிறுநீரக செயலிழப்பு வருத்தத்தால் அவதிப் பட்டுக் கொண்டிருக்கும் ஒருவருக்கு தான் ஒரு புதிய சிறுநீரகம் (Kidney) கிடைப்பதன் பெறுமதி என்னவென்று புரியும். அதிலும் இறுதி நேரத்தில் இன்று  எனக்கு அள்ளாஹ் அருளியுள்ள Kidney இன் கதை மிகவும் சுவாரஸ்யமானது. 

இன் நாட்டில் 14,000 சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள்  புதிய Kidney ஒன்றை பெற்றுக் கொள்வதற்காக 06 வருடங்களிற்கும் மேலாக Dialysis செய்து  கொண்டு ஏங்கிக் கொண்டிருக்கையில் மூன்றரை வருடங்கள் மட்டுமே  டயலிசீஸ் ( இரத்த சுத்திகரிப்பு ) செய்து கொண்டிருந்த எனக்கு, நான்  இலங்கை செல்ல சில தினங்களே எஞ்சி இருக்கும் நிலையில், 450 மைல்களுக்கு அப்பால் (Glasgow நகரில்) வசித்து வந்த, எனக்கு 100 % பெருந்தக்க கூடிய ஒரு மனிதரின் உயிர் கைப்பற்றப் பட்டு, எனக்காக  அவரது Kidney Air Ambulance (Helicopter) ஊடக லண்டன் நகருக்கு தருவிக்கப் பட்டு, நான் தற்போது சத்திர சிகிச்சைக்காக தயார் படுத்தப் பட்டுள்ளதை எப்படி வார்த்தைகளால், எழுத்துக்களால் வர்ணிப்பது ? நம்ப முடிகின்றதா சகோதரர்களே ? இது பலரின் துஆக்களால், எனது பெற்றோர், குடும்பம் செய்த நலவுகளால் அள்ளாஹ் தனது அன்புக்கு கரத்தை என் மீது நீட்டியதன் வெளிப்பாடாகும். இதோ வைத்திய சாலை வந்து சகல பரிசோதனைகளையும் பூர்த்தி செய்து விட்டேன்  ( இன்னும் 30 அல்லது 45 நிமிடங்களுக்குள் ) இன்ஷா அள்ளாஹ் எனக்கு Kidney Transplant நடை பெறவுள்ளது.                                                     

இந் நாட்டை விட்டும் வெளியேற நான் நாள் எண்ணிக் கொண்டிருக்கும்    கடைசி தருணத்தில் நான் அடைய பெற்ற இந்த அள்ளாஹ்வின் மாபெரும் உதவியானது இலங்கை சென்று நான் மேற்கொள்ளவிருந்த Transplant உடன் ஒப்பிடும் போது பண்மடங்கு மேலானதும் தரமானதும் இலவசமானதுமாகும். இது வரை எனக்காக இந் நாட்டு அரசால் இரண்டு  லட்சத்தி பத்தாயிரம்  ஸ்ட்ரெலின்ங் பவுன்கள் ( இலங்கை நாணயத்தில் சுமார் 04 கோடி 40 லட்சம் ரூபாய்கள் ) இலவசமாக செலவிடப் பட்டுள்ள நிலையில் தற்போது நடைபெறவுள்ள Transplant உம் அதற்கு பின்னரான எனது மருத்துவ  நிபுணர்களுடனான Appointments மற்றும் மருந்து செலவுகள் அனைத்துக்கும் பெரும் செலவுகள் ஏற்படலாம் என்பதுடன் அவை இன்ஷா அள்ளாஹ் உயர்ந்த தரத்திலும் இலவசமாகவும்  கிடைக்கவுள்ளன போன்ற அனைத்தையும் சிந்திக்கையில் இவ்வளவையும் எனக்காக ஏற்பாடு செய்த  ரப்பிற்கு நான் எவ்வாறு நன்றி சொல்லி முடிப்பேன் என்று புரிய வில்லை.

  யா ரப்பே !  நீ கொடுத்தால் யார் தடுக்க முடியும் ?           

எதிர்பாராத விதமாக ஏற்பாடாகி, இன்னும் சொற்ப நேரத்தில் எனக்கு நடைபெறவுள்ள Transplant பற்றிய சந்தோஷமான இச்செய்தி பற்றி  உங்களுடன் நான் பகிர்ந்து கொள்வது உங்கள் அனைவருடைய துஆவையும் நான் பெற்றுக் கொள்வதற்கும் அள்ளாஹ்வின் உதவி ஒரு மனிதனை எவ்வாறெல்லாம் வந்தடையும் என்பதை தெரிவித்துக் கொள்வதற்காகவுமாகும். இன்ஷா அள்ளாஹ் Transplant இன் பின் நான் நாளை காலை கண்விழித்து சாதாரண நிலைக்கு திரும்பும் போது எனக்காக உங்கள் அனைவரின் துஆக்களும் வந்து குவிந்திருக்கும் என ஆதரவு வைக்கின்றேன்.                                          

அன்புடன்                                                                                                                                                                                                   Ash Sheikh Shafeek bin Zubair.                               
முற்றும்.
02/11/2015.
                                                                         

ஆம் நன்பர்களே ! எனது Transplant இற்கும் எனது இக் கட்டுரைக்கும் இன்றுடன் ஒரு வருடம் பூர்த்தியாகி விட்டது. அள்ளாஹ்வின் உதவியாலும் உங்கள் அனைவரின் துஆக்களாலும் எனது புதிய சிறுநீரகம் ( Kidney ) நன்றாக செயற்பட்டு வருகின்றது. அல்ஹம்து லில்லாஹ். இலங்கை வந்து சேரலாம் என மீண்டும் காத்திருக்கும் நான் டாக்டர்களின் சில முக்கிய அறிவுரைகளால் சற்று தாமதித்துக் கொண்டிருக்கின்றேன். மிக விரைவான இந்த வாழ்க்கை சக்கரத்தில் Transplant இற்கு பின்னர் வேகமாக என்னை கடந்து சென்றுள்ள  கடந்த ஒரு வருட காலத்தில் பல நிகழ்வுகள், சந்தோஷங்கள், கவலைகள், எனது உடல்நிலை பற்றி கவலை கொண்டிருந்த சிலரது பிரிவுகள், இழப்புக்கள் என நான் கண்டவை ஏறாலம்.         

இவ் ஒரு வருட காலத்தில்  சற்று அதிகம் ஓய்வாக இருக்க வேண்டி ஏற்பட்டதால் சமூகத்திற்காக சொல்லிக் கொள்ளும் அளவு பெரிதாக என்னால் எதையும் செய்ய முடியாது போனது சற்று வருத்தம் அளிக்கின்றது. நாற்கக், மணித்தியாலங்கள், நிமிடங்கள் யாருக்காகவும் காத்திருக்காது நன்பர்களே !  பத்து, இருபது வருடங்களை கடந்திருப்போம். எனினும் அவற்றை சற்று மனத்திரையில்  மீட்டி பார்க்கும் போது வெறும் ஒரு கணவு போன்று மின்னல் வேகத்தில் எமது நாற்கள் கறைந்திருக்கும். வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுவோம். ஆம் எனது வாழ்நாளில் நான் தற்போது  40 வருடங்களை கடந்துள்ளேன். நபிமார்களை அள்ளாஹ்  40 வருடங்கள் பூர்த்தியாகும் போது தான் ( பெரும்பாலும் ) நுபுவத்திற்கு ( நபித்துவத்திற்கு ) தெரிவு செய்துள்ளான் என்பதானது  40 வருடங்களை அடையும் ஒருவர் தன்னிடத்தில் மிகுந்த பக்குவத்தையும், அனுபவத்தையும்,  நுனுக்கத்தையும், முதிர்சியையும் கொண்டிருக்க வேண்டும் என்பதை மிக தெளிவாக எமக்கு கற்று தருகின்றது. எனினும் அவ்வாறான எவ்வித அனுபவமும், பக்குவமும், ஆளுமையும், முதிர்ச்சியும் ........ என்னிடம் இன்னும் வரவில்லையே என்பதை நினைக்கும் போது கடந்த எனது வாழ்நாற்களை நான் சரியாக   திட்டமிட வில்லையோ  என்ற கவலை எனது மனதை குடைந்தெடுக்கின்றது.                                           

நனபர்களே ! எனக்காக எனது குடும்பத்திற்காக மட்டும் உழைக்கின்றேன், வாழ்கின்றேன் என்றில்லாமல் சமூகத்திற்காகவும் உழைக்கின்ற சிறந்த ஒரு முஃமினாக உலகில் வாழ்ந்து மரணிக்க முயற்சிப்போம். ( எனது வாழ்நாளில் 20, 30, 40, 50 ..... வருடங்களை கழித்துள்ள நான் சமூகத்திற்காக, சமூக முன்னேற்றத்திற்காக எதை செய்திருக்கின்றேன் என ஒரு கனம் சிந்தித்து பார்ப்போம் ) தான் உண்டு, தனது குடும்பம் உண்டு என குறுகிய சிந்தனையுடன் வாழும் ஒரு சுயநலமி ஒரு போதும் ஒரு முஃமினாக இருக்க முடியாது. எமது வாழ்நாளிலும் எமது மறைவிற்கு பின்பும் எமக்காக அள்ளாஹ்விடம் பிரார்திக்கின்ற ஒரு சமூகத்தை உருவாக்கி விட்டு மெளத்தாகுவோம். எமது பிறப்பு வேண்டுமென்றால் ஒரு மிக சாதாரண நிகழ்வாக இருந்து விட்டு போகலாம் சகோதரர்களே!  எனினும் எமது இறப்பு  ஒரு சரித்திரமாக இருக்கும் அளவு சமூகத்திற்காக உழைத்து விட்டு செல்வோம். அள்ளாஹ் அருள் புரிவானாக.

அஷ் ஷெய்க் ஷபீக் பின் zஸுபைர்.  

2 comments:

  1. We are praying for you.Aameen

    ReplyDelete
  2. Jazakallah for sharing u r lovely experience. May Allah SWT make all of us and useful individual for our families, communities and the world at large. Now the time has come to forget our difference and contribute positively for the humanity. Unfortunately some of our Brs and Srs limit their helping hand only to Muslims. Unlike this we have to remember we all creations of Allah SWT and when helping others it has to be unconditional. By this way we can reach to non Muslims much effectively.

    ReplyDelete

Powered by Blogger.